வெ. து. சுவாமி
வெ. து. சுவாமி (V. D. Swami) பிறப்பு வேங்கடராம துரைசுவாமி; 1910 – 1993) என்பவர் இந்தியத் தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் ஆவார். இவர் சென்னையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையான சங்கரா நேத்ராலயாவின் நிறுவனர்களில் ஒருவராவார்.[1][2] இவர் தமிழகத் திரைப்பட நடிகர் அரவிந்த்சாமியின் தந்தை ஆவார்.
வெ. து. சுவாமி V. D. Swami | |
---|---|
பிறப்பு | வெங்கடராம துரை சுவாமி 1910 மெலட்டூர், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 1993 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 83)
தேசியம் | இந்தியர் |
பணி | தொழிலதிபர் பரோபகாரர் |
வாழ்க்கைத் துணை | வசந்தா |
பிள்ளைகள் | அரவிந்த்சாமி |
உறவினர்கள் | அதிரா சுவாமி (பேத்தி) ருத்ரா சுவாமி (பேத்தி) |
தொழில்
தொகுசுவாமி 1910இல் தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் பிறந்தார்.[3] இவர் வி. டி. சுவாமி & நிறுவனத்தினை எம்.வி.சுப்பிரமணியம் மற்றும் சன்மார் குழுமத்தின் டி. எஸ். நாராயணசாமி ஆகியோருடன் 1956ஆம் ஆண்டில் சென்னையில் நிறுவினார். வி.டி. சுவாமி நிறுவனம் எஃகு ஏற்றுமதி வணிகத்தில் முன்னோடியாக இருந்தது.[4] ஆசியாவின் முக்கிய மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களில் ஒருவராக இருந்தனர்.[5] திருச்சிராப்பள்ளியைத் தளமாகக் கொண்ட மூலதன இயந்திரங்கள் மற்றும் செயல்முறை இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனமான காவேரி பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தினை நிறுவினர்.[6]
மற்ற நடவடிக்கைகள்
தொகு1962ஆம் ஆண்டில், சுவாமி தனது சொந்த ஊரானமெலட்டூரில் நடைபெற்ற பாகவத மேள நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.[7] மெலட்டூருக்கு வெளியே கலையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டிய சுவாமி 1964இல் மெலட்டூர் பாகவத மேள நாத்தியா வித்திய சங்கத்தை நிறுவினார்.[7][8][9]
சங்கரா நேத்ராலயாவை சென்னையில் அமைக்க மருத்துவ பயிற்சியாளர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தை வற்புறுத்துவதில் சுவாமி முக்கிய பங்கு வகித்தார்.[1][2] இதன் ஊழியர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளையும் இவர் வடிவமைத்தார்.[1] சங்கரா நேத்ராலயா தனது பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இவரது நினைவாகக் கலையரங்கம் ஒன்றினை நாட்டிற்கு அர்ப்பணிப்பதன் மூலம் இவரது முயற்சிகளை அங்கீகரித்து வறுகிறது.[1][2]
இறப்பு
தொகுசுவாமி 1993இல் தனது 83 வயதில் தமிழ்நாட்டின் சென்னையில் காலமானார்.[2]
குடும்பம்
தொகுசுவாமி பரதநாட்டிய நடனக் கலைஞர் வசந்த சுவாமியின் கணவரும், தென்னிந்தியப் பிரபல நடிகர் அரவிந்த்சாமியின் தந்தையும் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "V. D. Swami's contributions to noble causes recalled". தி இந்து. 25 December 2010. http://www.thehindu.com/news/cities/Chennai/article979124.ece.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Sankara Nethralaya dedicates auditorium". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 2012-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120325081317/http://m.pressmart.com/Home.aspx?event=TNewInExpress&dt=26122010&page=004_049&mdl=.
- ↑ Sri Lakshmi Narasimha Jayanthi Bhagavata Mela Natya Nataka Sangam: golden jubilee celebrations, souvenir.
- ↑ "About us". V. D. Swami and Company.
- ↑ ASIA Major Wholesalers & Retailers.
- ↑ Kaveri Engineering Industries. Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
- ↑ 7.0 7.1 Terada, Yoshitaka (2008). Music and society in South Asia: perspectives from Japan. National Museum of Ethnology. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-4-901906-58-6.
- ↑ "About us". Bhagavata Mela Natya Vidya Sangam. Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
- ↑ "Resurgence of Bhagavata Mela in Melattur". MELATTUR SRI LAKSHMI NARASIMHA JAYANTI BHAGAVATA MELA NATYA NATAKA SANGAM. Archived from the original on 2020-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.