வேங்கன் பெரிய உடையாத் தேவர்

சிவகங்கைச் சீமையின் கடைசி மன்னர்

வேங்கன் பெரிய உடையாத் தேவர் (Vangam Periya Udaya Thevar) என்பவர் (ஆட்சிக் காலம்: கி.பி 1790 -1801) சிவகங்கைச் சீமையை ஆண்ட கடைசி மன்னர் ஆவார். இவர் வேலு நாச்சியாரின் மகளான வெள்ளச்சி நாச்சியாரின் கணவர் ஆவார். இவர் சிவகங்கைச் சீமையின் நிலக்கிழார்களில் ஒருவரான சக்கந்தி தேவரது மகனாவார்.[1] பெண் குழந்தை ஒன்றைப் பிரசவித்த ராணி வெள்ளச்சி நாச்சியார் தனது குழந்தையுடன் திடீரென மரணமுற்றார். இது ஒரு அரசியல் படுகொலை என மக்களால் கருதப்பட்டது. இந்நிலையில் பெரிய மருது சேர்வைக்காரர், தமது பெண்மக்களில் ஒருவரை மன்னருக்கு மணம் செய்து வைத்தார்.

இவர் ஆட்சியின்போது மருது சேர்வைகாரர்களின் அதிகாரமே மேலோங்கி இருந்தது. மருதிருவருக்கும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனதிக்கிடையிலான போரின் முடிவில் வேங்கன் பெரிய உடையாத் தேவர் 4.10.1801-ம் நாள் காளையார் கோவில் காடுகளில் கண்டுபிடித்து ஆங்கிலேயர்களால் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவரை ஆங்கிலேயர்கள் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தினர். அங்கேயே 19. 9. 1802 அன்று மன்னர் காலமானார்.

மேற்கோள்கள் தொகு