வெள்ளச்சி

சுத்ந்திர போராட்ட வீரர்கள் முத்துவடுகநாத தேவர் வேலுநாச்சியார் மகள்

வெள்ளச்சி நாச்சியார் கி.பி 1790 முதல் 1793 வரை சிவகங்கைச் சீமையை ஆண்ட இரண்டாவது அரசி ஆவார்.[1] இவர் முத்து வடுகநாதர் - வேலு நாச்சியார் அவர்களுக்கு 1770ல் மகளாக பிறந்தார் . வெள்ளச்சி நாச்சியார் வயிற்றில் இருக்கும் போது அவரது தந்தை ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு காளையார்கோவில் கோட்டையில் வீீர மரணம் அடைந்தார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இவரது தாயார் வேலு நாச்சியார் ஆங்கிலேய அரசிடமிருந்து மீட்ட சிவகங்கைப் பகுதியை ஆண்டு வந்தார்.[2]

வெள்ளச்சி நாச்சியார்
ஆட்சிகிபி 1790 - 1793[1]
பின்வந்தவர்வேங்கன் பெரிய உடையாத் தேவர்
அரச குலம்சேது மன்னர்
தந்தைமுத்து வடுகநாதர்
தாய்வேலு நாச்சியார்

ஆட்சி

1790 ஆம் ஆண்டு வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரை ராணியாக முடி சூட்டினார்

திருமணம்

அந்த ஆண்டே (1790) சிவகங்கைச் சீமையின் நிலக்கிழார்களில் ஒருவரான சக்கந்தி தேவரது மகன் வேங்கன் பெரிய உடையாத் தேவர் அவர்களுக்கு திருமணம் நடந்தது [3]

மரணம்

1791 ஆம் ஆண்டு வெள்ளச்சி நாச்சியார் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது 1793 ஆம் ஆண்டு வெள்ளச்சி நாச்சியார் மற்றும அவரது குழந்தை மர்மமாக இறந்தனர் .

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 K. R. Venkatarama Ayyar, Sri Brihadamba State Press, 1938, A Manual of the Pudukkóttai State, p.720
  2. "Memorial planned for Velu Nachiyar". The Hindu. 3 November 2012. http://www.thehindu.com/news/national/tamil-nadu/memorial-planned-for-velu-nachiyar/article4059116.ece. 
  3. எஸ். எம். கமால் (1997). "சீர்மிகு சிவகங்கைச் சீமை". நூல். பசும்பொன் மாவட்ட கலை, இலக்கிய வரலாற்று ஆய்வு மையம்,. p. 112. Retrieved 3 சூலை 2019.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளச்சி&oldid=3005461" இலிருந்து மீள்விக்கப்பட்டது