வேரா இங்கோரணி

வேரா இங்கோரணி (Vera Hingorani) ஓர் இந்திய மகளிர் மருத்துவ நிபுணர், மகப்பேறு மருத்துவர், மருத்துவ எழுத்தாளர் மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மகளிர் மற்றும் மகப்பேறியல் துறை முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆவார். இவர் முன்னாள் கெளரவ மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் மகப்பேறியல் நிபுணர் ஆவார். [1] இந்திய அரசு 1984 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமை விருதான பத்மசிறீ வழங்கி இவரை கௌரவித்தது.[2]

சுயசரிதை

தொகு

வேரா ஹிங்கோரணி 23 டிசம்பர் 1924 அன்று இந்தியாவின் புபக்கில் டெக்லாண்ட் ஹாட்சந்த் மற்றும் லீலாவதி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார் மற்றும் 1947 இல் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.[சான்று தேவை] மகளி நலவியல் மற்றும் மகப்பேறியலில் சிறப்பிடம் பெற்ற பிறகு, இவர் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் இந்தியா நிறுவனம் 1959 இல் புது தில்லியில் மகளிர் நலவியல் மற்றும் மகப்பேறியலில் துறையில் இவர் 1986 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.[சான்று தேவை] எய்ம்சில் சிறப்புநிலை பெற்ற பிறகு, இவர் பத்ரா மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தார்[சான்று தேவை], 1996 வரை அங்கு பணியாற்றினார் மற்றும் ஒரு ஆலோசகராக பணியாற்ற மீண்டும் 1997 ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார்.

ஹிங்கோரணி உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்னாள் மருத்துவ இயக்குநர் மற்றும் மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் தலைப்பில் பல கட்டுரைகள் மற்றும் மருத்துவ ஆவணங்களை எழுதியுள்ளார்.[1] அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகளிர் நலவியல் காங்கிரசுவில் 1977 ஆம் ஆண்டில் கௌரவ நபராக இருந்தார் [3] மற்றும் தேசிய மருத்துவ அற்வியல் அகாதமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [4] 1984 ஆம் ஆண்டில் இந்திய அரசின் குடிமை விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருதினைப் பெற்றார்.[2]

ஹிங்கோரணி இந்தியாவில் இருந்து காசநோயை ஒழிப்பதற்காக செயல்படும் அரசு சாரா அமைப்பான ஆபரேஷன் ஆஷாவில் மேலாண்மை குழுவின் உறுப்பினராக ஈடுபட்டுள்ளார். இவர் ஐபி இங்கோரணியை மணந்தார் மற்றும் புதுடெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வசிக்கிறார்.[5]

தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தக விவரக்குறிப்பு

தொகு

லோச்சியா அண்ட் மென்ஸ்டுரல் பேட்டர்ன்ஸ் இன் வுமன் வித் போடார்டம் ஐஉசிடி இன்சர்சன் (பிரசவத்திற்குப் பின் IUCD செருகல்களுடன் பெண்களின் பேற்றுக்குப்பின் சுரப்பு மற்றும் மாதவிடாய் முறைகள்) [6]

யூ அண்ட் யுவர் ஹெல்த் (நீங்களும் உங்கள் ஆரோக்கியமும்) [7]

எ நியூ சைன் ஃபாஅர் டிஃபரண்சியல் டயக்னாசிஸ் ஆஃப் ஓஇவ்ரியன் டியூமர் வித் பிரக்னன்சி (கர்ப்பத்துடன் கருப்பை கட்டியின் வேறுபட்ட நோயறிதலுக்கான புதிய அறிகுறி) [8]

லேக்டேசன் அண்ட் லேக்டேசனன்ல் அமரோரியா வித் போர்ட் பார்டம் ஐயுசிடி இன்சர்சன்ஸ் (போர்ட்-பார்டம் IUCD செருகல்களுடன் பாலூட்டுதல் மற்றும் பாலூட்டுதல் அமினோரியா) [9]

ஜெனிடல் டிராக்ட் பாபிலோமஸ் வித் பிரக்னன்சி (கர்ப்பத்துடன் பிறப்புறுப்பு காணப்படும் கட்டி)[10]

விருது

தொகு

இந்திய அரசு 1984 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமை விருதான பத்மசிறீ விருது வழங்கி இவரைக் கௌரவித்தது.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Mini Sood (2005). The Growth Restricted Baby Of The Tropics. New Age International. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122416411.
  2. 2.0 2.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "ACM Service Awards and Honorary Fellowships". American Congress of Obstetricians and Gynecologists. 2015. பார்க்கப்பட்ட நாள் 15 July 2015.
  4. "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Constituency details" (PDF). Government of Delhi. 2015. பார்க்கப்பட்ட நாள் 15 July 2015.
  6. Vera Hingorani; Uma Bai; A. N. Kakkar (November 1970). "Lochia and menstrual patterns in women with postpartum IUCD insertions". American Journal of Obstetrics and Gynecology 108 (6): 989–990. doi:10.1016/0002-9378(70)90347-9. பப்மெட்:5496057. http://www.ajog.org/article/0002-9378(70)90347-9/abstract. 
  7. Vera Hingorani (October 1984). You and Your Health. Vol. 28. pp. 33–4. {{cite book}}: |journal= ignored (help)
  8. Vera Hingorani (1966). "A New Sign for Differential Diagnosis of Ovarian Tumour with Pregnancy". BJOG 73 (1): 155. doi:10.1111/j.1471-0528.1966.tb05138.x. https://www.researchgate.net/publication/264402358. 
  9. Vera Hingorani; G. R. Uma Bai (1970). "Lactation and Lactational Amenorrhoea with Port-partum IUCD Insertions". J. Reprod. Fertil. 23 (3): 513–515. doi:10.1530/jrf.0.0230513. பப்மெட்:4923671. http://www.reproduction-online.org/content/23/3/513.full.pdf. 
  10. Vera Hingorani; Ranjit Kaur (April 1961). "Genital Tract Papillomas with Pregnancy". BJOG 68 (2): 288–291. doi:10.1111/j.1471-0528.1961.tb02726.x. பப்மெட்:13714447. https://archive.org/details/sim_bjog_1961-04_68_2/page/288. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேரா_இங்கோரணி&oldid=4162588" இலிருந்து மீள்விக்கப்பட்டது