வே. இலெ. எத்திராசு

வேலூர் இலெட்சுமணசுவாமி முதலியார் எத்திராசு (Vellore Lakshmanaswamy Mudaliar Ethiraj, 18 ஜூலை 1890- 18 ஆகஸ்ட் 1960) இந்திய வழக்கறிஞர் மற்றும் பரோபகாரர் ஆவார். இவர் இந்தியாவின் சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் இவராவார். இவர் மெட்ராஸ் பார் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[1]

வே. இலெ. எத்திராசு
பிறப்பு18 சூலை 1890 (1890-07-18) (அகவை 133)
வேலூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு18 ஆகத்து 1960(1960-08-18) (அகவை 70)
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுபாரிஸ்டர் & எத்திராஜ் மகளிர் கல்லூரி நிறுவனர்
வாழ்க்கைத்
துணை
கத்திரின்
பிள்ளைகள்எத்ரிட்ஜ்

எத்திராசு ஜூலை 18 1890ஆம் ஆண்டு வேலூரின் வளமான பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தார். இவர் லெட்சுமணசாமி மற்றும் அம்மாயி அம்மாளின் ஒரே குழந்தையாவார். எத்திராசு சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டம் பெற்றார்[சான்று தேவை] .

எத்திராசின் வழக்கறிஞர் தொழில் வழக்கு வெற்றிகளில் ஒன்று லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. இவர் தமிழ் நடிகர்கள் எம்.கே. தியாகராஜா பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை பாதுகாப்பதற்காக வெற்றிகரமாகப் போராடினார்.[2] இவரது வாதத்தை சே. ப. இராமசுவாமி "20ஆம் நூற்றாண்டின் அற்புதம்" என்று விவரித்தார்.[3]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Madras Bar Association. Archived from the original on 2020-07-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-04.
  2. "கொலை வழக்குகள்". Scribd (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-04.
  3. . 11 August 1990. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._இலெ._எத்திராசு&oldid=3572504" இலிருந்து மீள்விக்கப்பட்டது