வைணவ ஆசாரிய பரம்பரை (தென்கலை)

வைணவம் இந்திய சமயங்களில் ஒன்று.
தொல்காப்பியம் இதனை “மாயோன் மேய காடுறை உலகம்” எனக் குறிப்பிடுகிறது.
தொல்காப்பியர் வாழ்ந்த பொ.ஊ.மு. நூற்றாண்டில் மாயோன் ஆயர்களின் தெய்வம்.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தமிழில் ஆழ்வார்கள் எழுதிய காலத்தில் வைணவம் வழிபடு சமயமாக மாறியது. இந்தத் தமிழ்நூல் நெறியைப் பின்பற்றியவர்கள் தென்கலையார் எனப்பட்டனர்.

அதற்குப் பின்னர் வைணவ ஆசாரியர்கள் பல நூல்களை இயற்றி வைணவ சமயநெறியை வளர்த்தனர்.
வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் தென்கலை வைணவ ஆசாரியர் பரம்பரை இவ்வாறு வளர்கிறது.

வேதாந்த தேசிகர் தம் முன்னோர் பரம்பரை வழியில் வடகலை வைணவப் பிரிவையும், பிள்ளை லோகாசாரியார் தம் முன்னோர் கால்வழியில் தென்கலை வைணவப் பிரிவையும் தோற்றுவித்தனர். இருவரும் சம காலத்தவர். திருமண் காப்பிட்டுக்கொள்ளும் முறையில் இவர்கள் வேறுபடுகின்றனர். தென்கலையார் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் வழியினர். வடகலையார் வேத வழியினர். இருவரும் சம காலத்தவர்.

அட்டவணை

தொகு
பரம்பரை காலம் குறிப்பு
நாதமுனிகள் பொ.ஊ. 824 நாதமுனிகள் நாலாயிர திவ்விய பிரபந்தத்தை மீட்டெடுத்து தொகுத்தவர்
உய்யக்கொண்டார் பொ.ஊ. 827 நாதமுனிகளின் மாணாக்கர்
மணக்கால் நம்பி பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு உய்யக்கொண்டாரின் மாணாக்கர்
ஆளவந்தார் பொ.ஊ. 917-1042 தொடக்கம்
இராமானுசர் பொ.ஊ. 11-12-ஆம் நூற்றாண்டு வளர்ச்சி
எம்பார் பொ.ஊ. 11-12ஆம் நூற்றாண்டு இந்தப் பரம்பரையை 'எம்பார் வழிப் பரம்பரை' என்பர்.
பட்டர் பொ.ஊ. 1192-1220 நஞ்சீயரின் ஆசிரியர், 28 ஆண்டு வாழ்ந்தவர்
நஞ்சீயர் பொ.ஊ. 1182-1287 ஒன்பதினாயிரப்படி
நம்பிள்ளை பொ.ஊ. 1207-1312 (105 ஆண்டுகள்) நஞ்சீயர் சொல்ல ஒன்பதினாயிரப்படி ஓலையில் எழுதியவர்
பெரியவாச்சான்பிள்ளை பொ.ஊ. 1228-1323 (95 ஆண்டுகள்) நம்பிள்ளை மாணவர், நாலாயிரப் பிரபந்தம் முழுமைக்கும் வியாக்கியானம் எழுதியவர்
நயினாராச்சான் பிள்ளை பொ.ஊ. 13-14 நூற்றாண்டு பெரியவாச்சான் பிள்ளை மகன்
வடக்குத் திருவீதிப்பிள்ளை பொ.ஊ. 1217-1312 நம்பிள்ளை மாணவர், ஈடு உரை கண்டவர்
ஈயுண்ணி மாதவப் பெருமாள் முதலானோர் பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டு நம்பிள்ளை மாணவர்
பிள்ளை லோகாசாரியார் பொ.ஊ. 1264 முதல் வடக்குத் திருவீதிப்பிள்ளை மகன்
அழகிய மணவாளப்பிள்ளை பெருமாள் நாயனார் பொ.ஊ. 1266-1361 வடக்குத் திருவீதிப்பிள்ளை மகன்

இவற்றையும் காண்க

தொகு

கருவிநூல்

தொகு