வைணவ குருபரம்பரை வரலாறுகள்
வைணவ குருமார்களின் வரலாற்றைத் தொகுத்துக் கூறும் நூல்கள் சில தோன்றின. அவை உரைநடையிலும், செய்யுள் வடிவிலும் உள்ளன. இவை வெவ்வேறு காலங்களில் தோன்றியவை. எனினும் அவற்றில் தொகுக்கப்பட்டிருக்கும் செய்திகளை அளவிட்டுக்கொள்வது வைணவ வளர்ச்சிப் பாதையை அறிய உதவும்.[1]
நூல்கள்
தொகுவைணவ குருமார்களின் வரலாறுகளைச் [2] செய்யுள் வடிவில் எடுத்துரைக்கும் பழமையான நூல்கள் ஒன்பது.[3]
நூல் | நூலாசிரியர் | நூற்றாண்டு | குறிப்பு | நடை |
---|---|---|---|---|
அரிசமய தீபம் | சடகோப தாசர் [4] | 17 இடைப்பகுதி | 12 ஆழ்வார் மற்றும் நாதமுனிகள், யமுனாசாரியார், இராமானுசர் வரலாறுகள் | 14 சருக்கங்களில் 1400 பாடல் |
இராமானுச சரிதை | பாகை சீதாராம தாசர் | - | திருவரங்கப் பெருமாளரையர் இராமானுசருக்கு அருளிச்செய்ததாகத் தோற்றுவாய் செய்துகொண்டு இராமானுசர் வரலாற்றை எடுத்துரைக்கிறது | 756 பாடல் |
இராமானுசார்ய திவ்விய சரிதை | பிள்ளை லோகஞ்சீயர் | இடைச்செருகல்கள் உள்ளன | வடமொழி, தெலுங்கு, கிரந்த எழுத்துக்களில் மேற்கோள்கள் தரப்பட்டுள்ள நூல் | மணிப்பிரவாள உரையடை |
குருபரம்பராப் பிரபாவம் | வடிவழகிய நம்பி தாசர் | 11 | ஆழ்வார்கள், நாதமுனி, ஆளவந்தார் வரலாறுகள் | 2965 பாடல்கள் |
குருபரம்பரைப் புராணம் | ஊறை விசயராகவன் | - | ஆழ்வார்களுடன் நாதமுனிகள் முதலானோர் வரலாறு | 4361 பாடல் |
திவ்வியசூரி சரிதம் | வங்கிபுரம் சனிவாசாசாரி | 19 | ஆழ்வார்கள், நாதமுனி, ஆளவந்தார், எம்பெருமானார், வேதாந்த தேசிகர் - வரலாறு | 2824 பாடல் |
பரமயோகி விலாசம் | - | - | விளங்கவில்லை | - |
பெரிய திருவடி அடைவு | கந்தாடையப்பன் | 15 | கருடவாகன பண்டிதர் செய்த வடமொழி நூலைத் தழுவியது | - |
யதீந்திரப்ரவண ப்ரபாவம் | பிள்ளை லோகஞ்சீயர் | 15 பிற்பகுதி | - | உரைநடை, மணிப்பிரவாளம் |
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 298.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ வைபவங்களை
- ↑ நூல்கள் அகரகரிசையில் அடுக்கப்பட்டுள்ளன
- ↑ தஞ்சை மாவட்டம் கீழையூர்
[[பகுப்பு: