வைதரணா ஆறு
வைதரணா ஆறு (Vaitarana River) என்பது மகாராட்டிராவின் நாசிக் மற்றும் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆறாகும். தனசா இதன் இடது கரை துணை ஆறாகவும், பிஞ்சல், தெகராசா, சூர்யா இதன் வலது கரை துணை ஆறுகளாகவும் உள்ளன. வைட்டர்னாவின் மேல் பகுதிகள் சுத்தமாகவும் ஆனால் கீழ்ப்பகுதிகள் சுத்திகரிக்கப்படாத தொழில்துறை மற்றும் நகர்ப்புற கழிவுகளால் மாசுபட்டுக் காணப்படுகிறது. இந்தியாவில் மிகவும் மாசுபட்ட ஆறுகளில் ஒன்றாக வைதரண ஆறு உள்ளது.[1]
வைதரணா | |
---|---|
வைதரணா ஆறு, அமைதி மலை தங்குமிடத்திலிருந்து | |
அமைவு | |
Country | இந்தியா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | திராம்பகரேசுவர், நாசிக் |
⁃ அமைவு | மகராட்டிரம் |
முகத்துவாரம் | அரபிக் கடல் |
⁃ அமைவு | பால்கர் மாவட்டம், மகராட்டிரம் |
நீளம் | 154 km (96 mi) approx. |
ஆற்றோட்டம்
தொகுஇது திரிம்பகேசுவரருக்கு அருகிலுள்ள சகாயாத்ரி மலைத்தொடர்களில் உருவாகிறது. வைதரணா ஆறு இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கோதாவரியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் பாய்கிறது. அரபிக் கடலில் கலப்பதற்குச் சற்று முன்னதாக தான்சா ஆறுடன் வைதரணா ஆறு கலக்கிறது. சோவ் மற்றும் வாதிவ் தீவுகள் இதன் கரையோரத்தில் உள்ளன. அர்னாலா தீவு இதன் வாயிலில் உள்ளது. மும்பைக்கு நீர் வழங்கும் மூன்று பெரிய அணைகள் இந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ளன.
முக்கியத்துவம்
தொகுமும்பையின் குடிநீரில் பெரும்பகுதியை வைதரணா ஆறு வழங்குகிறது. இது வடக்கு கொங்கன் பகுதியின் மிகப்பெரிய ஆறாகும். மகாராட்டிராவின் பால்கர் மாவட்டம் முழுமையும் ஓடக்கூடிய ஆறாகும்.
சிறப்பு
தொகுஎஸ் எஸ் வைதிரணா என்ற நீராவிக் கப்பலுக்கு இந்த ஆற்றின் பெயரிடப்பட்டுள்ளது.