வைத்யநாத் மிசுரா
முனைவர் வைத்யநாத் மிசுரா (Baidyanath Misra) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய பொருளாதார நிபுணரும், கல்வியாளரும், எழுத்தாளரும், நிர்வாகியும் ஆவார்.[1][2][3][4] இவர் ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.[5][6] ஒடிசா மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர்,[7] ஒடிசாவின் முதல் மாநில நிதி ஆணையத்தின் தலைவர்,[8] ஒடிசா மாநில நலச் செயலாளர் வாரியம், ஒரிசா பொருளாதார சங்கத்தின் நிறுவனர் செயலாளர் மற்றும் தலைவர்,[9] வளர்ச்சி ஆய்வுகளுக்கான நபக்ருஷ்ணா சௌத்ரி மையத்தின் நிறுவனர் இயக்குநர் மற்றும் தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.[10][11] ஆங்கிலத்தில் 16 புத்தகங்களையும், ஒடியாவில் 20 புத்தகங்களையும் எழுதியுள்ளார்.இவர் பல முன்னணி ஒடியா பத்திரிகைகளில் கட்டுரையாளராகவும் இருந்தார். ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இவர் ஒடிசா முழுவதும் பல முகாம்களை ஏற்பாடு செய்தார்.
வைத்யநாத் மிசுரா | |
---|---|
பிறப்பு | கோர்தா | 22 நவம்பர் 1920
இறப்பு | 7 மே 2019 புவனேசுவரம் | (அகவை 98)
தேசியம் | இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | ராவன்ஷா கல்லூரி அலகாபாத் பல்கலைக்கழகம் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் உத்கல் பல்கைலைக்கழகம் |
பணி | பொருளாதார நிபுணர் கல்வியாளர் எழுத்தாளர் நிர்வாகி |
பணியகம் | ஒடிசா அரசு |
பெற்றோர் | மகாதேவ் மிசுரா (தந்ததை) மாணிகா தேவி (தாயார்) |
வாழ்க்கைத் துணை | வசந்தி மிசுரா |
பிள்ளைகள் | வசந்த், ஜெயந்த், சுகந்த், விஜயலட்சுமி |
விருதுகள் | ஒடிசா சாகித்ய அகாதமி விருது |
கல்வி
தொகுஇவர் ராவன்ஷா கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், அதைத் தொடர்ந்து அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.[12] இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளியில் பொருளாதாரத்தில் மற்றொரு முதுகலை பட்டத்தை புல்பிரைட் உதவித்தொகையில் முடித்தார். அங்கு இவர் நோபல் பரிசு பெற்ற சைமன் கஸ்நெட்ஸின் கீழ் படித்தார்.[12] இந்தியா திரும்பிய பிறகு, இவர் உத்கல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[13]
தொழில்
தொகுராவன்ஷா கல்லூரியில் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர்,[14] உத்கல் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியராகவும் பகுப்பாய்வு மற்றும் பயன்பாட்டுப் பொருளாதாரத் துறையின் தலைவராகவும் சென்றார். அங்கு இவர் இந்திய ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றின் நிதியுதவியுடன் இரண்டு கல்வி இருக்கைகளை நிறுவினார். இவர் 1981 முதல் 1985 வரை ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார் [15][16] அங்கிருந்த காலத்தில், புவனேசுவரம்பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சம்பல்பூர் விவசாயக் கல்லூரி, புவனேசுவரம் மனையியல் அறிவியல் கல்லூரி, கஞ்சாம் மீன்வளக் கல்லூரி, ஆகியவற்றை நிறுவினார். இவர் 1985 முதல் 1990 வரை ஒடிசா மாநில திட்டக் குழுவின் தலைவராக இருந்தார்.[17][18] 1987 ஆம் ஆண்டில், இவர் புவனேசுவரத்தில் நபக்ருஷ்ணா சௌத்ரி மேம்பாட்டு ஆய்வுகளுக்கான மையத்தை நிறுவினார், இது இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம், இந்திய அரசு ஒடிசா அரசு ஆகியவற்றால் கூட்டாக நிதியளிக்கப்பட்டது.[19][20] அவர் இந்திய திட்டக் குழு , ஒடிசா ஊதியக் குழுவின் பொருளாதார வல்லுநர்கள் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.
குடும்பம்
தொகுஇவர் கோர்தாவில் மகாதேவ் மிசுரா -மாணிகா தேவிக்கு பிறந்தார். இவர் இல்லத்தரசியும் கலைத்துறையில் முதுகலை பட்டதாரியுமான வசந்தி என்பவரை மணந்தார். இவர்களுகு விஜயலட்சுமி என்ற ஒரு மகளும். வசந்த், ஜெயந்த், சுகந்த் என்ற மூன்று மகன்களும் உள்ளனர்.[21][22][23][24]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Renowned economist Baidyanath Mishra dies". May 8, 2019 – via Business Standard.
- ↑ "Baidyanath Misra passes away at 99". The New Indian Express.
- ↑ "MSN India | Breaking News, Entertainment, Latest Videos, Outlook". www.msn.com.
- ↑ "There are only traders, no entrepreneurs". www.telegraphindia.com.
- ↑ "Noted economist Baidyanath Mishra passes away – prameyanews.com". May 8, 2019.
- ↑ NEWS, OMMCOM. "Renowned Economist Baidyanath Mishra Passes Away". ommcomnews.com.
- ↑ "Renowned economist, Prof Baidyanath Mishra, passes away". May 8, 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ https://fincomindia.nic.in/writereaddata/html_en_files/oldcommission_html/fincom14/others/19.pdf
- ↑ "Orissa Economics Association celebrates golden jubilee - OrissaPOST". February 10, 2018.
- ↑ https://finance.odisha.gov.in/state_finance_comm/First_SFC_Chapter-I_III.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Prof. Baidyanath Misra - An Economist and Social Scientist of Repute". OdishaPlus. May 13, 2019.
- ↑ 12.0 12.1 Indian Economy and Socio-economic Transformation: Emerging Issues and Problems : Essays in Honour of Professor Baidyanath Misra. Deep & Deep. August 27, 2004.
- ↑ "An Institution Builder Passes Away". May 9, 2019. Archived from the original on அக்டோபர் 18, 2020. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 13, 2021.
- ↑ "Noted economist Baidyanath Mishra passes away – prameyanews.com". May 8, 2019."Noted economist Baidyanath Mishra passes away – prameyanews.com". May 8, 2019.
- ↑ "Renowned economist Baidyanath Mishra passes away at 99". May 8, 2019.
- ↑ Pioneer, The. "Economist Mishra passes away". The Pioneer.
- ↑ "Renowned economist Baidyanath Mishra dies". www.thehansindia.com. May 8, 2019.
- ↑ "Renowned economist Baidyanath Mishra no more". Udayavani.
- ↑ "An Institution Builder Passes Away". May 9, 2019. Archived from the original on அக்டோபர் 18, 2020. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 13, 2021."An Institution Builder Passes Away" பரணிடப்பட்டது 2020-10-18 at the வந்தவழி இயந்திரம். May 9, 2019.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-11-20. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
- ↑ http://www.neurosocietyindia.org/site/Past-president/Basant%20Kumar%20Misra,%20President%20NSI%202008.pdf
- ↑ http://www.imfa.in/about-us/BoardOfDirectors.htm
- ↑ https://www.depts.ttu.edu/international/statements/bio_misra.php
- ↑ https://www.newindianexpress.com/states/odisha/2019/may/09/baidyanath-misra-passes-away-at-99-1974600.html