வௌதா கண்காட்சி
வௌதா கண்காட்சி வௌதா கண்காட்சி Vautha Fair | |
---|---|
வௌதா கண்காட்சியில் கழுதைச் சந்தை | |
வகை | பண்பாடு, மத திருவிழா |
தொடக்கம் | கார்த்திகை மாதம் சத் ஏகாதேசி |
முடிவு | கார்த்திகை மாதம் சத் பூர்ணிமா |
காலப்பகுதி | வருடாந்திர நிகழ்வு |
அமைவிடம்(கள்) | வௌதா கிராமம், அகமதாபாது மாவட்டம், குசராத்து |
நாடு | இந்தியா |
வௌதா கண்காட்சி (Vautha fair) என்பது குஜராத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று. வௌதா அகமதாபாது மாவட்டத்தின் தோல்கா வட்டம் மற்றும் கேதா மாவட்டத்தின் மாதர் வட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. அகமதாபாது மாவட்டத்தில் நடைபெறும் வௌதா கண்காட்சி மிகப்பெரிய கண்காட்சியாகும்.[1][2]
நடைபெறுமிடம்
தொகுஇந்தியாவின் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் உள்ள தோல்கா வட்டத்தில் உள்ள வௌத்தா கிராமத்தில் வௌதா கண்காட்சி நடைபெறுகிறது.[3] இக்கண்காட்சி நடக்கும் இடம் சப்தசங்கம் எனப்படும் ஏழு ஆறுகள் சங்கமிக்கும் இடமாகும். ஆனால் இங்கு, சபர்மதி மற்றும் வத்ரக் ஆறுகள் மட்டுமே சந்திக்கின்றன. இந்த இரண்டு ஆறுகளும் வௌதாவிற்கு முன்னரே ஹத்மதி ஆற்றினை சபர்மதியிலும், காரி, மெஷ்வோ , மஜாம் மற்றும் ஷேதி ஆறுகளை வத்ராக்கிலும் சந்திக்கின்றன. எனவே இங்கு ஏழு நதிகள் சங்கமமாகின்றன எனக் கருதப்படுகிறது.[2][4]
நேரம்
தொகுகார்த்திகை சுத் ஏகாதசி முதல் கார்த்திகை சுத் பூர்ணிமா (தேவ் தீபாவளி) வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.[1]
வரலாறு
தொகுகுசராத்தின் மையத்தில் உள்ள இந்த இடத்தின் முக்கியத்துவம் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் உள்ள விராட்நகர், இப்போது தோல்காவில் உள்ளது. இங்குப் பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் நீண்ட வனவாசத்திற்குத் தலைமறைவு வாழ்க்கை (அஞ்ஞாத வாசம்) செல்லும் முன்னர் தங்கினர்.[4]
உலகம் முழுவதும் பயணம் செய்யும் சிவனின் மூத்த மகனான கார்த்திகை சுவாமி, கார்த்திகை பூர்ணிமாவின் புனிதத் திருவிழாவில் நீராட வருவார் என்று வௌத்தாவில் உள்ள இந்த பழமையான மகாதேவரின் கோயிலைப் பற்றிப் பல புராணங்கள் உள்ளன. வௌத்தாவில் இன்றும் கார்த்திகையின் சரண்பாதுகா எனப்படும் கால் திண்டினை வழிபடுகின்றனர்.[4]
முக்கியத்துவம்
தொகுகார்த்திகை பௌர்ணமி தினத்தன்று சப்த சங்கத்தில் நீராடுவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுவதால், அன்றைய தினம் நீராடுவதன் மூலம் மக்கள் ஆன்மிகப் பேரின்பத்தை அடைகின்றனர்.[2] வௌத்தாவின் இந்த கண்காட்சியில் பல சிறிய மற்றும் பெரிய கடைகள், பொழுதுபோக்கு நிலையங்கள், தள்ளுவண்டிக் கடைகள், குரங்காட்டி (<i>ஜக்லர்</i>), மாய வித்தைக்காரர்கள், கயிறு-நடனம், மற்றும் வித்தை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து காணப்படும்.[2] இரவில் பஜனை மண்டலி தவிர, வட்டப் பஞ்சாயத்து தோல்காவால் கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.[1]
பால் மற்றும் நல்கந்தா பகுதி மக்களும் தாகூர், ராணா, தர்பார், கச்சியா படேல் ராஜ்புத் சாதியினரும் இங்கு இரண்டு மூன்று நாட்கள் முகாமிட்டுத் தங்கிச்செல்வர்.[4]
கழுதை சந்தை
தொகுஇந்த கண்காட்சியின் முக்கிய ஈர்ப்பு கழுதை சந்தை ஆகும். சிறந்த மற்றும் தரமான கழுதைகள் இங்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன, வன்சாரா சமூகத்தினர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கழுதைகளை இங்கு விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். வௌத்தா கண்காட்சியில் ஒட்டகங்களும் வியாபாரம் செய்யப்படுகின்றன. கழுதைகளின் கழுத்து மற்றும் பின்புறம் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணம் பூசப்பட்டும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Sedani, Hasutaben Shashikant (2015). ગુજરાતની લોકસંસ્કૃતિ. அகமதாபாது: University Granth Nirman Board - குசராத்து. pp. 84–85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 97-89-381265-97-0.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Vyas, Rajni (2012). ગુજરાતની અસ્મિતા. அகமதாபாது: Akshar Publication. pp. 326–327.
- ↑ Jadav, Joravarsinh (2010). ગુજરાતની લોકસંસ્કૃતિક વિરાસત. காந்திநகர்: Directorate of Information/ GujaratState. p. 181.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Kalariya, Ashok (2019–20). ગુજરાતના લોકોત્સવો અને મેળા. காந்திநகர்: Directorate of Information/ GujaratState. pp. 42–43.