வ. சின்னசாமி

வ. சின்னசாமி (V. Chinnasamy)(பிறப்பு நவம்பர் 24, 1939) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டிணத்தைச் சார்ந்தவர். பள்ளிக் கல்வியினை சேலம் மேச்சேரி அரசுப் பள்ளியிலும், சேலம் அரசுக் கல்லூரியில் கல்லூரிக் கல்வினையும் கற்றுள்ளார். சின்னசாமி, திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1967 ஏற்காடு திமுக 25124 53.87
1971 ஏற்காடு திமுக 29196 58.98

மேற்கோள்கள் தொகு

  1. (in English - Tamil) தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை “யார் எவர்” [Madras Legislative Assembly "Who's Who"]. Madras. 1968 [1967]. பக். 56. 
  2. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 452. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._சின்னசாமி&oldid=3538186" இலிருந்து மீள்விக்கப்பட்டது