ஷாஜகான்பூர் மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

ஷாஜகான்பூர் மாவட்டம் (Shahjahanpur district), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஷாஜகான்பூர் ஆகும். இது பரேலி கோட்டத்தில் அமைந்துள்ளது.

ஷாஜகான்பூர் மாவட்டம்
ஷாஜகான்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பரேலி
தலைமையகம்ஷாஜகான்பூர்
பரப்பு4,388 km2 (1,694 sq mi)
மக்கட்தொகை3,006,538 (2011)
மக்கள்தொகை அடர்த்தி685/km2 (1,770/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை19.76%
படிப்பறிவு59.54
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மாவட்ட எல்லைகள்

தொகு

இம்மாவட்டத்தின் வடக்கில் பிலிபித் மாவட்டம், கிழக்கில் லக்கிம்பூர் கேரி மாவட்டம், தென்கிழக்கில் ஹர்தோய் மாவட்டம், தென்மேற்கில் பரூக்காபாது மாவட்டம், மேற்கில் பதாவுன் மாவட்டம், வடமேற்கில் பரேலி மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் சதர், பெவாயன், தில்ஹர் மற்றும் ஜலாலாபாத் என நான்கு வருவாய் வட்டங்களையும்; கட்ரா, ஜலாலாபாத், தில்ஹர், பெவாயன், ஷாஜகான்பூர் மற்றும் தத்ரௌல் என ஆறு சட்டமன்ற தொகுதிகளையும்; ஷாஜகான்பூர் என ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டது.

புவியியல்

தொகு

4575 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டதில் பாயும் முக்கிய ஆறுகள் இராம்கங்கா மற்றும் கோமதி ஆறுகள் ஆகும். கத்தன்னா, ஜும்கா மற்றும் மென்சி ஆறுகள் கோமதி ஆற்றில் கலக்கிறது. வளமான மண்னும் நீர் ஆதாரம் மிக்க கங்கைச் சமவெளியில் அமைந்த இம்மாவட்டத்தின் முக்கிய விளைபொருட்கள் கோதுமை, நெல் மற்றும் கரும்பு, உருளைக்கிழங்கு ஆகும்.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,006,538 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 80.24% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 19.76% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 18.00% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,606,403 ஆண்களும் மற்றும் 1,400,135 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 872 பெண்கள் வீதம் உள்ளனர். 4,388 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 685 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 59.54% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 68.18% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 49.57% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 502,625 ஆக உள்ளது. [1]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,412,595 (80.24 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 527,581 (17.55 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள்

தொகு

உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாஜகான்பூர்_மாவட்டம்&oldid=3947705" இலிருந்து மீள்விக்கப்பட்டது