ஷிவானி நாராயணன்

தொலைக்காட்சி நடிகை

ஷிவானி நாராயணன் என்பவர் தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டம்சாத்தூரை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார்.[1][2][3] இவர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர். இவர் பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம் (2019), இரட்டை ரோஜா[4][5] (2020) போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

ஷிவானி நாராயணன்
பிறப்புமே 5, 2001 (2001-05-05) (அகவை 23)
பணி
செயற்பாட்டுக்
காலம்
2016 – தற்போது வரை

தொழில்

தொகு

ஷிவானி நாராயணன் 2015 ஆம் ஆண்டில் விளம்பரங்களைச் நடித்து மற்றும் வடிவழகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[6] 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி (பகுதி 3) என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானார். அந்த தொடரில் 'காயத்ரி' என்ற வேடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு[7] என்ற தொடரில் 'சினேகா' என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் என்பவர் நடித்துள்ளார். அதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜோடி பன் அன்லிமிடெட்[8] என்ற நடன நிகழ்ச்சியில் முஹம்மட் அஸீம் உடன் ஜோடியாக போட்டியாளராக பங்கேற்றார்.

2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைகுட்டி சிங்கம்[9] என்ற தொடரில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த தொடரில் 17வது அத்தியாயத்துடன் வெளியேறினார். இவர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை 'இரா அகர்வால்'[10] என்பவர் நடித்தார். 2020 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடரான இரட்டை ரோஜா என்ற தொடரில் 'அபி' மற்றும் 'அனு' என்ற இரட்டை கதாபாத்திரத்தில் 168 அத்தியாயங்கள் வரை நடித்தார். இவருக்கு பதிலாக தமிழ் திரைப்பட நடிகை சாந்தினி தமிழரசன்[11][12] என்பவர் நடித்துவருகிறார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் என்ற நிகழ்ச்சியின் நான்காவது[13][14] பருவத்தில் போட்டியாளராக பங்கேற்று வருகின்றார்.

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் அலைவரிசை குறிப்புகள்
2016-2018 சரவணன் மீனாட்சி (பகுதி 3) காயத்ரி விஜய் தொலைக்காட்சி
2016-2019 பகல் நிலவு சினேகா பரிந்துரை: விஜய் தொலைக்காட்சி விருது சிறந்த புதுமுக நடிகை
2018 ஜோடி பன் அன்லிமிடெட் போட்டியாளர்
2019 கடைகுட்டி சிங்கம் மீனாட்சி
2020 இரட்டை ரோஜா அனுராதா மற்றும் அபிராமி (இரட்டை வேடம்) ஜீ தமிழ்
2020 - ஒளிபரப்பில் பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர் விஜய் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Pagal Nilavu fame Shivani Narayanan gets one million followers on Instagram; thanks everyone for the love - Times of India". The Times of India.
  2. "Actress Shivani Narayanan shows off her amazing transformation; see post - Times of India". The Times of India.
  3. "Actress Shivani Narayanan thanks fans for making her birthday special - Times of India". The Times of India.
  4. "Rettai Roja crosses 100 episodes; Shivani Narayanan thanks fans for the support". The Times of India.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "Rettai Roja fame Shivani Narayanan turns nostalgic recalling school days - Times of India". The Times of India.
  6. "Bigg Boss Tamil 4 contestant Shivani Narayanan: Everything you need know about the model-turned-actress". The Times of India.
  7. "Pagal Nilavu fame Shivani Narayanan thanks fans for the birthday wishes - Times of India". The Times of India.
  8. "Jodi Fun Unlimited to have its grand finale soon - Times of India". The Times of India.
  9. "Shivani Narayanan to feature in Kadai Kutty Singam - Times of India". The Times of India.
  10. "Kadaikutty Singam: Iraa Agarwal replaces Shivani Narayanan - Times of India". The Times of India.
  11. "இரட்டை ரோஜா சீரியலில் இருந்து ஷிவானி நாராயணன் நீக்கம்! அவருக்கு பதில் சாந்தினி தான்". Tamil Samayam. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.{{cite web}}: CS1 maint: url-status (link)
  12. "Actress Chandini Tamilarasan joins the cast of Rettai Roja; replaces actress Shivani Narayanan - Times of India". The Times of India.
  13. "Shivani's angry statement ahead of Bigg Boss Tamil 4 - Times of India". The Times of India.
  14. "Bigg Boss Tamil 4, October 5 preview: Shivani Narayanan gets targeted by Sanam Shetty and other housemates? - Times of India". The Times of India.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷிவானி_நாராயணன்&oldid=3931372" இலிருந்து மீள்விக்கப்பட்டது