சுடான்லி நீர்த்தேக்கம்

(ஸ்டான்லி நீர்த்தேக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஸ்டான்லி நீர்த்தேக்கம் (இது மேட்டூர் அணை எனவும் அறியப்படுகிறது)  இது தென்னிந்தியாவின்  மிகப்பெரிய மீன்பிடி நீர்த்தேக்கங்களுள் ஒன்று. இதன் முதன்மையான நீருற்று காவிரி ஆறு ஆகும்.[1] மெட்ராஸ் ஆளுநராக 1929 முதல் 1934 வரையிலான கால கட்டத்தில் இருந்த லெப்டினன்ட் கர்னல் சர் ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லியின் பெயரால் வழங்கப்படும் இந்த அணை 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

ஸ்டான்லி நீர்த்தேக்கம்
அமைவிடம்தென் இந்தியா
ஆள்கூறுகள்11°54′N 77°50′E / 11.900°N 77.833°E / 11.900; 77.833
வகைநீர்த்தேக்கம்
முதன்மை வரத்துகாவிரிஆற்றின் கிளை நதிகள்: பாலாறு, சின்னாறு, தோப்பாறு.
வடிநில நாடுகள்இந்தியா

ஸ்டான்லி நீர்த்தேக்கம் முன்பாக மூன்று சிறிய கிளை ஆறுகளான பாலாறு, சின்னாறு மற்றும் தோப்பாறு, ஆகியவை இணைந்து நீர்த்தேக்கத்தை அடைகின்றன. 

ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதி

மொத்த கொள்ளளவாக 93.47 பில்லியன் கன அடி (டிஎம்சி) (93.47 Tmcft) கொண்டுள்ள[2] ஸ்டான்லி நீர்த்தேக்கம், இந்தியாவின் மிக பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்று.[3] இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டதால் நீரில் மூழ்கிய இரண்டு சிற்றூர்களில் வாழ்ந்து வந்த மக்கள் மேட்டூருக்கு இடம் பெயர்ந்தனர்.[சான்று தேவை]

அணையின் மொத்த  நீளம்  1700 மீட்டர். மேட்டூர் அணையின் நீர் மின்சாரத் திட்டம் 240 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய திறன் உள்ளது. அணை, பூங்கா, மலைகள் மற்றும் நீர் மின் ஆற்றல் நிலையங்கள் அனைத்தும் சுற்றுலா ஈர்ப்புப் பகுதிகளாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. PTI, DECCAN CHRONICLE (2021-11-15). "Entire inflow into Stanley reservoir being discharged after heavy rains". பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
  2. PTI (2022-10-12). "Tamil Nadu: Stanley reservoir in Mettur reaches full capacity, flood alert sounded in delta districts". பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
  3. "Top 12 Largest Water Reservoirs in India". பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடான்லி_நீர்த்தேக்கம்&oldid=3611710" இலிருந்து மீள்விக்கப்பட்டது