இசுடெஃபனி மெக்மாகன்

(ஸ்டீபனி மக்மஹோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இசுடெஃபனி மரீ மெக்மாகன் லெவேக் (Stephanie Marie McMahon Levesque[4] (/məkˈmæn/ mək-MAN}}; பிறப்பு: செப்டம்பர் 24, 1976)[2] ஓர் அமெரிக்கத் தொழிலதிபரும் இளைப்பாறிய தொழில்முறை மற்போர் வீராங்கனையும் ஆவார். இவர் 1998-2023 காலப்பகுதியில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் பல்வேறு செயற்பாடுகளினால் அறியப்பட்டவர்.[5]

இசுடெஃபனி மெக்மாகன்
Stephanie McMahon
2018 இல் மெக்மாகன்
பிறப்புஸ்டெஃபனி மரீ மெக்மாகன்
செப்டம்பர் 24, 1976 (1976-09-24) (அகவை 48)
ஹார்ட்பர்ட், கனெடிகட், ஐ.அ
படித்த கல்வி நிறுவனங்கள்பாஸ்டன் பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்)
பணி
  • தொழிலதிபர்
  • தொழில்முறை மற்போர் வீராங்கனை
செயற்பாட்டுக்
காலம்
  • 1989–இன்று (வணிகம்)
  • 1998–2018 (மற்போர்)
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் (2015–2023)[1]
பெற்றோர்வின்சு மெக்மான்
லிண்டா மெக்மாகன்
வாழ்க்கைத்
துணை
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை
மற்போர் பெயர்இசுடெஃபனி மெக்மாகன்[2]
இசுடெஃபனி மெக்மாகன்-எல்ம்சுலி[2]
Billed height5 அடி 8 அங் (1.73மீ)[3]
Billed weight65 கிகி[3]
Billed fromகிரீனிச், கனெடிகட்
முதல் போட்டிசூன் 27, 1998
ஓய்வு பெற்றதுஏப்பிரல் 8, 2018

வின்சு மெக்மான், லிண்டா ஆகியோரின் மகளான இவர், மெக்மாகன் குடும்பத்தின் உறுப்பினராக நான்காம் தலைமுறை மற்போர் ஊக்குவிப்பாளராக உள்ளார். தனது 13-ஆவது அகவையில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார், பல்வேறு தொழில்-சார் இதழ்களுக்கான விளம்பரத் தோற்றங்களில் பங்கேற்றார். 1999 ஆம் ஆண்டு உலக மற்போர்க் கூட்டமைப்புக்காக தி அண்டர்டேக்கரின் கதைக்களத்தின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து ஒளிபரப்பில் ஈடுபட்டு வந்தார். மற்போர் வீரர் டெஸ்டுடனான ஒரு சுருக்கமான திரை உறவுக்குப் பிறகு, மெக்மாகன் டிரிப்பிள் எச் (எல்ம்சுலி) என்பவரைத் திரையிலும் பின்னர் நிகழ் வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டார் - இதன் விளைவாக மெக்மாகன்-எல்ம்சுலி பிரிவு கதைக்களம் உருவானது. ஒரு தடவை உலக மற்போர் வாகையாளர் போட்டியையும் நடத்தியுள்ளார். 2001 ஆம் ஆண்டில், தி இன்வேசன் மற்போர் நிகழ்ச்சியின் போது எக்ஸ்ட்ரீம் வாகை மற்போரின் திரைக்காட்சி உரிமையாளராக இருந்தார். அடுத்த ஆண்டு, அவர் சிமாக்டவுன் நிறுவனத்தின் பொது மேலாளராகப் பணியாற்றினார். பின்னர் தனது தந்தையுடன் "ஐ க்விட்" போட்டிக்குப் பிறகு தொலைக்காட்சியில் தொடர்ந்து தோன்றுவதை நிறுத்தினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "WWE Elects Stephanie McMahon, Paul Levesque and Robyn Peterson to B.O.D." WWE Corporate. Archived from the original on February 26, 2015.
  2. 2.0 2.1 2.2 "Stephanie McMahon Profile". Online World of Wrestling. Archived from the original on July 30, 2012. பார்க்கப்பட்ட நாள் May 1, 2008.
  3. 3.0 3.1 "Stephanie McMahon". CAGEMATCH.net. Archived from the original on April 6, 2016. பார்க்கப்பட்ட நாள் June 1, 2015.
  4. Palumbo, Dave. "Stephanie Levesque: First Daughter of the WWE, Super Mom of 3, Woman with Food Demons!". RXMuscle. Archived from the original on March 13, 2016. பார்க்கப்பட்ட நாள் December 30, 2011.
  5. "Stephanie McMahon Resigns as Co-CEO of WWE" (in ஆங்கிலம்). Variety. January 10, 2023. Archived from the original on January 10, 2023. பார்க்கப்பட்ட நாள் January 10, 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடெஃபனி_மெக்மாகன்&oldid=4096464" இலிருந்து மீள்விக்கப்பட்டது