இசுடீபன் கோவே
ஸ்டீபன் ரிச்சர்ட்ஸ் கோவே (Stephen Richards Covey அக்டோபர் 24,1932—சூலை 16, 2012) என்பவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மேலாண்மை குரு, நூலாசிரியர், பேராசிரியர், பேச்சாளர் ஆலோசகர், சிந்தனையாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். "மிகு திறமை மிக்க மனிதர்களின் 7 பழக்கங்கள்" என்னும் இவருடைய நூல்[1] பல இலட்சக் கணக்கான படிகள் விற்பனை யாகி உலக அரங்கில் மிகுந்த பாராட்டைப் பெற்றது. 25 செல்வாக்கு மிகு அமெரிக்கர்களில் ஒருவர் ஸ்டீபன் கோவே என டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்து அறிவித்தது.[2][3]
இசுடீபன் ஆர். கோவே Stephen R. Covey | |
---|---|
பிறப்பு | சால்ட் லேக் நகரம், யூட்டா | அக்டோபர் 24, 1932
இறப்பு | சூலை 16, 2012 (அகவை 79)
ஐடகோ ஃபால்சு, ஐடஹோ |
கல்வி | அறிவியல் இளங்கலை முதுகலை வணிக மேலாண்மை சமயக் கல்வி முனைவர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | யூட்டா பல்கலைக்கழகம் ஆர்வர்டு வணிகப் பள்ளி பிரிகாம் யங் பல்கலைக்கழகம் |
பணி | எழுத்தாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர், பேராசிரியர், பரிந்துரையாளர், மேலாண்மை-வல்லுனர் |
சமயம் | மொர்மோன் |
வாழ்க்கைத் துணை | சாந்திரா கோவே |
வலைத்தளம் | |
stephencovey.com |
இவரது பிற நூல்களான முதலில் முதன்மையானவை (First Things First), கொள்கை மையப்படுத்திய தலைமை (Principle-Centered Leadership), செயல்திறன் மிக்க குடும்பங்களின் பழக்கங்கள் (The Seven Habits of Highly Effective Families), எட்டாவது பழக்கம்: செயல்திறனிலிருந்து பேராண்மை, எனக்குள் தலைவர்- ஒரு சமயத்தில் ஒரு குழந்தையென எவ்வாறு உலகெங்கும் பள்ளிகளும் பெற்றோரும் பேராண்மைக்கு வித்திடுகிறார்கள் (The Leader In Me — How Schools and Parents Around the World Are Inspiring Greatness, One Child at a Time) ஆகியனவும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன[4]. இறக்கும் தருவாயில் யூட்டா பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.[5]
இளமைக் காலம்
தொகுகோவே பள்ளியில் படிக்கும்போதே நல்ல விளையாட்டு வீரராக இருந்தார். ஆனால் கீழே விழுந்து அடிபட்ட காரணத்தால் விளையாட்டைத் தவிர்த்து கல்வியில் தம் முனைப்பையும் கவனத்தையும் செலுத்தினார்.[3] மேலும் பேச்சிலும் விவாதத்திலும் கலந்து கொண்டார். வணிக நிருவாகப் படிப்பில் உடா பல்கலைக் கழகத்தில் பட்டமும், ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும், பிரிகாம் ய்ங் பல்கலைக் கழகத்தில் மதக் கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார்.[6] மதிப்பார்ந்த முனைவர் பட்டங்கள் நிறையப் பெற்றார்.[7]
பணிகள்
தொகுபெரும் நிறுவனங்கள், வணிகக் குழுமங்கள் தம் இலக்குகளை எட்டுவதற்கான வழி வகைகளை எடுத்துக் காட்டி அந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பயிற்சி அளித்தார். இன்னல்களையும் இடையூறுகளையும் எதிர் கொண்டு வெல்வது எப்படி? தலைவர்கள் மேலாளர்கள் போன்றோருக்கு இருக்க வேண்டிய தலைமைப் பண்புகள் யாவை, அவற்றை வளர்த்தெடுப்பது எப்படி, போன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க கருத்தரங்குகளும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். பிள்ளைகளை வளர்ப்பது எப்படி, பெற்றோரின் கடமைகள் என்ன, மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவுவது, இரு சாராரும் பயன் பெறும் வண்ணம் இயங்குவது போன்றன பற்றியும் தம் நூல்களில் எழுதினார். உடா மாநில பல்கலைக் கழகத்தில் ஜோன் எம் ஹன்ஸ்மன் பிசினஸ் பள்ளியில் பேராசிரியாராகப் பணியாற்றினார். 1997 இல் உலகளாவிய நிலையில் பிராங்க்ளின் கோவே என்னும் பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். அந்நிறுவனம் தனி மனிதர்களுக்கும் பெரிய குழுமங்களுக்கும் பயிற்சி அளித்தது. இவர் சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சிகளில் தொழில்முனைவோர், உயரதிகாரிகள், வணிக ஆலோசகர்கள், கல்வியாளர்கள், சமூக விஞ்ஞானிகள் எனப் பல துறையாளர்கள் கலந்துகொள்வார்கள்.
விருதுகள்
தொகுமகரிசி பல்கலைக் கழகம் வழங்கிய மகரிசி விருது, பன்னாட்டுத் தொழில் முனைவோர் விருது, 1998 இல் சீக்கியர்களின் அமைதிக்கான உலக மனிதன் விருது ஆகியனவும் இன்னும் சில விருதுகளும் பெற்றார்.
எழுதிய நூல்கள்
தொகு- Spiritual Roots of Human Relations (1970) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87579-705-9)
- The Divine Center (1982) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59038-404-0)
- The Seven Habits of Highly Effective People (1989, 2004) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-70863-5)
- Principle Centered Leadership (1989) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-79280-6)
- First Things First, co-authored with Roger and Rebecca Merrill (1994) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-80203-1)
- Living the Seven Habits (2000) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-85716-2)
- 6 Events: The Restoration Model for Solving Life's Problems (2004) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57345-187-8)
- The 8th Habit: From Effectiveness to Greatness (2004) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-84665-9)
- Quest: The Spiritual Path to Success by Stephen R. Covey (Editor) (1997), with Thomas Moore, Mark Victor Hansen, David Whyte, Bernie Siegel, Gabrielle Rothand Marianne Williamson. Simon & Schuster AudioBook பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-671-57484-0
- The Leader in Me: How Schools and Parents Around the World Are Inspiring Greatness, One Child At a Time (2008) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4391-0326-7)
- The 7 Habits of Highly Effective Network Marketing Professionals (2009) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-933057-78-1)
- The 3rd Alternative: Solving Life's Most Difficult Problems (2011) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4516-2626-1
மேற்கோள்கள்
தொகு- ↑ "'7 Habits' author Stephen Covey dead at 79". CNN International Edition. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 22, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "About Stephen R. Covey". Stephen R Covey. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 22, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 3.0 3.1 Harper Lena M. (Summer 2012). "The Highly Effective Person". Marriott Alumni Magazine (Brigham Young University). http://marriottschool.uberflip.com/i/148963-summer-2012/5. பார்த்த நாள்: ஏப்ரல் 22, 2017.
- ↑ "Influential HR thinker Stephen R Covey (1932-2012)". Daily Herald. HR Magazine. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 22, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Stephen Covey to join USU's Jon M. Huntsman School of Business". Herald Communications. Archived from the original on 2010-04-30. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 22, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Stephen R. Covey dies; author of 'The 7 Habits of Highly Effective People' was 79". The Washington Post. July 16, 2012. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 22, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "About Dr. Covey, Awards". Stephen R Covey. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 22, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)