ஸ்ரீதத்வநிதி
ஸ்ரீதத்துவநிதி (Śrītattvanidhi), சிற்ப இலக்கணங்கள், இறை உருவ இலக்கணங்கள் பற்றி கருநாடகப் பகுதியில் பொ.பி 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் ஆகும்.
ஆசிரியர்
தொகுஸ்ரீதத்துவநிதி ஆரம்பிப்பது போல்[1], பத்தொன்பதாம் நூற்றாண்டில், மைசூரை ஆண்ட, மூன்றாம் கிருஷ்ணராஜரே (1794 - 1868) இந்நூலின் ஆசிரியராகக்ச் சொல்லப்படுகின்றார். கலையார்வம் மிக்க இம்மன்னர் எழுதியதாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் சொல்லப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.[2]
உள்ளடக்கம்
தொகுஸ்ரீதத்துவநிதியானது, சிவன், திருமால், முருகன், பிள்ளையார், பார்வதி, ஏனைய தேவியர், நவக்கிரகம்) முதலான பல தெய்வங்களின் உருவ இலக்கணங்களை வரையறுக்கின்றது. இதன் ஒவ்வொரு பாகமும் நிதி (செல்வம்) என்றே சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதத்துவநிதியின் ஒன்பது பாகங்களும் வருமாறு[3]
- சக்திநிதி
- விஷ்ணுநிதி
- சிவநிதி
- பிரம்மநிதி
- கிரகநிதி
- வைஷ்ணவநிதி
- சைவநிதி
- ஆகமநிதி
- கௌதுகநிதி
பதிப்புகள்
தொகுமைசூர் பல்கலைக்கழகத்தில், ஸ்ரீதத்துவநிதி எழுதப்பட்ட மூல ஏட்டுச்சுவடியானது இன்றும் வைக்கப்பட்டிருக்கின்றது. அதன் இன்னொரு பிரதி, தற்போதைய மைசூர் அரச குடும்ப வாரிசு ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் வசம் உள்ளது. இதன் திருத்தப்படாத தேவநாகரி வரிவடிவம் மாத்திரம், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, மும்பாயில் பதிப்பிக்கப்பட்டது.
முதல் மூன்று நிதிகளும் அண்மையில் முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளதுடன்,[4] இறுதி கௌதுகநிதியானது, 1996இல் ஒரு ஹதயோக நூலொன்றில் வெளியானது.[5] கௌதுகநிதியில் குறிப்பிடப்பட்டுள்ள 122 யோக ஆசன முறைகள் மிகப்பழைய ஆசனக்குறிப்புகள் என்ற வகையில், யோக உலகில் அதிகம் கொண்டாடப்படுகின்றன.[6]
மேலும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ ஸ்ரீக்ருஷ்ணராஜகம்தீரவவிரசிதவாத மந்த்ர ரஹஸ்யத ஸ்ரீதத்வநிதியேம்ப க்ரந்தவம் சசித்ரவாகி பரேயுவுதக்கே நிர்விக்னமஸ்து: அத சக்திநிதிப்ராரம்ப:
- ↑ mummaDi kRuShNarAja oDeyaru - oMdu cAriTrika adhyana by Dr. R.Gopal & Dr. S.Narendra Prasad,@page=92-94
- ↑ Sri Mummadi Krsihnaraja Wodeyar's 'Sritattvanidhi', Volume-1;shakti nidhi @ pages xviii-xxiv: by Oriental research Institute, University of Mysore, 1997
- ↑ Chief editor, M. Madaiah. Imprint: Mysore : Oriental Research Institute, University of Mysore. Physical Description: v. <1-3 > : col. ill. ; 29 cm. Series Information: (Oriental Research Institute series ; nos. <186, 194, 199 >) Volume Titles: v. 1. Saktinidhi -- v. 2. Visnunidhi -- v. 3. Sivanidhi / chief editor, K.V. Ramesh. Source of citation: DK Agencies, retrieved 1 March 2007.
- ↑ Norman Sjomaன், (1996),The Yoga Tradition of the Mysore Palace, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170173892.
- ↑ Cushman, Anne (Jul–Aug 1999). New Light on Yoga. Yoga Journal. p. 43. பன்னாட்டுத் தர தொடர் எண் 0191-0965. Archived from the original on 2014-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-03-15.
உசாத்துணைகள்
தொகு- Chinmayananda, Swami (1987). Glory of Ganesha. Bombay: Central Chinmaya Mission Trust.
- Annals of the Mysore Royal Family , Part II. Mysore: Government Branch Press. 1922.
- Gopal, R.; Prasad, S. Narendra (2004). mummaDi kRuShNarAja oDeyaru - oMdu cAriTrika adhyana ( Mummadi Krsihnaraja Wodeyar- a Historic Study). Karnataka: Directorate of Archeology and Museums.
- Heras, H. (1972). The Problem of Ganapati. Delhi: Indological Book House.
- Krishan, Yuvraj (1999). Gaņeśa: Unravelling An Enigma. Delhi: Motilal Banarsidass Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1413-4.
- Martin-Dubost, Paul (1997). Gaņeśa: The Enchanter of the Three Worlds. Mumbai: Project for Indian Cultural Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-900184-3-4.
- Ramachandra Rao, S. K. (1992). The Compendium on Gaņeśa. Delhi: Sri Satguru Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7030-828-3. Contains color plate reproductions of the 32 Ganapati forms reproduced from the Sri Tattvanidhi.
- Thapan, Anita Raina (1997). Understanding Gaņapati: Insights into the Dynamics of a Cult. New Delhi: Manohar Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7304-195-4.
- Wodeyar, Mummadi Krsihnaraja (1997). Sritattvanidhi. Oriental Research Institute, University of Mysore.