ஸ்ரீவந்தி சக்ரவர்த்தி

இந்திய நடனக்கலைஞர்

ஸ்ரீவந்தி சக்ரவர்த்தி ( வங்காள மொழி: শৃণ্বন্তি চক্রবর্তী ) என்பவர் ஒரு இந்திய செவ்வியல் நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குநர். இவர் ஒடிசியின் நடன பாணியில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் ஐந்து வயதில் இருந்து நடனத்தைப் பயிலத் தொடங்கினார். பின்னர் இளம் வயதிலேயே ஒரு தொழில்முறை நடனக் கலைஞராக மலர்ந்தார். இவர் நடனக் கல்வியாளர், நடன இயக்குனர், கலைஞர் என்று பல ஆண்டுகள் இங்கிலாந்தில் பணியாற்றினார். கொல்கத்தாவில் ஸ்ரீஜாதி என்ற கலை மையத்தையும் இவர் நிறுவியுள்ளார். அங்கு இவர் பல நடனக் கலைஞர்களுக்கு பயிற்சியளித்து தனது சொந்த நடனக் குழுவை உருவாக்கியுள்ளார். இவரது புதுமையான நடன அமைப்பானது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அண்மையில் இவர் பிரான்சில் பரவலாக ஆடியுள்ளார் மேலும் பாரிசில் பல நடனக் கலைஞர்களுக்கு ஒடிசி நடன வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, சுவீடன், ருமேனியா, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் இவர் நடன பயிற்சி பட்டறைகளை நடத்தியுள்ளார்.

ஸ்ரீவந்தி சக்ரவர்த்தி
பிறப்பு(1983-09-14)14 செப்டம்பர் 1983
இந்தியா, மேற்கு வங்காளம், வர்த்தமான்
பணிஇந்திய செவ்வியல் நடனக் கலைஞர், நடன இயக்குநர்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

ஸ்ரீவந்தி மேற்கு வங்காளத்தில் உள்ள வர்தமானில் பிறந்தார். பின்னர் கொல்கத்தாவுக்கு தனது குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். வர்தமனில் உள்ள புனித சேவியர் பள்ளியிலும், கொல்கத்தாவில் உள்ள ஆக்ஸிலியம் கான்வென்ட்டிலும் படித்தார். இவர் கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் இவரது முதுகலை கலை பட்டப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

ஸ்ரீவந்தி தனது குழந்தைப் பருவத்தில் இருந்து நடனமாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இவர் முதலில் தனது தாயிடத்தில் இருந்து நடனப் பயிற்சியைத் தொடங்கினார். மேலும் இவரது ஐந்து வயதிலேயே ஒடிசி நடனப் பயிற்சியில் சேர்க்கப்பட்டார்.

இவர் முதலில் திருமதி சுதபா தாலுக்தார் மற்றும் திருமதி நந்தினி கோசல். ஆகியோர் நடனத்தில் வழிகாட்டிகளாக இருந்தனர். இவர் கேளுச்சரண மகோபாத்திராவிடம் மேற்கொண்ட பயிற்சிகள் நடனத்தில் சிக்கலான வடிவங்களைக் கற்றுக்கொள்வதில் இவரது திறமைகள் வளர்ந்தன. இந்திய செவ்வியல் நடனத்தை இவர் தொழிலாகத் தேர்ந்தெடுப்பதற்கு இவரது தந்தை ஒரு பெரிய உத்வேகம் அளித்தார். இது வேறு எந்த இந்திய தொழில்முறை கலைஞரின் குடும்பங்களில் பொதுவாக காணப்படாத வழக்கம் ஆகும்.

ஸ்ரீவந்தி தனது முனைவர் பட்ட படிப்பைத் தொடர ஆர்வமாக இருந்தார். அதற்காக இவர் நடன அசைவு சிகிச்சை மற்றும் சமூக நலன் போன்றவற்றைக் கொண்டுவருவதில் பாரம்பரிய நடனத்தின் பங்கு ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினார். முன்னதாக இவர் தனது ஆய்வறிக்கையின் ஒரு பகுதியாக இந்து கோவில் பெண்கள் (தேவதாசி) - தெய்வீக விபச்சாரம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். ஒரு நடனக் கலைஞராக தனது தொழில் வாழ்க்கையில் அர்ப்பணிப்பு காரணமாக இவரால் முனைவர் பட்ட படிப்பைத் தொடர முடியவில்லை.

நடனத் தொழில்

தொகு

ஸ்ரீவந்தி தனது இளம் வயதிலிருந்தே செவ்வியல் நடனத்தில் கடினமான பயிற்சிக்கு தன்னை அர்ப்பணித்தார். ஒரு அதிசயமாக ஸ்ரீவந்தி தன் இளைம் வயதை அடைந்தபோது நடன வடிவத்தில் உயர் நிலையிலான நிபுணத்துவம் பெற்றார்.

15 வயதிற்குள், ஸ்ரீவந்தி ஒரு தொழில்முறை நடனக் கலைஞராக மாறி இருந்தார். இவர் தனது ஆற்றுகைகளில் தனது சொந்த புதுமையான நடனத்தை சேர்த்துக் கொண்டார். 2000 ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் ஸ்ரீஜாதி என்ற தனது சொந்த நடன நிறுவனத்தையும், தனது மாணவர்களை முதன்மையாகக் கொண்டு சொந்த நடனக் குழுவையும் தொடங்கினார். தனி கலைஞராகவும், இவரது நடன குழுவினருடனும், ஸ்ரீவந்தி தொடர்ச்சியாக நடன நிகழ்ச்சிகளை வழங்கினார்.

2006 முதல், ஸ்ரீவந்தி இங்கிலாந்தில் கலா தி ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் தீவிரமாக பணியாற்றினார். பள்ளிகளில் தொடர்ச்சியாக பயிற்சிப் பட்டறைகள் மற்றும் விரிவுரை செயல் விளக்கங்களையும் இவர் நடத்தினார். அன்வில் ஆர்ட்ஸால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்கத்தை மேற்கொண்டார். மேலும் பல்வேறு கலையரங்குகளையும் கலை மையங்களையும் தொடங்கிவைத்தார்.

2010 ஆம் ஆண்டில் இவர் பாரிசுக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஸ்ரீஜாதி என்ற தனது சொந்த நடன அமைப்பைத் தொடங்கினார். கொல்கத்தா மற்றும் பாரிசில் பல நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

ஸ்ரீன்வந்தி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ருமேனியா, சுவீடன் ஆகிய நாடுகளில் பயிற்சிப் பட்டறைகளை நிகழ்த்தியுள்ளார். செவ்வியல் ஒடிசி மற்றும் இவரது சொந்த சோதனை முறையிலான நடன படைப்புகளை இவர் நிகழ்த்தியுள்ளார்.

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீவந்தி_சக்ரவர்த்தி&oldid=3792989" இலிருந்து மீள்விக்கப்பட்டது