வர்த்தமான்

வர்த்தமான் அல்லது பர்த்தமான் (Bardhaman) (Pron: ˈbɑ:dəˌmən) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கில் உள்ள, கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தின் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[2]

வர்த்தமான்
বর্ধমান
பர்த்தமான்
நகராட்சி
கடிகாரச் சுற்று:மேலிருந்து: கர்சன் கேட், வர்த்தமான் அறிவியல் மையம் (வெளிப்புறம்)
துர்கா பூஜை, வணிக வளாகம், சர்வமங்களம் கோயில்
தொடருந்து நிலையம்
மேற்கு வங்காளத்தின் நுழைவு வாயில்
அடைபெயர்(கள்): அமைதி நகரம்*இராஜ பாரம்பரிய நகரம்
வர்த்தமான் is located in மேற்கு வங்காளம்
வர்த்தமான்
வர்த்தமான்
ஆள்கூறுகள்: 23°14′N 87°52′E / 23.233°N 87.867°E / 23.233; 87.867
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்கிழக்கு வர்த்தமான் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • தலைவர்டாக்டர். சொரூப் தத்தா[1]
பரப்பளவு
 • நகராட்சி26.30 km2 (10.15 sq mi)
ஏற்றம்30 m (100 ft)
மக்கள்தொகை (2011)
 • நகராட்சி347,016
 • அடர்த்தி13,000/km2 (34,000/sq mi)
 • பெருநகர்5,22,445
மொழிகள்
 • அலுவல் மொழிகள்வங்காளி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்713101, 713102, 713103, 713104 713141,713149
தொலைபேசி குறியீடு எண்+91-342
வாகனப் பதிவுWB42
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிவர்த்தமான் - துர்க்காப்பூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகள்வர்த்தமான் தெற்கு சட்டமன்றத் தொகுதி
இணையதளம்bardhaman.gov.in

இப்பகுதியில் சமயப் பிரச்சாரங்களை மேற்கொண்ட சமண சமயத்தின் 24ஆவது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரரை சிறப்பிக்கும் பொருட்டு, இந்நகரத்திற்கு வர்த்தமான் எனப் பெயரிடப்பட்டது. வர்த்தமான் என்பதற்கு செழிப்புடன் கூடிய வளமான பகுதி எனப் பொருளாகும்.[3]

புவியியல் தொகு

வர்த்தமான் நகரம், கொல்கத்தாவிற்கு வடமேற்கே பெரும் தலைநெடுஞ்சாலை வழியாக 100 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தின் வழியாக தாமோதர் நதி மற்றும் கங்கை ஆறுகள் பாய்கிறது.[4]

மக்கள் தொகையியல் தொகு

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வர்த்தமான் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 346,639 ஆகும். அதில் 176,391 ஆண்கள் ஆகவும், பெண்கள் 170,248 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு படைத்தவர்கள் 280,160 (87.84 %) ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 965 பெண்கள வீதத்தில் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 27,705 ஆகவுள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 83.42 % ஆகவும், இசுலாமியர்கள் 14.88 % ஆகவும், மற்றவர்கள் 1.70% ஆகவும் உள்ளனர். வங்காள மொழி மற்றும் ஆங்கிலம் பயிலப்படுகிறது.[5]

போக்குவரத்து தொகு

சாலைப் போக்குவரத்து தொகு

வர்த்தமான் நகரத்தின் வழியாக பெரும் தலைநெடுஞ்சாலை செல்கிறது. வர்த்தமான் நகரத்திற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண் 19 (பழைய எண் 2) செல்கிறது.

தொடருந்துகள் தொகு

ஹவுரா - தில்லி செல்லும் அனைத்து தொடருந்துகள் வர்த்தமான் தொடருந்து நிலையம் வழியாக நின்று செல்கிறது. எட்டு நடைமேடைகள் கொண்ட வர்த்தமான் தொடருந்து நிலையம் வழியாக நாள் ஒன்றுக்கு 188 தொடருந்துகள் நின்று செல்கிறது.[6]

கல்வி தொகு

  • வர்த்தமான் பல்கலைக்கழகம்
  • வர்த்தமான் கலை மற்றும் வடிவமைப்புக் கல்லூரி
  • வர்த்தமான் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி
  • வர்த்தமான் மருத்துவம் & வாழ்க்கை அறிவியல் கல்லூரி
  • வர்த்தமான் மருத்துவக் கல்லூரி
  • வர்த்தமான் மன்னர் கல்லூரி
  • வர்த்தமான் சைபர் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம்
  • மன்னர் விஜய் சந்த் பொறியியல் & தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரி
  • மகாராஜ் உதய் சந்த் மகளிர் கல்லூரி
  • பர்த்தமான் பல்கலைக்கழக தொழில் நுட்ப நிறுவனம்
  • பர்த்தமான் பல்கலைக்கழக சட்டக் கல்லூரி
  • பர்த்தமான் விவேகானந்தா மகாவித்தியாலயம்
  • புனித சேவியர் கல்லூரி, பர்த்தமான்

முக்கியத் தலங்கள் தொகு

தட்பவெப்பம் தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், பர்த்துவான், இந்தியா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 26
(78.8)
27.5
(81.5)
34.5
(94.1)
37.44
(99.4)
32.61
(90.7)
34.94
(94.9)
32.2
(90)
32.28
(90.1)
32.39
(90.3)
32
(89.6)
28
(82.4)
26
(78.8)
31.322
(88.38)
தாழ் சராசரி °C (°F) 12
(53.6)
15
(59)
20
(68)
24.89
(76.8)
25.89
(78.6)
26
(78.8)
25
(77)
25
(77)
25
(77)
24.72
(76.5)
17.5
(63.5)
12.5
(54.5)
21.1
(70)
பொழிவு mm (inches) 18
(0.7)
38
(1.5)
33
(1.3)
48
(1.9)
127
(5)
244
(9.6)
348
(13.7)
312
(12.3)
290
(11.4)
157
(6.2)
28
(1.1)
5
(0.2)
137
(5.4)
சராசரி மழை நாட்கள் 4 3 4 6 10 18 23 22 18 11 3 1 123
ஆதாரம்: Weather2[7]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Burdwan Municipality". burdwanmunicipality.gov.in. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Barddhaman Municipality
  3. "Census of India 2011: District Census Handbook, Bardhaman, Part XII B" (PDF). Brief History of the district, pages 9 - 11. Directorate of Census Operations, West Bengal. பார்க்கப்பட்ட நாள் 12 April 2017.
  4. "Maps, Weather, and Airports for Barddhaman, India". fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
  5. Barddhaman Metropolitan Region
  6. Barddhaman Railway Station
  7. "weather2.com". Weather2. 2013. Retrieved on 6 October 2013.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bardhaman
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்த்தமான்&oldid=3570848" இலிருந்து மீள்விக்கப்பட்டது