ஹனு, லடாக்
ஹனு (Hanu அல்லது Hanoo), இந்தியாவின் வடக்கில் மேற்கு இமயமலையில் அமைந்த லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தின் கால்சி வட்டத்தில் அமைந்த ஒரு கிராம ஊராட்சி ஆகும்.[1][2]ஹனு சமவெளியில் அமைந்த ஹனு கிராமம் மேல் ஹனு மற்றும் கீழ் ஹனு இரண்டாகப் பிரிந்துள்ளது.ஹனு கிராமம் 224 வீடுகள் கொண்டுள்ளது.[3]பரோக்பா மக்கள் அதிகம் வாழும் லடாக்கிய கிராமங்களில் ஹனு கிராமமும் ஒன்றாகும்.
ஹனு | |
---|---|
கிராமம் | |
இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் ஹனு கிராமத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 34°35′28″N 76°37′23″E / 34.591°N 76.623°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப்பகுதி | லடாக் |
மாவட்டம் | லே |
வருவாய் வட்டம் | கால்சி |
கிராம ஊராட்சி | ஹனு |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,207 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் --> | 194106 |
புவியியல்
தொகுசிந்து ஆறு மற்றும் சோர்பத் பள்ளத்தாக்கு இடையே அமைந்த ஹனு சமவெளியில் மேல் ஹனு மற்றும் கீழ் ஹனு என இரண்டு பகுதிகளாக ஹனு கிராமம் உள்ளது. ஹனு கிராமத்திலிருந்து புறப்புடும் ஓடை சிந்து ஆற்றில் கலக்கிறது. இதனருகில் தா கிராமம் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ஹனு கிராமம் 224 வீடுகளும், 1207 மக்கள் தொகையும் கொண்டது. அதில் ஆண்கள் 587 மற்றும் பெண்கள் 620 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 190 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 485 ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1 மற்றும் 1204 ஆகவுள்ளனர்.[4]ஹனு கிராமத்தில் பரோக்பா மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council 2014–15. Archived from the original (PDF) on 3 April 2018.
- ↑ Narayanan, Neeraj (July 20, 2020). "A 5000 Year Old Rare Tribe : The Brokpas of Ladakh". onhisowntrip (in ஆங்கிலம்). Archived from the original on August 9, 2020.
- ↑ "Khalsi Population". indiagrowing (in ஆங்கிலம்). Archived from the original on May 16, 2014.
- ↑ "Leh district census". 2011 Census of India (Directorate of Census Operations). http://www.censusindia.gov.in/datagov/CDB_PCA_Census/PCA_CDB_0103_F_Census.xls.
- ஆதாரங்கள்
- Drew, Frederic (1875), The Jummoo and Kashmir Territories: A Geographical Account, E. Stanford – via archive.org