ஹன்வெல்லை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
ஹன்வெல்லை (Hanwella) ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இது இலங்கையின் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் கொழும்பு - இரத்தினபுரி முதன்மைப் பாதையில் கொழும்பில் இருந்து சுமார் 29 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றான களனி ஆற்றுக் கரையில் இந்நகரம் அமைந்துள்ளதால் போர்த்துக்கேயரின் காலத்தில் ஹன்வெல்லை சிறப்புமிக்க நகராகக் காணப்பட்டது. அக்காலத்தில் இது சீதாவக்கை இராச்சியம் எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.[1]
ஹன்வெல்லை | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | மேற்கு |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone) |
• கோடை (பசேநே) | ஒசநே+6 (Summer time) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Lanka Postal Codes". www.lankalinksystems.com.