அம்முராபி

(ஹம்முராபி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹம்முராபி (Hammurabi), பழைய பாபிலோனியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர் ஆவார். இவரின் 42 ஆண்டு ஆட்சி காலத்தில் (கிமு 1792- 1750) மெசொப்பொத்தேமியாவின் பல்வேறு நாடுகளுடன் போர் நடத்தி இவர் இறந்த பொழுது மெசபடோமியா முழுவதும் பாபிலோனியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்காலத்தில் அம்முராபி அவரது சட்டங்கள் காரணமாக நன்கு அறியப்படுகிறார். இந்த சட்டங்கள் மனித வரலாற்றிலேயே முதலாக எழுதப்பட்ட சட்டங்களில் ஒன்றாகும்.

Hammurabi
அம்முராபி
பிறப்புகிமு 1795
பாபிலோன்
இறப்புகிமு 1750
பாபிலோன்
அறியப்படுவதுஉலகின் முதல் சட்டங்களை உருவாக்கியவர்
பட்டம்பாபிலோனியாவின் மன்னர்
பதவிக்காலம்42 வருடம்,கி.மு 1792 முதல் கி.மு 1750 வரை
முன்னிருந்தவர்சின்-முபாளியட்
பின்வந்தவர்சம்சு-இலுனா
துணைவர்அறியப்படவில்லை
பிள்ளைகள்சம்சு-இலுனா

வரலாறு

தொகு

கி.மு.1792 ல் ஹமுராபி, அவர் தந்தையான சின்-முபாளியட்டிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றி பாபிலோன் இராச்சியத்தை கைப்பற்றி அமோரிட்டு வம்ச அரசரானார். அமோரிட் என்பது ரோமானிய அன்பு கடவுளான அமோரிட் பெயரால் அமைந்தது. இவர் கீழ் மெசொப்பொத்தேமியா, மேல் மெசொப்பொத்தேமியா மர்றும் நடு மெசொப்பொத்தேமியா பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டார். பாபிலோனிய கலாச்சாரம் மன்னர் ஹமுராபியின் புகழ் மத்திய கிழக்கு முழுவதும் அறிவாளர்கள் நடுவில் முக்கியத்துவம் பெற்றது. ஹமுராபியின் முன்னோர்கள் நகரத்தின் வெளியே சிறிய பிரதேசத்தில் சிறிய அளவில் கிமு 1894 ல் நிறுவினர். பாபிலோன் அதன் பிறகு ஒரு நூற்றாண்டு காலத்தில் ஈலாம், அசிரியா, இசின், எசுன்னா மற்றும் லார்சா போன்ற நகர இராச்சியங்களின் அரசாட்சி அழிக்கப்பட்டது. எனினும் அவரது தந்தை சின்-முபாளியட் மெசபடோமியா ஒரு சிறிய பகுதியில் ஆட்சியை நிலைநிறுத்த தொடங்கிய பின் கிஷ் மற்றும் சிப்பார் நகரங்களை வெற்றி பெற்று பாபிலோனிய மேலாதிக்கத்தின் கொண்டுவந்தார்.[1]

ஹமுராபி பதவிஏற்ற போது லார்சா ஆற்று படுகை கட்டுப்பாட்டில் போது எசுன்னா அரசின் கட்டுப்பாட்டிலும் டைக்ரிஸ் ஆற்றுப்படுகை ஈலாம் அரசின் கட்டுபாட்டிலும் இருந்தது. இவை இரண்டும் அவ்வப்போது பிற அண்டை நாடுகளின் மீது படையெடுத்து தொல்லை தரும். அவர் முதலில் நகரத்தை சுற்றிலும் வலிமையான சுவரை கட்டினர். பின்னர் பிற நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட போர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் ஒன்றன் பின் ஒன்றாக நாடுகளை கைபற்றி கிமு.1763-இல் மெசொப்பொத்தேமியா சமவெளி முழுவதையும் தன கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
 
ஹமுரபியின் அரசு
அம்முராபி தன்னுடைய ஆட்சி காலத்தில் பல சிறப்பான காரிங்களை செய்தான் (நீர்ப்பாசனத்துறை, வரி வசூலிப்புத்துறை மற்றும் சமயம் சம்பந்தமான காரியங்கள்). முதல் முப்பது ஆண்டு அவனுடைய ஆட்சியில் அவன் ஒரு சிறிய இராச்சியத்தின் அரசானகவே திகழ்ந்தான். அதன் பின்பு அவன் செய்த தொடர் போர்களில் அவன் வெற்றியீட்டி பல இடங்களை கைப்பற்றினான் (லார்சா, எசுன்னா, அசூர், பிற்பாடு மாரி இராச்சியம்). அவனுடைய காலத்தில் தான் மர்டக் (பாபிலோனிய தெய்வம்) பிரபலமான தெய்வமாகியது. அம்முராபி மன்னன் சிறந்த யுத்தங்களை நடத்தியிருந்த போதிலும், எல்லாராலும் மிகவும் மதிக்கப்படும் செயல் அவர் இயற்றிய சட்டங்கள் ஆகும்.

ஹமுராபியின் சட்டங்கள்

தொகு

முதன் முதலாக எழுதப்பட்ட சட்டங்கள் அம்முராபி மன்னனுக்கு 400 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது.இச்சட்டங்கள் 282 சட்டங்களையும் 12 பகுதிகளையும் கொண்டது. அம்முராபி மன்னன் 282 கட்டளைகளை தான் ஆண்ட காலத்தில் எழுதி வைத்திருந்தான்.[2] நாம் தற்காலங்கங்களில் பாவிக்கும் கட்டளைகள் போல் இல்லாவிட்டாலும், அவனுடைய கட்டளைகளில் அவன் நீதியையும், நியாயத்தையும் கடைப்பிடித்தான் என்று தெரிகிறது. அவனுடைய கட்டளைகளை அவன் ஆண்ட ராச்சியம் முழுவதும் பிரகடனப்படுத்தி அதை நடை முறையில் கொண்டுவந்தான்.மேலும் அனைவரும் கொடும் இடங்களில் சட்டங்களை ஒரு நடுகல் தூணில் அன்றைய பாபிலோனே மொழியான அக்கேடியனில் பொறித்து வைத்தான்.அவற்றுள் ஒன்று 1901 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டு பாரிஸின்,லூவர் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 
பாரிஸில் உள்ள சட்டங்கள் பொறிக்கப்பட்ட நடுகல்
சட்டங்கள் பொறிக்கப்பட்ட நடுகலின் மேல் சாமாஷ் கடவுளிடம் இருந்து சட்டங்களை பெறுகின்றவாறு செதுக்கப்பட்டது.மேலும் ஹம்முராபி மக்களுக்கு சட்டங்களை கொண்டுவர கடவுள்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் என சித்தரிக்கிறது. யூத பாரம்பரியத்தில் மோசே மற்றும் இவரின் சட்டங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகள் இரண்டு யூத பின்னணியில் ஒரு பொதுவான மூதாதையர் இருந்ததை தெரிவிக்கின்றன.

இவனுடைய ஆண்ட காலங்களை ஆதி பாபிலோனுடைய பொற்காலம் என்று வர்ணிப்பர்.

ஹம்முராபி அரசனின் சட்டங்கள் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது போன்ற கட்டளைகள்.

அம்முராபி மன்னனுடைய சில சட்டங்கள்:

  • சட்டம் 59: ஒரு மனிதன் உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு தோட்டத்தில் ஒரு மரம் வெட்டினால் அவன் அரை மானா(பபிலோனிய அளவுமுறை) வெள்ளி அபராதமாக செலுத்த வேண்டும்.
  • சட்டம் 55:ஒரு மனிதன் அவனது பாசன கால்வாயை திறந்து அவன் கவனக்குறைவால் அடுத்தடுத்த வயல்கள் பாதிக்கப்பட்டால் அவன் அவர்களுக்கும் சேர்த்து தானியங்களை தர வேண்டும்.
  • சட்டம் 168:ஒரு மனிதன் தனது மகன் செய்த குற்றத்திற்காக அவனது சொத்துரிமையை நீதிபதிகள் முன்னிலையில் நீக்கலாம் மற்றும் மகன் குற்றம் செய்யவில்லை என்றால் வழக்கைத் தள்ளுபடி செய்யலாம்.
  • சட்டம் 169: ஒருவன் தன தந்தைக்கு எதிராக குற்றம் இழைத்தால் முதல் தடவை மன்னிக்கலாம் அனால் இரண்டாம் முறை அவனது சொத்துரிமை நீக்கப்படும்
  • சட்டம் 8: ஒருவன் ஒரு கால்நடை,ஆடு,கழுதை அல்லது ஒரு பன்றி அல்லது ஒரு ஆடு திருதினால், திருடன் அதற்காக முப்பது மடங்கு பணம் செலுத்த வேண்டும் அப்பணம் கடவுள் அல்லது நீதிமன்றதிற்கு சொந்தமாகிவிடும்.அவை அரண்மனையை சேர்ந்தவருடைய விலங்கெனில் அவன் பத்து மடங்கு பணம் செலுத்த வேண்டும்.திருடனிடம் அபராத பணம் இல்லை எனில் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
  • சட்டம் 195: ஒரு மகன் தன்னுடைய தந்தையுடன் பிரச்சனைப்பட்டால் அவனுடைய கைகள் வெட்டப்பட வேண்டும்.
  • சட்டம் 196: கண்ணுக்கு கண் பிடுங்கப்படுதல் வேண்டும்.
  • சட்டம் 197: யாராவது ஒருவனுடைய எலும்புகளை முறித்தால், அவனுடைய எலும்பும் முறிக்கப்பட வேண்டும்.
  • சட்டம் 218-219: ஒரு மருத்துவரின் தவறான சிகிச்சையால் ஒரு மனிதன் பலத்த காயம் அடைந்தாலோ மரணம் அடைந்தாலோ,பார்வையிழந்தலோ மருத்துவரின் விரல்கள் வெட்டப்படும்.அதுவே வேறு ஒருவரின் அடிமை இறந்தால் அவருக்கு இன்னொரு அடிமையை வாங்கித்தர வேண்டும்.
  • சட்டம் 229-232: ஒரு கட்டிடம் சரியாக கட்டப்படாமல் அதிலுள்ளவர்கள் இறந்தால் அக்கட்டடத்தை கட்டியவர் கொள்ளப்படுவர்.அதேபோல் கட்டிட உரிமையாளரின் மகன் இறந்தால் கட்டிக் கொடுப்பவரின் மகனும் கொல்லப்பட வேண்டும்.பொருட்சேதம் மட்டும் எற்பட்டால் புது வீடு கட்டி கொடுத்தால் போதுமானது.
  • சட்டம் 21: ஒருவன் அத்துமீறி ஒரு வீட்டிற்குள் புகுந்தால் எல்லார் முன்னிலையிலும் அவனை தூக்கிலிடலாம்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்முராபி&oldid=3738581" இலிருந்து மீள்விக்கப்பட்டது