இசின் (Isin)[1] அரபு மொழி: Ishan al-Bahriyat) தற்கால ஈராக் நாட்டின் அல்-குவாதிசியா ஆளுநகரகத்தில் அமைந்த பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். 1.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இசின் தொல்லியல் மேடு, பண்டைய நிப்பூர் நகரத்திற்கு தெற்கே 20 மைல் தொலைவில் உள்ளது. இசின் நகரத்தின் தொல்லியல் மேட்டை 1973 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்த போது இதன் தொல் பழமை அறியப்பட்டது.[2][3][4][5][6][7][8][9]

இசின்
இடது:ஆப்பெழுத்து களிமண் பலகை. பழைய பாபிலோன், கிமு 1900-1700
இடது: சுமேரிய ஆப்பெழுத்துடன் கூடிய் அடிக்கல் கல்.
இசின் is located in Near East
இசின்
Shown within Near East#Iraq
இசின் is located in ஈராக்
இசின்
இசின் (ஈராக்)
இருப்பிடம்இசான் அல்-பக்கிரியாத், அல் - காதிசிய மாகாணம், ஈராக்
பகுதிகீழ் மெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்31°53′06″N 45°16′07″E / 31.88500°N 45.26861°E / 31.88500; 45.26861
வகைகுடியிருப்பு & தொல்லியல் களம்
ஆப்பெழுத்துகளில் புகழ்ச்சி செய்யுள் கொண்ட களிமண் பலகை

மே மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்தில் கிமு 3000 ஆண்டின் நடுவில் உபைதுகள் காலத்தில் இசின் நகரம் தோன்றியது. மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியின் முடிவில் இசின் நகரம் ஈலாமியர்களின் தாக்குதல்களால் அழிக்கப்பட்டது.

பின்னர் கிமு 1531-இல் காசிட்டு மக்கள் பாபிலோனை கைப்பற்றி, இசின் நகரத்தை மறுசீரமைத்தனர்.

இசின் நகர இராச்சிய ஆட்சியாளர்கள்

தொகு
மன்னர் இசினின் மகன் தாக்கியாவின் முத்திரை
ஆட்சியாளர் ஆட்சிக் காலம் குறிப்பு
இசுபி-இர்ரா கிமு 1953  – கிமு 1921  மூன்றாவது ஊர் வம்ச மன்னர் இப்பி-சுவேனின் சமகாலத்தவர்
சு-இலிசு கிமு 1920  – கிமு 1911  இசுபி-இர்ராவின் மகன்
இத்தின்-தகான் 1910 கிமு – 1890 கிமு சு-இலிசுவின் மகன்
இஷ்மே-தகான் 1889 கிமு – 1871 கிமு இத்தின்-தகானின் மகன்
லிபித்-எஸ்தர் 1870 கிமு– 1860 கிமு லார்சா இராச்சிய மன்னர் குங்குன்னமின் சமகாலத்தவர்
ஊர்-நினுர்தா 1859 கிமு – 1832 கிமு லார்சா இராச்சிய மன்னர் அபிசரேவின் சமகாலத்தவர்
புர்-சுவேன் 1831 கிமு – 1811 கிமு ஊர்-நினுர்தாவின் மகன்
லிபித்-என்லில் 1810 கிமு – 1806 கிமு புர்-சுவேனின் மகன்
எர்ரா-இமித்தி 1805 கிமு – 1799 கிமு
என்லில்-பானி 1798 கிமு – 1775 கிமு பாபிலோன் மன்னர் சுமு லா-எல்லின் சமகாலத்தவர்.
ஜாபியா 1774 கிமு – 1772 கிமு லார்சா இராச்சிய மன்னர் சின்-இக்குசாமின் சமகாலத்தவர்
இதர்-பிசா 1771 கிமு – 1768 கிமு
ஊர்-து-குகா 1767 கிமு – 1764 கிமு
சுவேன்-மகிர் 1763 கிமு – 1753 கிமு
தாமிக்-இலிசு 1752 கிமு – 1730 கிமு சுவேன்-மகிரின் மகன்

பண்பாடு மற்றும் இலக்கியம்

தொகு
 
மன்னர் பர்-சுவானின் உருளை முத்திரை

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ETCSL. Sumerian King List . Accessed 19 Dec 2010.
  2. Excavations in Iraq 1972-73, Iraq, vol. 35, no. 2, pp. 192, 1973
  3. Excavations in Iraq 1973-74, Iraq, vol. 37, no. 1, pp. 57-58, 1975
  4. Excavations in Iraq 1975, Iraq, vol. 38, no. 1, pp. 69-70, 1976
  5. Excavations in Iraq 1977-78, Iraq, vol. 41, no. 2, pp. 150, 1979
  6. Excavations in Iraq 1983-84, Iraq, vol. 47, pp. 221, 1985
  7. Excavations in Iraq 1985-86, Iraq, vol. 49, pp. 239-240, 1987
  8. Excavations in Iraq 1987-88, Iraq, vol. 51, pp. 256, 1989
  9. Excavations in Iraq 1989–1990, Iraq, vol. 53, pp. 175-176, 1991

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Isin
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசின்&oldid=3732258" இலிருந்து மீள்விக்கப்பட்டது