மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம்

மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம் (Early Dynastic period (சுருக்கமாக: ED period or ED) பண்டைய மெசொப்பொத்தேமியாவில் அமைந்த தற்கால ஈராக் (சுமேரியா) நாட்டில் உரூக் மற்றும் செம்தேத் நசிர் காலத்திற்குப் பின்னர் கிமு 2900 முதல் கிமு 2350 வரை விளங்கிய தொல்பொருள் வம்ச காலம் ஆகும். மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றில் இக்காலம் ஒரு பகுதியாகும். இக்காலத்தில் எழுத்துக் கலை வளர்ச்சி, நகரங்கள் கட்டுமானம் மற்றும் சிறு நகர இராச்சியங்கள் தோன்றத் துவங்கியது.

மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம்
கிமு 2900 – 2350
புவியியல் பகுதிமெசொப்பொத்தேமியா
காலப்பகுதிவெண்கலக் காலம்
காலம்கிமு 2900 – 2350
வகை களம்எசுன்னா, கபாஜா, அக்ரப், அஸ்மர் தொல்லியல் மேடுகள்
முக்கிய களங்கள்எரிது, லார்சா, சிப்பர், இசின், கிஷ், ஊர், மாரி
முந்தியதுசெம்தேத் நசிர் காலம்
பிந்தியதுஅக்காடியப் பேரரசு
மெசொப்பொத்தேமியாவின் வரைபடம்
கிமு 2500-இல் எப்லா இராச்சியம் மற்றும் லெவண்ட் பகுதியில் ஆதாத் மழைக்கடவுள் வழிபாடு
தலையில் பெட்டி சுமக்கும் மனிதனில் உலோகச் சிலை, காலம் கிமு 2900 - 2600

மெசொப்பொத்தேமியாவின் இத்துவக்க வம்ச காலத்தில் சுமேரியாவில் தெற்கில் (கீழ் மெசொப்பொத்தேமியா) எரிது, உரூக், ஊர், லகாசு, நிப்பூர், உம்மா போன்ற புகழ் பெற்ற நகர இராச்சியங்கள் தோன்றியது.

மேல் மெசொப்பொத்தேமியா பகுதிகளில் கிஷ், இசின், மாரி, டெல் பராக் மற்றும் எப்லா நகர இராச்சியங்கள் தோன்றியது.

மெசொப்பொத்தேமியாவில் கிபி 1800 முதல் ஊர், எசுன்னா, கிர்சு, காபாஜா போன்ற தொல்லியல் மேடுகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அகழாய்வில் ஆப்பெழுத்துகளுடன் கூடிய களிமண் பலகைகளில் உருவங்களுடன் கூடிய உருளை முத்திரைகள் போன்ற தொல்பொருட்கள் கண்டறியப்பட்டது. பின் தொடரப்பட்ட பண்டைய அண்மை கிழக்கு பகுதிகளின் அகழ்வாராய்ச்சிகளில் மெசொப்பொத்தேமியாவின் பல தொல்லியல் மேடுகளில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டது.

காலக் கணிப்புகள்

தொகு

செம்தேத் நசிர் காலத்திற்குப் பின்னர் தோன்றிய மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்திற்கு பின்னர் அக்காதியர்கள் காலம் நிலவியது. அக்காதியப் பேரரசின் கீழ் முதன்முதலில் முழு மெசொப்பொத்தேமியா இருந்தது. மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம் கிமு 2900 – 2350 வரை என கணிக்கப்பட்டுள்ளது.[1][2]

மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்தை, தொல்லியல் ஆய்வாளர்கள் மூன்று காலமாக பிரித்துள்ளனர்.[1][3][4][5]

காலம் கால வரிசை
கிமு
Short Chronology
All dates BC
முதல் வம்ச காலம் 2900–2750/2700 2800–2600
இரண்டாம் வம்ச காலம் 2750/2700–2600 2600–2500
மூன்றாம் வம்ச காலம் (அ) 2600–2500/2450 2500–2375
மூன்றாம் வம்ச காலம் (ஆ) 2500/2450–2350 2375–2230

கீழ் மெசொப்பொத்தேமியாவின் உரூக் காலம் (கிமு 3300–3100) மற்றும் செம்தேத் நசிர் காலம் (கிமு 3100–2900) காலங்களுக்குப் பின் தோன்றிய [6] மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்தின் முதல் பகுதி (கிமு 2900–2750/2700) குறைவாக அறியப்படுகிறது.

இரண்டாவது வம்ச காலத்தில் (கிமு 2750/2700–2600) கீழ் மெசொப்பொத்தேமியாவில் எழுத்து, மொழி, கலை, இலக்கியம், மற்றும் தொழில்கள் வளரத் துவங்கியது. கீழ் மெசொப்பொத்தேமியாவை கில்கமெஷ், என்மெர்கர் மற்றும் ஆகா போன்ற புகழ்பெற்ற மன்னர்கள் ஆண்டனர். மேலும் உலகின் முதல் காவியமான கில்கமெஷ் காப்பியம் எழுதப்பட்டது.[7]

மெசொப்பொத்தேமியாவின் மூன்றாவது வம்ச ஆட்சிக் காலத்தில் (கிமு 2600–2350 ) ஆப்பெழுத்துக் கலை வளர்ச்சியடைந்திருந்தது. மேல் மெசொப்பொத்தேமியாவில் அரசியல் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்திருந்தது. ஊர், எல்பா, லகாசு எசுன்னா, கபாஜா, அக்ரப், எரிது, லார்சா, சிப்பர், கிஷ், மாரி போன்ற நகர இராச்சியங்கள் பெரும்புகழுடன் விளங்கியது.

அக்காதியப் பேரரசர் சர்கோன் போன்ற மன்னர்கள் மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்சங்களின் ஆட்சியை படிப்படியாக முடிவிற்கு கொண்டு வந்தனர்.[8][9][10][11]

துவக்க வம்ச இராச்சியங்கள் மற்றும் மன்னர்கள்

தொகு
வம்சங்கள் காலம் முக்கிய ஆட்சியாளர்கள் நகரங்கள்
சுமேரியாவின் தொன்ம மன்னர்கள் அலுலிம், துமுசித்து, என்-மேன் -துர் - அனா, சிசுத்திரா
மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச இராச்சியங்களைக் குறிக்கும் வரைபடம் (clickable map)
கிஷ் வம்சம் கிமு 2900-2600 எடானா, என்மெபாரகேசி
உரூக்கின் முதல் வம்சம் என்மெர்கர், லுகல்பந்தா, துமுசித்து, கில்கமெஷ்
ஊரின் முதல் வம்சம் கிமு 2500-2400 மெஸ்கலாம்துக், மெசன்னேபாத, புவாபி
உரூக்கின் 2-ஆம் வம்சம் என்சகுசன்னா
லகாசின் முதல் வம்சம் கிமு 2500-2300 ஊர் - நன்சி, என்னாட்டும், என் அன்னா - தும் I, எண்டெமேனா, உருக்காசினா
அதாப் வம்சம் லுகல் - அன்னி - முண்டு
கிஷ்சின் 3-ஆம் வம்சம் கிமு 2500-2330 குபாபா
உரூக்கின் 3-ஆம் வம்சம் கிமு 2294 - 2270 லுகல் - சகேசி

மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச கால ஆட்சிக்குப் பின்னர் அக்காத் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு அக்காடியப் பேரரசு (கிமு 2334 – 2154) எழுச்சி கொண்டது.

புவியியல் அமைப்பு

தொகு

கீழ் மெசொப்பொத்தேமியா

தொகு
 
கீழ் மெசொப்பொத்தேமியாவின் பண்டைய உம்மா நகரத்தின் உசும்கல்லின் சிற்பத்தூண், காலம் கிமு 2900-2700 [12]

உரூக் காலத்திற்கு பின்னர் கீழ் மெசொப்பொத்தேமியாவில் துவக்க வம்ச ஆட்சிகளின் காலத்தில் செமிடிக் மொழிகள் பேசிய முதல் நகரக் குடியிருப்புகளும், நகர இராச்சியங்களும், ஆப்பெழுத்து முறைகளும் தோன்றத் துவங்கியது. துவக்க வம்ச ஆட்சிக் காலத்தில் சுமேரிய நாகரிகம் உச்சத்தில் இருந்தது.

 
ஊரின் முதல் வம்ச மன்னரின் தங்கத்தாலான தலைக்கவசம், கிமு 2500
 
தங்க வளையல், கிமு 3000

துவக்க வம்ச ஆட்சிக் காலத்தில் சுமேரியாவில் கிஷ் நாகரிகம் செழித்திருந்தது.[13][14][15] கீழ் மெசொப்பொத்தேமியாவில் பாயும் புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகளால் வேளாண்மை செழித்து விளங்கியது. பார்லி, பேரிச்சம் பழ மரங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் பயிரிடப்பட்டன. ஆடு போன்ற விலங்குகளை கால்நடை வளர்ப்பு விலங்களாக வளர்த்தனர்.[16] துவக்க வம்ச ஆட்சியில் பல நகரங்களும், நகர இராச்சியங்களும் தோன்றியதால் கீழ் மெசொப்பொத்தேமியாவில் மக்கள்தொகை பெருகியது.[17][18]

 
துவக்க வம்ச காலம் முதல் இன்று வரை தொடர்ந்து இருக்கும் தெற்கு ஈராக்கின் யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் பேரீச்சம் மரத்தோட்டங்கள்

துவக்க வம்ச ஆட்சிக் காலங்களில் ஊர், எல்பா, லகாசு எசுன்னா, கபாஜா, அக்ரப், எரிது, லார்சா, சிப்பர், கிஷ், மாரி போன்ற நகர இராச்சியங்கள் பெரும்புகழுடன் விளங்கியது

 
அதாப் நகரத்தில் சுமேரியர்களின் மன்னர் லுகல்லின் சிலை

,

 
சுமேரிய உருளை முத்திரை, கிமு 2500 - 2300
 
கீழ் மெசொப்பொத்தேமியாவின் ஊர் நகரத்தின் அரச கல்லறையில் கண்டெடுத்த தங்கத்திலான ஆட்டின் சிற்பம்
 
களிமண் உருளையில் லகாசு மற்றும் உரூக் இராச்சிய மன்னர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், கிமு 2500
 
தங்க வாட்கள், ஊரின் கல்லறை, கிமு 26000
 
போர்க் கருவிகள், கிமு 2600
 
தேரில் மன்னர் என்னாட்டம் பருந்துடன் செல்லும் சிற்பம், காலம் கிமு 2450
 
உருளை முத்திரையில் தொன்ம காட்சிகள்
 
உருளை முத்திரையில் எருது-மனிதன், மீசையுடன் நாயகன் மற்றும் சிங்கம் - கிமு 2600 - 2300

படக்காட்சிகள்

தொகு

=

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Pruß, Alexander (2004). Lebeau, Marc; Sauvage, Martin (eds.). Atlas of Preclassical Upper Mesopotamia. Subartu. Vol. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2503991203.
  2. Pollock, Susan (1999), Ancient Mesopotamia. The Eden that never was, Case Studies in Early Societies, Cambridge: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521575683
  3. Evans, Jean M. (2007). "The Square Temple at Tell Asmar and the Construction of Early Dynastic Mesopotamia, ca. 2900-2350 B.C.E.". American Journal of Archaeology 111 (4): 599–632. doi:10.3764/aja.111.4.599. https://archive.org/details/sim_american-journal-of-archaeology_2007-10_111_4/page/599. 
  4. Postgate, J.N. (1992), Early Mesopotamia. Society and Economy at the Dawn of History, London: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415110327
  5. van de Mieroop, M. (2007), A History of the Ancient Near East, ca. 3000-323 BC, Malden: Blackwell, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0631225528
  6. Huot, Jean-Louis (2004), Une archéologie des peuples du Proche-Orient. Des peuples villageois aux cités-États (Xe-IIIe millénaire av. J.-C.), Paris: Errances, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-87772-268-1
  7. Lormier, M. (2008), Stratigraphies comparées au IIIe millénaire au pays de Sumer. Études de cas de Kish, Nippur et des cités de la vallée de la Diyala, UVSQ
  8. Nissen, H. (1993). "Settlement Patterns and Material Culture in the Akkad Period: Continuity and Discontinuity". In Liverani, M. (ed.). Akkad, the first World Empire: Structure, Ideology, Traditions. Padua. pp. 91–106. இணையக் கணினி நூலக மைய எண் 718254288.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  9. Gibson, McGuire; McMahon, A. (1995), "Investigation of the Early Dynastic-Akkadian Transition: Report of the 18th and 19th Seasons of Excavation in Area WF, Nippur", Iraq, 57: 1–39, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/4200399
  10. Matthews, D. (1997), "The Early Dynastic-Akkadian Transition Part I: When Did the Akkadian Period Begin?", Iraq, 59: 1–7, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/4200433
  11. Gibson, McGuire; McMahon, A. (1995), "The Early Dynastic-Akkadian Transition Part II: The Authors' Response", Iraq, 59: 9–14, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/4200434
  12. "Stele of Ushumgal". www.metmuseum.org.
  13. Gelb, I. (1981), "Ebla and the Kish Civilization", in Cagni, L. (ed.), La Lingua di Ebla, Naples, pp. 9–72, இணையக் கணினி நூலக மைய எண் 8567807{{citation}}: CS1 maint: location missing publisher (link)
  14. Gelb, I. (1992), "Mari and the Kish Civilization", in Young, G.D. (ed.), Mari in Retrospect, Winona Lake, pp. 121–202, இணையக் கணினி நூலக மைய எண் 24626515{{citation}}: CS1 maint: location missing publisher (link)
  15. Steinkeller, P. (1993), "Early Political Development in Mesopotamia and the Origins of the Sargonic Empire", in Liverani, M. (ed.), Akkad, the first World Empire: structure, ideology, traditions, Padua, pp. 107–129, இணையக் கணினி நூலக மைய எண் 718254288{{citation}}: CS1 maint: location missing publisher (link)
  16. Benoit, Agnès (2003), Art et archéologie: les civilisations du Proche-Orient ancien, Manuels de l'école du Louvre, Paris: RMN, இணையக் கணினி நூலக மைய எண் 53096453
  17. McCormick Adams, Robert (1981), Heartland of Cities: Surveys of Ancient Settlement and Land Use on the Central Floodplain of the Euphrates (PDF), Chicago: Chicago University Press
  18. Ur, J. (2012), "Southern Mesopotamia", in Potts, D.T. (ed.), A Companion to the Archaeology of the Ancient Near East, Malden, pp. 540–544, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-8988-0{{citation}}: CS1 maint: location missing publisher (link)

மேலும் படிக்க

தொகு
Ascalone, Enrico. 2007. Mesopotamia: Assyrians, Sumerians, Babylonians (Dictionaries of Civilizations; 1). Berkeley: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-25266-7 (paperback).
Bottéro, Jean, André Finet, Bertrand Lafont, and George Roux. 2001. Everyday Life in Ancient Mesopotamia. Edinburgh: Edinburgh University Press, Baltimore: Johns Hopkins University Press.
Crawford, Harriet E. W. 2004. Sumer and the Sumerians. Cambridge: Cambridge University Press.
Frayne, Douglas. 2008. Pre-Sargonic Period: Early Periods, Volume 1 (2700-2350 BC), University of Toronto Press.
Leick, Gwendolyn. 2002. Mesopotamia: Invention of the City. London and New York: Penguin.
Lloyd, Seton. 1978. The Archaeology of Mesopotamia: From the Old Stone Age to the Persian Conquest. London: Thames and Hudson.
Nemet-Nejat, Karen Rhea. 1998. Daily Life in Ancient Mesopotamia. London and Westport, Conn.: Greenwood Press.
Kramer, Samuel Noah (1963). The Sumerians: Their History, Culture and Character. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-45238-7.
Kramer, Samuel Noah. Sumerian Mythology: A Study of Spiritual and Literary Achievement in the Third Millennium BC.
Roux, Georges. 1992. Ancient Iraq, 560 pages. London: Penguin (earlier printings may have different pagination: 1966, 480 pages, Pelican; 1964, 431 pages, London: Allen and Urwin).
Schomp, Virginia. Ancient Mesopotamia: The Sumerians, Babylonians, And Assyrians.
Sumer: Cities of Eden (Timelife Lost Civilizations). Alexandria, VA: Time-Life Books, 1993 (hardcover, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8094-9887-1).
Woolley, C. Leonard. 1929. The Sumerians. Oxford: Clarendon

Press.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Early Dynastic
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Language