மெசொப்பொத்தேமியாவின் வரலாறு

மெசொப்பொத்தேமியாவின் வரலாறு, கீழ் மெசொப்பொத்தேமியாவில் சுமேரிய நாகரிகம் தோன்றிய நாள் முதல் அறியப்படுகிறது. கிமு 4000 ஆண்டு முதல் இதன் தொல்பொருள் பண்பாட்டு வரலாறு, பண்டைய அண்மை கிழக்கு பகுதியில் தொல்லியல் மேடுகளில் மேற்கொண்ட அகழ்வாய்வுகள் மூலம் அறியப்படுகிறது. பழைய கற்காலம் முதல் துவக்க கால புதிய கற்காலம் வரையில் மேல் மெசொப்பொத்தேமியாவில் மக்கள் குடியிருப்புகள் தோன்றிய போது, பிந்தைய புதிய கற்காலத்தில் கீழ் மெசொப்பொத்தேமியாவில் யூப்பிரடீஸ் ஆறு மற்றும் டைகிரிசு ஆறு பாயும் வண்டல் மண் சமவெளிகளில் மக்கள் குடியிருப்புகள் தோன்றியது. துவக்க வெண்கல காலத்தில் மெசொப்பொத்தேமியா மனித நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கியது. குறிப்பாக சுமேரிய நாகரீகம் பெரிதும் பேசுபொருளாக உள்ளது.

மெசொப்பொத்தேமியாவின் புவியியல் பரப்பு, அடர் பச்சை நிறத்தில்

கிமு 4000-இல் கீழ் மெசொப்பொத்தேமியாவில் தோன்றிய முதல் நகரமாக உரூக் விளங்கியது. புது அசிரியப் பேரரசு (கிமு 911–கிமு 609) மற்றும் புது பாபிலோனியப் பேரரசுகளுக்குப் பின்னர் உரூக் நகரத்தை கிமு 539-இல் பாரசீக அகமானிசியப் பேரரசினர் கைப்பற்றினர்.

மெசொப்பொத்தேமியாவின் சுருக்க அமைப்பு

தொகு
 
கிமு 7500-இல் வளமான பிறை பிரதேச பரப்புகளில், மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்திய தொல்லியல் மேடுகள்

பண்டைய கிரேக்க மொழியில் மெசொப்பொத்தேமியா எனில் இரு ஆறுகளுக்கிடையே உள்ள பகுதி எனப்பொருளாகும். மெசொப்பொத்தேமியாவிற்கு இப்பெயர் கிரேக்கர்கள் கிமு 4000-இல் இட்டனர். புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகளுக்கிடையே மெசொப்பொத்தேமியா அமைந்துள்ளது. புறாத்து ஆற்றிற்கு கிழக்கே அமைந்த பகுதியை வடக்கு சிரியா ஆகும்.[1]

மெசொப்பொத்தேமியாவின் பகுதிகளாக தற்கால முழு ஈராக்க்கும், சிரியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள், துருக்கியின் தென்கிழக்கு பகுதிகள் மற்றும் மேற்கு ஈரானின் பண்டைய ஈலாம் பகுதிகளைக் கொண்டிருந்தது.[2] தெற்கே பாரசீக வளைகுடா முதல். வடக்கே சிஞ்சார் உள்ளிட்ட சக்ரோசு மலைத்தொடர்களையும் விரிந்த பகுதிகள் மெசொப்பொத்தேமியாவாக குறிக்கப்பட்டது.[3][4][5] புவியில் அடிப்படையில் மேட்டு நிலப்பகுதியான வடக்கு மெசொப்பொத்தேமியாவை மேல் மெசொப்பொத்தேமியா என்றும் யூப்பிரடீஸ், டைகிரிஸ் ஆறுகளின் வடிநிலப்பரப்புகளை தெற்கு மெசொப்பொத்தேமியாவை கீழ் மெசொப்பொத்தேமியா என்றும் குறிக்கப்பட்டது.[6]

யூப்பிரடீஸ்-டைகிரிஸ் ஆறுகளுக்கிடையே அமைந்த பாக்தாத் நகரம் உள்ளிட்ட மேல் மெசொப்பொத்தேமியாவை அல்-ஜெசிரா என்றும் அழைத்தனர்.[3] பாக்தாத் நகரம் முதல் பாரசீக வளைகுடா வரையிலான பகுதிகளை கீழ் மெசொப்பொத்தேமியா எனப்பட்டது.[6]

மெசொப்பொத்தேமியாவின் காலக்கோடுகள்

தொகு

தொல்லியல் அகழ்வாய்வு ஆய்வுகளின்படி, மெசொப்பத்தோமியாவின் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) (கிமு 10,000 – கிமு 8700), மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) (கிமு 8700 – 6800), அசுன்னா பண்பாடு (கிமு 6000 - ?), சமார்ரா பண்பாடு (கிமு 5700–4900), ஹலாப் பண்பாடு (கிமு 6000–5300), உபைது பண்பாடு (கிமு 5900–4400), உரூக் பண்பாடு - (கிமு 4400– கிமு 3100), சுமேரிய நாகரிகம் - (கிமு 4500 - கிமு 1900), செம்தேத் பண்பாடுகள் (கிமு 3100 – கிமு 2900) விளங்கியது.[7] வரலாறு ஆய்வுகளின் படி செமித்திய மொழிகளில் ஒன்றான கிழக்கு செமித்திய மொழியின் கிளையான அக்காதிய மொழியை பேசிய அக்காடியப் பேரரசு முதன்முதலில் மெசொப்பொத்தேமியாவை கிமு 2334 முதல் கிமு 2154 முடிய ஆண்டது. பின்னர் பழைய அசிரியப் பேரரசு கிமு 2025 – 1378 வரை ஆண்டது.

முதல் பாபிலோனியப் பேரரசு கிமு 1830 முதல் கிமு 1531 வரை ஆண்டனர். மூன்றாவது ஊர் வம்ச மன்னர்கள் பபிலோனியாவை கிமு 2112 முதல் 2004 முடிய 108 ஆண்டுகள் ஆண்டனர்.[8][9] பின்னர் பழைய அசிரியப் பேரரசு (கிமு 1600 - 1100), இட்டைட்டு பேரரசு (கிமு 1,600 - கிமு 1,178 ), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1392 – கிமு 934) , புது அசிரியப் பேரரசு (கிமு 911 - கிமு 609), புது பாபிலோனியப் பேரரசு (கிமு 7-ஆம் நூற்றாண்டு 6-ஆம் நூற்றாண்டு), மீடியாப் பேரரசு (கிமு 678 – கிமு 549), செலூக்கியப் பேரரசு (கிமு 312 – கிமு 63), தாலமைக் பேரரசு (கிமு 305 – கிமு 30), பார்த்தியப் பேரரசு (கிமு 3-ஆம் நூற்றாண்டு - கிபி 3-ஆம் நூற்றாண்டு), ஆர்மீனிய இராச்சியம் (கிமு 321 - கிபி 428), உரோமைப் பேரரசு (கிமு 2 -கிபி 7ஆம் நூற்றாண்டு), சாசானியப் பேரரசு (கிபி 224 – 651), பைசாந்தியப் பேரரசு - (கிபி 341 - கிபி 7-ஆம் நூற்றாண்டு), இறுதியில் ராசிதீன் கலீபாக்கள் (கிபி 632 – 661) ஆண்டனர்.

வரலாற்றுக்கு முந்தைய காலம்

தொகு

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்

தொகு
 
பெருவயிறு மலை தொல்லியல் மேடு தென்கிழக்கு துருக்கி

மெசொப்பொத்தேமியாவின் வடக்கில் அமைந்த சக்ரோசு மலைத்தொடர் அடிவாரப் பகுதிகளுக்கும், புறாத்து ஆறு மற்றும் டைகிரிஸ் ஆறு பாயும் பகுதிகளுக்கிடையே கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மக்கள் குடியிருப்புகள் தோன்றத் துவங்கின.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) காலத்தில் (கிமு 10,000–8,700) மெசொப்பொத்தேமியாவில் வேளாண்மைத் தொழில் அறிமுகமாகியது. மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) காலத்தில் (கிமு 8700–6800) மக்கள் வேளாண்மை செய்வதுடன் காட்டு விலங்குகளில் ஆடு, மாடு, பூனை, ஒட்டகம், பன்றி போன்றவைகளை வீட்டு விலங்குகளாக மாற்றி வளர்த்தனர்.

இக்காலத்தில் நூத்துபியப் பண்பாடு வளர்ச்சியடைந்தது.[10][11] தென்கிழக்கு துருக்கியின் பெருவயிறு மலையின் தொல்லியல் மேடுகளில் கிடைத்த வேட்டைக் கருவிகள் போன்ற தொல்பொருட்கள், மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) மற்றும் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) காலத்திய பெரும் வேட்டை சமூகத்தினரது என அறியமுடிகிறது.[12][13]

செப்புக் காலம்

தொகு
 
மெசொப்பொத்தேமியாவின் வடக்கில் அசுன்னா பண்பாடு (கிமு 7000 - 5000), வடமேற்கில் ஹலாப் பண்பாடு, நடுவில் சமார்ரா பண்பாடு, தென்கிழக்கில் உபைதுகள் பண்பாடுகளைக் காட்டும் வரைபடம்

பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவில் கிமு 7000 ஆண்டில் லெவண்ட் பகுதியில் எரிக்கோ, அனதோலியாவின் சட்டல் ஹொயுக் (Çatal Hüyük)[14] பண்டைய நகரங்கள் புதிய கற்காலத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள் ஆகும். மேல் மெசொப்பொத்தேமியாவின் சமார்ர்ரா, டெல் ஹலாப் போன்ற தொல்லியல் மேடுகளின் ஆய்வில் இப்பகுதியில் கடினமான நீர் பாசன முறை மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகிறது. உபைதுகள் காலத்தில் எரிது பகுதிகளின் மக்கள், வடக்கிலிருந்த சமார்ரா பண்பாட்டுக் குறிகளைக் கொண்டிருந்தனர்.

ஹலாப் பண்பாடு (கிமு 6,100 — 5,100) (வடமேற்கு மெசொப்பொத்தேமியா)

தொகு

ஹலாப் பண்பாடு காலத்திய பாண்டங்கள் மற்றும் நகையணிகள் பீங்கான், சுண்ணக்கல் போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பானைகளில் சிவப்ப வண்ண ஓவியம் தீட்டியிருந்தனர். இக்காலத்தில் களிமண் பானைகள் உருவாகவில்லை.

அசுன்னா பண்பாடு கிமு 6000 (வடக்கு மெசொப்பொத்தேமியா)

தொகு

கிமு 6,000-இல் அசுன்னா பண்பாட்டுக் காலத்திய மக்கள், வடக்கு மெசபடோமியாவின் சக்ரோசு மலைகளின் அடிவாரங்களில் சிறு சிறு நிலப்பரப்புகளில் வேளாண்மை செய்து வாழ்ந்தனர். பெண் தெய்வங்களை வழிபட்டமைக்கு, பல பெண் உருவச் சிற்பங்கள் கிடைத்துள்ளது. இறந்தவர்களின் உடலை தாழிகளில் வைத்து அடக்கம் செய்தனர்.[15]

சமார்ரா பண்பாடு (கிமு5500 – கிமு 4800) (நடு மெசொபொத்தேமியா)

தொகு
 
பெண் சிற்பம், சமார்ரா பண்பாடு, கிமு 6,000

தற்கால ஈராக்கின் வடக்கில் நடு மெசொப்பொத்தேமியாவில் செப்புக் காலத்தில் கிமு 5500 முதல் கிமு 4800 வரை விளங்கிய தொல்பொருள் பண்பாடாகும். சமார்ரா பண்பாடு மட்பாண்ட புதிய கற்காலத்தியாகும். சாமர்ரா பண்பாட்டிற்கு முன்னர் மெசொப்பொத்தேமியாவில்ஹலாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு மற்றும் ஹலாப்-உபைதுகளின் இடைநிலைக் காலம் விளங்கியது. சாமர்ரா பண்பாட்டிற்குப் பின்னர் உபைதுகள் காலம் தொடங்கியது.

உபைதுகள் காலம் (கிமு 6500 - கிமு 3800), கீழ் மெசொப்பொத்தேமியா

தொகு
 
 
போர்சிப்பா
 
காபாஜா
 
கிர்சு
 
பாத்-திபிரா
 
லாகாஷ்
 
சுருப்பக்
 
தில்பத்
 
மராத்
 
லாரக்
 
அக்ஷாக்
 
குதா
தற்கால ஈராக் நாட்டின் உபைது காலத்திய முக்கிய நகரங்கள்
 
பிந்தைய உபைது காலத்திய ஜாடி

கீழ் மெசொப்பொத்தேமியாவில் கிமு 6500 முதல் கிமு 3800 வரை உபைதுகள் காலம் விளங்கியது.[16] உபைதுகள் காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் ஆகும். உபைதுகள் காலத்தில் கோட்டைச் சுவர்கள் அற்ற, பல அறைகள் கொண்ட, செவ்வக வடிவ களிமண் செங்கற்களாலான வீடுகளுடன் கூடிய பெரிய கிராமக் குடியிருப்புகள், இரண்டு அடுக்குக் கோயிலுடன் அமைந்திருந்தது. இதுவே மொசபத்தோமியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கோயில் ஆகும். 10 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த இப்பெரிய குடியிருப்பைச் சுற்றிலும் 1 ஹெக்டேர் பரப்பளவுகளுடன் சிறிய கிராமங்கள் இருந்தன.

கிமு 5000–4000களில் உபைதுகள் நகர நாகரீகத்தை நோக்கிச் செல்லத் துவங்கினர். இவர்கள் வேளாண்மை செய்ததுடன், காட்டு விலங்குகளைப் பழக்கப்படுத்தி வீட்டு விலங்களாக மாற்றி, வேளாண்மைத் தொழிலுக்கு பயன்படுத்தினர்.[17] நிலத்தை நன்கு உழுவதற்கு கலப்பை, ஏர் போன்ற உழவுக் கருவிகளை கண்டறிந்தனர்.

உரூக் காலம் (கிமு 4,000 - கிபி 700)

தொகு

சுமேரியப் பண்பாட்டில் முக்கிய இடம் வகித்த உரூக் நகரம், கிமு 4,000 முதல் கிபி 700 வரை புகழுடன் விளங்கியது.[18] உரூக் நகரம் கிமு 2,900-இல் புகழின் உச்சத்தில் இருந்த போது, 6 கிலோ மீட்டர் பரப்பளவில், 50,000 முதல் 80,000 வரையிலான குடியிருப்புகள் கொண்டிருந்தது. கிமு 2700ல் உரூக் நகரத்தை சுமேரிய மன்னரான கில்கமெஷ் ஆண்டார். கிமு 2,000ல் பபிலோனியா - ஈலாம் இடையே நடைபெற்ற போரின் போது, உரூக் நகரம் தனது தனித் தன்மையை இழந்தது. செலூக்கியப் பேரரசு (கிமு 312 - 63), பார்த்தியப் பேரரசு (கிமு 227 - கிபி 224) காலங்களில் புகழ் குன்றியிருந்த உரூக் நகரம், கிபி 7-ஆம் நூற்றாண்டில் (கிபி 633 - 638) மெசொப்பொத்தேமியா மீதான இசுலாமிய படையெடுப்புகளின் போது முற்றிலும் அழிக்கப்பட்டது.

செம்தேத் நசிர் காலம்கிமு (கிமு 3100 - கிமு 2900)

தொகு
 
உரூக் நகரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட களிமண் பலகைகள், செம்தேத் நசிர் காலத்தியது (கிமு 3100–2900)

கீழ் மெசொப்பொத்தேமியாவில், சுமேரிய நகரமான செம்தேத் நசிர் நகரத்தில், (தற்கால தெற்கு ஈராக்கில்) கிமு 3100 முதல் கிமு 2900 வரை காணப்பட்ட ஒரு தொல்பொருள் பண்பாடுக் காலம் ஆகும். செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டின் பெயரால் இதற்கு செம்தேத் நசிர் காலம் எனப்பெயரிடப்பட்டது.[19] செம்தேத் நசிர் தொல்லியல் பண்பாட்டின் சமகாலத்தியது என மேல் மெசொப்பொத்தேமியாவின் ஐந்தாம் நினிவே, கீழ் மெசொப்பொத்தேமியாவின் உரூக் மற்றும் ஆதி ஈலாம் தொல்லியல் பண்பாடுகளை தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுவர்.[20]

கிமு மூவாயிரம் காலத்தில்

தொகு

மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம்

தொகு

அக்காடியப் பேரரசு (கிமு 2334 – 2154)

தொகு
 
மெசொப்பொத்தேமியாவில் அக்காடியப் பேரரசு

அக்காடியப் பேரரசு அதன் நிறுவனர் அக்காத்தின் சர்கோனின் படையெடுப்பு வெற்றிகளைத் தொடர்ந்து, கிமு 24 ஆம் நூற்றாண்டுக்கும் 22 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அதன் அரசியல் உச்சத்தை எட்டியது. அக்காதியப் பேரரசின் தலைநகரமாக அக்காத் நகரம் விளங்கியது. அக்காடியப் பேரரசர் சர்கோன் மற்றும் அவனது வாரிசுகளாலும் ஆளப்பட்ட மெசொப்பொத்தேமியா மற்றும் ஈலாம், குட்டியம் போன்ற வெளிநாடுகளில் அக்காதியா மொழி திணிக்கப்பட்டது. அக்காடியப் பேரரசே வரலாற்றின் முதல் பேரரசு எனச் சில வேளைகளில் கூறப்பட்டாலும், இதில் பேரரசு என்னும் சொல்லின் பொருள் துல்லியமாக இல்லை. பேரரசுத் தகுதியைக் கோரக்கூடிய முன்னைய சுமேரிய அரசுகளும் இருந்தது.

அக்காடியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், மெசொப்பொத்தேமிய மக்கள் காலப்போக்கில் அக்காடிய மொழி பேசும் இரண்டு நாடுகளாகப் பிரிந்தது. மேல் மெசொப்பொத்தேமியாவில் பண்டைய அசிரியாவும், சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கீழ் மெசொப்பொத்தேமியாவில் பாபிலோனியாவும் உருவாகின.

மூன்றாவது ஊர் வம்சம் (கிமு 2112 - கிமு 2004)

தொகு
 
மூன்றாம் ஊர் வம்ச இராச்சியமும், அதன் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதேசங்களைக் காட்டும் வரைபடம்
 
சுட்ட செங்கல்லில் மூன்றாம் ஊர் வம்ச மன்னர் அமர்- சின்னின் பெயர் பொறித்த தொல்பொருள், பிரித்தானிய அருங்காட்சியகம்

மூன்றாவது ஊர் வம்சத்தை புதிய சுமேரிய பேரரசு என்பர். இது கீழ் மெசொப்பொத்தேமியாவில் அமைந்த ஊர் நகரத்தை தலைநகராகக் கொண்டு பாபிலோனியவைக் கிமு 2112 முதல் 2004 முடிய 108 ஆண்டுகள் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.[21][22]

ஊர் வம்சத்தினர் அக்காடியப் பேரரசு மற்றும் குடியன் வம்சத்தினர் ஆட்சிக்குப் பின் சுமேரியாவை ஆண்ட இறுதி ஊர் வம்சமாகும். மூன்றாம் ஊர் வம்சத்தின் மன்னர் ஊர் - நம்மு என்பவர் கீழ் மெசொப்பொத்தேமியாவில் மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியை நிறுவினார். மூன்றாவது ஊர் வம்சத்தினர் தற்கால ஈராக், சிரியா, லெபனான் மற்றும் மேற்கு ஈரானிய பகுதிகளை கிமு 2112 முதல் 2004 முடிய ஆண்டனர்.

இவ்வம்சத்தினர் ஊர், இசின், லார்சா, பாபிலோன், மாரி மற்றும் எசுன்னா போன்ற நகர இராச்சியங்களை கைப்பற்றி தங்கள் பாபிலோனிய இராச்சியத்தை விரிவிபடுத்தினர். மேலும் மேல் மெசொப்பொத்தேமியாவின் சசிரா நகரையும் வென்றனர். கிமு 2004ல் ஈலம் மக்களின் படையெடுப்பால் வீழ்ச்சியடைந்த மூன்றாம் ஊர் வம்சத்தின் பபிலோனியாவை, வெளிநாட்டு அமோரிட்டு மக்கள் வசப்படுத்தினர்.

கிமு இரண்டாயிரம் காலத்தில்

தொகு

பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025 - கிமு 1378)

தொகு
 
மெசொப்பொத்தேமியாவில் பழைய அசிரியப் பேரரசின் வரைபடம்

பழைய அசிரியப் பேரரசர் இலு - சுமா அனதோலியா, லெவண்ட் மற்றும் கீழ் மெசொப்பொத்தேமியாவின் பாபிலோனியப் பகுதிகளில் அசிரியர்களின் குடியிருப்புகள் ஏற்படுத்தி மொசொப்பொத்தேமியாவில் பழைய அசிரியப் பேரரசை கிமு 2025-இல் நிறுவினர். கிமு 2450ல் அசிரியர்கள், மெசொப்பொத்தேமியாவில் சுமேரியர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். அசிரியப் பேரரசர் உஷ்பியா, அசிரிய மக்களின் முதல் கோயிலை அசூர் நகரத்தில் கிமு 2050ல் நிறுவினார். பின்னர் நகரத்துடன் அசூர் கோயிலைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் எழுப்பப்பட்டது.

கிமு 2500 - 2400-க்கு இடைப்பட்ட காலத்தில் அசிரியர்கள் அனதோலியாவின் இட்டைட்டு மக்கள், ஹுரியத் மக்கள், மற்றும் ஈலாம் பகுதியின் குடியன், லுல்லுபி மற்றும் அமோரிட்டு மக்களிடம் பகை பாராட்டினர்.[23] பழைய அசிரியப் பேரரசுக்கும், மத்திய அசிரியப் பேரரசுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிமு 1475 முதல் கிமு 1275 முடிய மித்தானியர்கள் அசிரியர்களின் பேரரசைக் கைப்பற்றி ஆண்டனர்.

பழைய பாபிலோனியப் பேரரசு (கிமு 2000 - கிமு 1600)

தொகு

கீழ் மெசொப்பொத்தேமியாவின் பாபிலோன் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அமோரிட்டு மன்னர்களால் கிமு 2000 முதல் கிமு 1600 முடிய 400 ஆண்டுகள் ஆளப்பட்டது. இம்மன்னர்களில் புகழ்பெற்றவரான அம்முராபி (கிமு 1792 – 1750) ஆட்சிக்காலத்தில், மெசொப்பொத்தேமியாவின் பிற இராச்சியங்களை வென்று பழைய பாபிலோனியப் பேரரசை விரிவாக்கினார். அம்முராபி ஆட்சிக் காலத்தில் சுமேரியம் மற்றும் அக்காதிய மொழிகளின் ஆப்பெழுத்துகளில் சமயம், கவிதை, அறிவியல் குறிப்புகள் தொகுக்கப்பட்டது. பழைய பாபிலோனியப் பேரரசர் அம்முராபியின் புகழ்பெற்ற சட்டத் தொகுப்புகள் குறித்தான கல்வெட்டு [24] அகழாய்வில் கண்டெக்கப்பட்டது. கிமு 1595ல் இட்டைட்டுகள் பழைய பாபிலோனியப் பேரரசை கைப்பற்றினார்.[25]

மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1392 – கிமு 934)

தொகு

பழைய அசிரியப் பேரரசுக்கும், புது அசிரியப் பேரரசுக்கும் இடைப்பட்ட காலத்தில், தற்கால ஈராக், சிரியா மற்றும் துருக்கிப் பகுதிகளை, கிமு 1392 முதல் கிமு 934 முடிய ஆண்ட அசிரியர்களின் இராச்சியம் ஆகும். பேரரசர் முதலாம் அசூர்-உபாலித் (கிமு 1365–1330) ஆட்சியில், மத்திய அசிரியப் பேரரசு அதிக வலுடன் விளங்கியது. அசிரியப் பேரரசர் என்லில் நிராரி (கிமு 1329–1308) ஆட்சியில் பாபிலோனை கைப்பற்றினார். அசிரியப் பேரரசர் ஆரிக்- டென் -இலி (கிமு 1307–1296) சிரியாவைக் கைப்பற்றினார். முதலாம் அதாத் - நிராரி (கிமு 1295–1275) ஆட்சியில், நிம்ருத் நகரம் அசிரியப் பேரரசின் தலைநகரானது. மேலும் இட்டைட்டுப் பேரரசின் பகுதிகளையும், ஆசிய மைனரையும் கைப்பற்றி பேரரசை விரிவாக்கினார். அசூர் நகரத்தில் அசிரிய தெய்வஙகளுக்கான கோயில்களும், அரண்மனைகளும் கட்டப்பட்டது.

முதலாம் சால்மனேசர் (கிமு 1274–1244) ஆட்சியில் கிமு 1274ல் அரராத்து இராச்சியத்தை கைப்பற்றினார். பின்னர் மித்தான்னிப் பேரரசையும் முழுவதுமாக வீழ்த்தினார். அசிரியப் பேரரசர் முதலாம் துக்குல்தி - நினுர்தா (கிமு 1244–1207), மீண்டும் இட்டைட்டுகளையும், பாபிலோனியர்களையும் வென்றார்.[26]

 
அசிரியக் குதிரை வீரர்கள், அரேபியர்களை வீழ்த்துதல்

கிமு 1056ல் அசிரியப் பேரரசர் அசூர் பெல் - காலாவின் இறப்பிற்குப் பின், அசிரியா நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தது. படிப்படியாக அசிரியப் பேரரசு சுருங்கி கிமு 1026ல் இப்பேரரசு அசிரியாவை மட்டுமே ஆட்சி செய்தது. கிமு 934ல் இப்பேரரசு வீழ்ச்சியுற்றது.

பாபிலோனின் காசிட்டு வம்சம் (கிமு 1531 - கிமு 1155)

தொகு

பழைய பாபிலோனியப் பேரரசுக்குப் பின், காசிட்டு மக்கள் பாபிலோனியாவை கிமு 1531 முதல் கிமு 1155 முடிய 366 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.[27] 1595ல் இட்டைட்டு பேரரசினர் பாபிலோனியாவை தாக்கி அழித்த போது, காசிட்டு மக்கள் பாபிலோனியாவைக் கைப்பற்றி துர் - குரிகல்சு நகரத்தில் காசிட்டு வம்சத்தை நிறுவினர்.[28][29] காசிட்டு மக்களின் போர்க் குதிரைகள் மற்றும் போர் இரதங்கள் போற்றப்படும் முறை முதன்முதலில் பபிலோனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. காசிட்டு மக்களின் தாயகம் தற்கால ஈரானின் சக்ரோசு மலைத்தொடர் ஆகும். ஈல மக்கள், குடியன்களைப் போன்று காசிட்டு மக்களும் மெசொப்பொத்தேமியாவில் தங்களது இராச்சியத்தை நிறுவினர்.[30][31]

ஹுரியத் மக்கள்

தொகு

மேல் மெசொப்பொத்தேமியா மற்றும் அனதோலியாவின் தற்கால வடக்கு ஈராக் மற்றும் வடகிழக்கு சிரியாவில் வாழ்ந்தவர்கள். இவர்கள் ஹுரியத் மொழி பேசினர். இந்திய - ஈரானிய மொழி பேசிய ஹுரியத் மக்களின் முக்கிய இராச்சியங்களாக இட்டைட்டு பேரரசு (கிமு 1600 – கிமு 1178), மித்தானி இராச்சியம் (கிமு 1475 – கிமு 1275) மற்றும் அரராத்து இராச்சியம் (கிமு 858 - 590) விளங்கியது.

 
கிமு 21-ஆம் நூற்றாண்டின் ஹுரியத் மக்களின் சிங்கச் சிற்பம்

கிமு 13-ஆம் நூற்றாண்டில் ஹுரியத் மக்களின் மித்தானி நகர இராச்சியம் உள்ளிட்ட பிற நகர இராச்சியங்கள் அனைத்தும் அசிரிய மக்கள் மற்றும் பிற மக்களால் வெல்லப்பட்டு மறைந்தன. ஹுரியத் மக்களின் தாயகமான காபூர் சமவெளி மற்றும் தென்கிழக்கு அனதோலியா போன்ற பகுதிகள் மத்திய அசிரியப் பேரரசின் (கிமு 1366 - 1020) மாகாணங்களாகியது. வடக்கு சிரியாவில் ஹுரியத் மக்கள் பேசிய மொழியில், அசிரியர்களின் அக்காதியம் மற்றும் அரமேயம் மொழிகளின் தாக்கம் ஏற்பட்டது.

அரராத்து இராச்சியம்

தொகு

மத்திய அசிரியப் பேரரசு ஹுரியத் மக்களின் மித்தானி இராச்சியம் போன்ற பகுதிகளை கைப்பற்றிய பின்னர் மீண்டும் ஹுரியத் மக்கள் அரராத்து இராச்சியத்தை நிறுவி தற்கால ஆர்மீனியா, அசர்பைஜான், ஜார்ஜியா, ஈரான், ஈராக் மற்றும் துருக்கி நாடுகளின் பகுதிகளை கிமு 858 முதல் கிமு 590 முடிய 268 ஆண்டுகள் ஆண்டனர்.[32]

புது அசிரியப் பேரரசினர் (கிமு 911 – 609) கிமு 9-ஆம் நூற்றாண்டு முதல் கிமு 7-ஆம் நூற்றாண்டு வரை படிப்படியாக ஹுரியத் மக்களின் அரராத்து இராச்சியப் பகுதிகளை கைபற்றினர். புது அசிரியப் பேரரசு கிமு 620 - 605 கால கட்டத்தில் வீழ்ச்சியடைந்த போது ஏற்பட்ட உள்நாட்டுப் போரை பயன்படுத்திக் கொண்டு, அதன் சிற்றரசுகளாக இருந்த மீடியா, சிதியர்கள், சால்டியர்கள், பாபிலோனியர்கள் தன்னாட்சியுடன் தங்கள் பகுதிகளை ஆண்டனர். அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் கிமு 6-ஆம் நூற்றாண்டில் அரராத்து இராச்சியம், மீடியாப் பேரரசின் கீழ் சென்றது.

கிமு 6-ஆம் நூற்றாண்டிற்குப் பின் அரராத்து இராச்சியத்தின் ஹுரியத் மக்கள் வரலாற்றிலிருந்து முற்றிலும் மறைந்தனர். இம்மக்கள் இந்தோ ஐரோப்பிய மக்களான ஆர்மீனியர்களுடன் கலந்து விட்டதாக அறியப்படுகிறது. சிரியாவின் நூசி மற்றும் அத்துசா, அலாலக்கா தொல்லியல் களங்களில் கண்டெடுத்த ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட அக்காதிய மொழி சுடுமண் பலகைகள் போன்ற தொல்பொருட்கள் மூலம் ஹுரியத் மக்களின் பண்பாடு, சமயம் மற்றும் சமூகம் வெளிப்படுகிறது. இட்டைட்டு பேரரசில் வாழ்ந்த ஹுரியத் மக்களின் பண்பாடு, சமயம் இட்டைட்டு மக்களிடையே பரவியது. ஹுரியத் மக்களின் உருளை வடிவ முத்திரையில் கவனமாக செதுக்கப்பட்ட புராணக் கதைகள் மூலம் ஹுரியத் மக்களின் சமூகம், வரலாறு, பண்பாடு விளக்குகிறது.

 
கிமு 16-15ம் நூற்றாண்டின் மித்தானி இராச்சிய உருளை முத்திரை

கிமு முதல் ஆயிரமாண்டு

தொகு

புது அசிரியப் பேரரசு (கிமு 911 – கிமு 609)

தொகு
 
அசிரியப் பேரரசின் பட்டத்து இளவரசன், (கிமு 704 - 681), நினிவே மெசொப்பொத்தேமியா

இரும்புக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவை மையக் கொண்டு கிமு 911 முதல் 609 முடிய ஆட்சி செய்த[33][34][35] பண்டைய உலகின் உலகின் முதல் பேரரசாகும்.[36] இது அசிரியாவின் இறுதிப் பேரரசாகும். இப்பேரரசின் புகழ்பெற்ற பேரரசர் அசூர்பனிபால் ஆவார். கிமு பத்தாம் நூற்றாண்டில் புது அசரியப் பேரரசின் மன்னர் இரண்டாம் அதாத் நிராரி காலத்தில் அசிரியப் பேரரசு உலகின் சக்தி வாய்ந்த அரசுகளில் ஒன்றாக விளங்கியது.

புது அசிரியப் பேரரசர்கள் பண்டைய அண்மை கிழக்கு பகுதிகளில் கிழக்கு மத்தியதரைக் கடற்பரப்புகள், லெவண்ட், அனதோலியா, காக்கேசியா, அராபியத் தீபகற்பம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளை கைப்பற்றியதுடன், தங்களது பலமிக்க போட்டி அரசுகளான பாபிலோன், ஈலாம், பாரசீகம், லிடியா, அரராத்து, சிம்மெரியர்கள், சமாரியா, யூத அரசு, சால்டியா, கானான் மற்றும் எகிப்து இராச்சியங்களைக் கைப்பற்றி ஆண்டனர்.[37][38]

புது அசிரியப் பேரரசு பெரும் நிலப்பரப்புகளுடன் கிமு 911 முதல் கிமு 609 ஆண்டது. இப்பேரரசில் ஆட்சி மொழியாக அக்காதியம் மொழியுடன், பழைய அரமய மொழியும் இருந்தது.[39] கிமு 627ல் புது அசிரியப் பேரரசர் அசூர்பர்னபாலின் இறப்பிற்குப் பின்னர், அசிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களால், பேரரசு சிதறுண்டது. கிமு 609ல் இறுதி அசிரியப் பேரரசரின் புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், அசிரியப் பகுதிகளை மீடியா பேரரசும், கிமு 550ல் அகாமனிசியப் பேரரசும், பின்னர் சாசானியப் பேரரசும் கைப்பற்றி ஆண்டனர்.

புது பாபிலோனியப் பேரரசு (கிமு 626 - கிமு 539)

தொகு
 
பாபிலோனின் இஷ்தர் கோயிலின் நுழைவவாயில், சீரமைத்து பெர்லின் பெர்காமோன் அருங்காட்சியகத்தில் உள்ளது
 
இரண்டாம் நெபுகாத்நேசர் உருவம் பொறித்த கருங்கல் சிற்பத்தின் பிரதி
 
பாபிலோன் நகரத்தின் சுவரின் பிரதி, பெர்லின் பெர்காமோன் அருங்காட்சியகம், ஜெர்மனி
 
புது பாலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் நிறுவிய பாபிலோனின் தொங்கு தோட்டம்
 
கிமு 555 - 539 காலத்திய ஊர் நகரத்தின் சந்திரக் கடவுள் கோயில் சீரமைத்ததை ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட உருளை வடிவ சுடுமட் பாண்டம்

அசிரியர்களின் புது அசிரியப் பேரரசு ஆட்சியின் கீழ் பாபிலோனிய நாடு இருந்ததது. இப்பேரரசின் நாகரிகத்தை சாலடிய நாகரிகம் என்பர். கிமு 626-இல் பாபிலோனில் வாழ்ந்த சால்டியர்கள் பபிலோனியாவைக் கைப்பற்றினர். பின்னர் தற்கால வடக்கு ஈராக், குவைத், சிரியா, துருக்கி போன்ற பிரதேசங்களை கைப்பற்றி 87 ஆண்டுகள் ஆண்டனர். இதனை இரண்டாம் பாபிலோனியப் பேரரசு என்றும் அழைப்பர். புது பாபிலோனியப் பேரரசர்களில் புகழ் பெற்றவர் பாபிலோனின் தொங்கு தோட்டத்தை அமைத்த இரண்டாம் நெபுகாத்நேசர் ஆவார். கிமு 539ல் ஓபிஸ் போரில் அகாமனிசியப் பேரரசர் சைரசு பாபிலோனைக் கைப்பற்றினார்.

பாரம்பரியக் காலம் (கிமு 6-ஆம் நூற்றாண்டு - கிபி 7-ஆம் நூற்றாண்டு)

தொகு

பாரம்பரியக் காலம் (Classical antiquity)

தொகு

பாரம்பரியக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவை ஆட்சி செய்தவர்களின் வரலாறு

பிந்தைய பாரம்பரியக் காலம்

தொகு

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Finkelstein 1962, ப. 73
  2. Foster & Polinger Foster 2009, ப. 6
  3. 3.0 3.1 Canard 2011
  4. Wilkinson 2000, ப. 222–223
  5. Matthews 2003, ப. 5
  6. 6.0 6.1 Miquel et al. 2011
  7. Pollock, Susan (1999), Ancient Mesopotamia. The Eden that never was, Case Studies in Early Societies, Cambridge: Cambridge University Press, p. 2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-57568-3
  8. van de Mieroop 2007, ப. 3
  9. van de Mieroop 2007, ப. 4
  10. Moore, Hillman & Legge 2000
  11. Akkermans & Schwartz 2003
  12. Schmidt 2003
  13. Banning 2011
  14. Çatalhöyük
  15. "The oldest pottery Neolithic of Upper Mesopotamia : New evidence from Tell Seker al-Aheimar, the Khabur, northeast Syria - Persée". Persee.fr. பார்க்கப்பட்ட நாள் January 18, 2017.
  16. Carter, Robert A. and Philip, Graham Beyond the Ubaid: Transformation and Integration in the Late Prehistoric Societies of the Middle East (Studies in Ancient Oriental Civilization, Number 63) பரணிடப்பட்டது 2013-11-15 at the வந்தவழி இயந்திரம் The Oriental Institute of the University of Chicago (2010) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-885923-66-0 p. 2; "Radiometric data suggest that the whole Southern Mesopotamian Ubaid period, including Ubaid 0 and 5, is of immense duration, spanning nearly three millennia from about 6500 to 3800 B.C."
  17. Pollock, Susan (1999). Ancient Mesopotamia: The Eden that Never Was. New York: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-57334-3.
  18. Crawford 2004, ப. 75
  19. Pollock 1999, ப. 2
  20. Matthews 2002, ப. 37
  21. Empire of the 3rd dynasty of Ur
  22. Third Dynasty of Ur
  23. Georges Roux (1964), Ancient Iraq}}
  24. Code of Hammurabi
  25. Old Babylonian Empire ANCIENT EMPIRE, MIDDLE EAST
  26. J. M. Munn-Rankin (1975). "Assyrian Military Power, 1300–1200 B.C.". In I. E. S. Edwards (ed.). Cambridge Ancient History, Volume 2, Part 2, History of the Middle East and the Aegean Region, c. 1380–1000 BC. Cambridge University Press. pp. 287–288, 298.
  27. Trevor Bryce, 2009, The Routledge Handbook of the Peoples and Places of Ancient Western Asia: The Near East from the Early Bronze Age to the Fall of the Persian Empire, Abingdon, Routledge, p. 375.
  28. "The Old Hittite Kingdom". Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் 8 September 2012.
  29. "The Kassites in Babylonia". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 8 September 2012.
  30. "Lorestan - Facts from the Encyclopedia - Yahoo! Education". Education.yahoo.com. Archived from the original on 2013-02-12. பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
  31. "History of Iran". Iranologie.com. 1997-01-01. Archived from the original on 2013-02-12. பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
  32. F. W. König, Handbuch der chaldischen Inschriften (1955).
  33. A Companion to Assyria : page 192
  34. The Cambridge Ancient History "The fall of Assyria (635–609 B.C.)"
  35. Encyclopaedia Britannica பரணிடப்பட்டது 2018-07-24 at the வந்தவழி இயந்திரம் "The Median army took part in the final defeat of the Assyrians in northern Mesopotamia (612–609); and, when the territory of Assyria was divided between Media and Babylonia, Media took Assyria with Harran."
  36. "10 FACTS ON THE ANCIENT ASSYRIAN EMPIRE OF MESOPOTAMIA". Anirudh.
  37. "Assyrian Eponym List". Archived from the original on 14 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.
  38. Tadmor, H. (1994). The Inscriptions of Tiglath-Pileser III, King of Assyria, p.29
  39. Frye, Richard N. (1992). "Assyria and Syria: Synonyms". Journal of Near Eastern Studies. And the ancient Assyrian empire, was the first real, empire in history. What do I mean, it had many different peoples included in the empire, all speaking Aramaic, and becoming what may be called, "Assyrian citizens." That was the first time in history, that we have this. For example, Elamite musicians, were brought to Nineveh, and they were 'made Assyrians' which means, that Assyria, was more than a small country, it was the empire, the whole Fertile Crescent. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

ஆதார நூற்பட்டியல்

தொகு

மேலும் படிக்க

தொகு