அரராத்து இராச்சியம்
உரார்த்து இராச்சியம் (Urartu) (/ʊˈrɑːrtuː/), விவிலியம் கூறும் அரராத்து மலைகளை மையமாகக் கொண்ட இராச்சியம் ஆகும். தற்கால ஆர்மீனியாவின் மேட்டு நிலங்களில் வளர்ந்த அரராத்து இராச்சியத்தின் ஹுரியத் மக்கள், தற்கால ஆர்மீனியா, அசர்பைஜான், ஜார்ஜியா, ஈரான், ஈராக் மற்றும் துருக்கி நாடுகளின் பகுதிகளை கிமு 858 முதல் கிமு 590 முடிய 268 ஆண்டுகள் ஆண்டனர்.[1]
அரராத்து இராச்சியத்தின் நிலப்பரப்புகள் மேற்கில் அனதோலியா மற்றும் மெசொப்பொத்தேமியாவும், கிழக்கில் ஈரானியப் பீடபூமி, ஆர்மீனியன் மேட்டு நிலங்களைக் கொண்டது. அரராத்து இராச்சியத்தின் தென்மேற்கில் புது பாபிலோனியப் பேரரசும், தெற்கில் மீடியாப் பேரரசும் இருந்தது.
இவ்விராச்சிய மக்கள் ஆப்பெழுத்து முறையில் எழுதப்பட்ட உரார்த்து மொழி பேசினர்.[2][3][4][5][6]
உரார்த்து இராச்சியம் கிமு ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், பாரசீகத்தின் மீடியாப் பேரரசினர் கிமு 590ல் அரராத்து இராச்சியத்தை முழுவதுமாகக் கைப்பற்றினர். தற்கால ஆர்மினிய மக்களின் முன்னோர்கள் உரார்த்து மொழி பேசியவர்கள் எனக்கருதப்படுகிறது.[5][7][8][9]
அரராத்து இராச்சியத்தின் ஆட்சியாளர்கள்
தொகு- அரமு - கிமு 858–844
- முதலாம் சர்துரி - கிமு 844–828
- இஷ்புய்னி - கிமு 828–810
- மெனுவா - கிமு 785–753
- முதலாம் அர்கிஷ்தி - கிமு 828–810
- இரண்டாம் சர்துரி - கிமு 753–735
வேளாண்மை
தொகுபுது அசிரியப் பேரரசில் கையாண்ட வேளாண் முறையே அரராத்து இராச்சியதிலும் கையாளப்பட்டது. போர்க் கைதிகளை தொழிலாளர்களாக பயன்படுத்தினர். தானியங்கள், குதிரைகள், காளைகள் முதலியன வரியாக அரசுக்கு செலுத்தினர். அமைதிக் காலங்களில் அரராத்து வணிகர்கள், அசிரியர்களுடன் மது, இரும்பு, குதிரைகள் மற்றும் கால்நடைகளை பண்டமாற்று முறையில் வணிகத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் கருவிகள் | அம்மியும், குழவியும் |
அரராத்து இராச்சியத்தின் தொல்பொருட்கள்
தொகுஅகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரராத்து இராச்சிய தொல்பொருட்கள்:
-
கிமு 8ம் நூற்றாண்டின் காளையின் தலை
-
இறக்கைகள் கொண்ட தேவதை
-
அரராத்து மக்களின் ஹல்தி கடவுள்
-
ஆப்பெழுத்து முறையில் எழுத்தப்பட்ட அரராத்து மொழிக் கல்வெட்டு
இதனையும் காண்க
தொகு- அக்காடியப் பேரரசு
- ஹுரியத் மக்கள்
- மத்திய அசிரியப் பேரரசு
- புது அசிரியப் பேரரசு
- மத்திய அசிரியப் பேரரசு
- மீடியாப் பேரரசு
- மெசொப்பொத்தேமியா
- புது பாபிலோனியப் பேரரசு
மேற்கோள்கள்
தொகு- ↑ F. W. König, Handbuch der chaldischen Inschriften (1955).
- ↑ Diakonoff, Igor M (1992). "First Evidence of the Proto-Armenian Language in Eastern Anatolia". Annual of Armenian Linguistics 13: 51–54. பன்னாட்டுத் தர தொடர் எண்:0271-9800.
- ↑ Róna-Tas, András.Hungarians and Europe in the Early Middle Ages: An Introduction to Early Hungarian History. Budapest: Central European University Press, 1999 p. 76 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 963-9116-48-3.
- ↑ Greppin, John A. C. (1991). "Some Effects of the Hurro-Urartian People and Their Languages upon the Earliest Armenians". Journal of the American Oriental Society 3 (4): 720–730. doi:10.2307/603403. "Even for now, however, it seems difficult to deny that the Armenians had contact, at an early date, with a Hurro-Urartian people.".
- ↑ 5.0 5.1 Chahin, M. (2001). The kingdom of Armenia: a history (2nd revised ed.). Richmond: Curzon. p. 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0700714529.
- ↑ Scarre, edited by Chris (2013). Human past : world prehistory and the development of human societies (3rd ed.). W W Norton. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0500290636.
{{cite book}}
:|first=
has generic name (help) - ↑ Frye, Richard N. (1984). The History of Ancient Iran. Munich: C.H. Beck. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3406093973.
The real heirs of the Urartians, however, were neither the Scythians nor Medes but the Armenians.
- ↑ Redgate, A. E. (2000). The Armenians. Oxford: Blackwell. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0631220372.
However, the most easily identifiable ancestors of the later Armenian nation are the Urartians.
- ↑ Lang, David Marshall (1980). Armenia: Cradle of Civilization (3rd ed.). London: Allen & Unwin. pp. 85–111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0049560093.
வெளி இணைப்புகள்
தொகு- Livius History of Urartu/Armenia பரணிடப்பட்டது 2013-09-11 at the வந்தவழி இயந்திரம்
- Historical Maps of Urartu at WikiMedia Commons
- An Urartian Ozymandias பரணிடப்பட்டது 2008-10-12 at the வந்தவழி இயந்திரம் – article by Paul Zimansky, Biblical Archaeologist
- Urartu Civilization
- Urartu (Greek Ararat)
- Capital and Periphery in the Kingdom of Urartu, Yehuda Dagan, Israel Antiquities Authority