காசிட்டு மக்கள்

காசிட்டு மக்கள் (Kassites) (கிமு 1531 — 1155) பண்டைய அண்மை கிழக்கில், பழைய பாபிலோனியப் பேரரசுக்குப் பின், பாபிலோனியாவை கிமு 1531 முதல் கிமு 1155 முடிய 366 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள்.[1]

பாபிலோனியாவின் காசிட்டு வம்சம்
கிமு 1531 — 1155
கிமு 13ம் நூற்றாண்டில் காசிட்டுகள் ஆட்சியில் பாபிலோனியாப் பேரரசு
கிமு 13ம் நூற்றாண்டில் காசிட்டுகள் ஆட்சியில் பாபிலோனியாப் பேரரசு
தலைநகரம்துர்-குரிகல்சு
பேசப்படும் மொழிகள்காசிட்டு மொழி
அரசாங்கம்முடியாட்சி
பாபிலோனிய மன்னர் 
• கிமு 1500
இரண்டாம் அகும் (முதல்)
• கிமு 1157—1155
என்லில்- நதின் - அகி (இறுதி)
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 1531
• பாபிலோனை அழித்தல்
1531
• காசிட்டு மன்னர் சாபாப - சூமா - இட்டின் அசிரியா மற்றும் ஈலம் மீது படையெடுத்தல்
கிமு 1158
• முடிவு
கிமு 1155
முந்தையது
பின்னையது
முதல் பாபிலோனிய வம்சம்
மத்திய அசிரியப் பேரரசு
ஈலம்
தற்போதைய பகுதிகள் ஈரான்
 ஈராக்
காசிட்டுகளின் இராச்சியம் உள்ளடக்கிய கிமு 1400ல் பண்டைய அண்மை கிழக்கு
தற்கால ஈராக்கில் காசிட்டுகள் கைப்பற்றிய முக்கிய நகரங்களின் வரைபடம்]](clickable map)

1595ல் இட்டைட்டு பேரரசினர் பாபிலோனியாவை தாக்கி அழித்த போது, காசிட்டு மக்கள் பாபிலோனியாவைக் கைப்பற்றி துர் - குரிகல்சு நகரத்தில் காசிட்டு வம்சத்தை நிறுவினர்.[2][3]

இராணுவ பழங்குடி மக்களான காசிட்டு வம்ச ஆட்சியாளர்கள் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்கினாலும், உள்ளூரில் செல்வாக்கு பெற இயலவில்லை.[4] காசிட்டு வம்சத்தின் 500 ஆண்டு ஆட்சியில் பாபிலோனிய பண்பாட்டை வளர்த்தெடுத்தனர்.[3] காசிட்டு மக்களின் போர்க் குதிரைகள் மற்றும் போர் இரதங்கள் போற்றப்படும் முறை முதன்முதலில் பபிலோனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.[4]

வரலாறு

தொகு

காசிட்டு மக்களின் தாயகம் தற்கால ஈரானின் சக்ரோசு மலைத்தொடர் ஆகும். ஈல மக்கள், குடியன்களைப் போன்று காசிட்டு மக்களும் மெசொப்பொத்தேமியாவில் தங்களது இராச்சியத்தை நிறுவினர்.[5][6]

அம்முராபியின் மகன் ஆட்சியில் கிமு 18ம் நூற்றாண்டில் பாபிலோனியா எதிரிகளால் தாக்கப்படும் போது, காசிட்டு மக்கள் பாபிலோனில் குடியேறினர். கிமு 1595ல் பாபிலோன் நகரம் இட்டைட்டு பேரரசால் அழிந்த பின்னர், காசிட்டு மக்கள் துர் - குரிகல்சு நகரத்தை நிறுவி, 1531ல் காசிட்டு வம்ச ஆட்சியை மெசொப்பொத்தேமியாவில் நிறுவி, தற்கால ஈராக் மற்றும் ஈரானின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தனர்.

பாபிலோனியாவை ஆண்ட காசிட்டு வம்ச ஆட்சியாளர்கள்

தொகு

பண்பாடு, மொழி, சமூகம், சமயம்

தொகு

பாபிலோனியப் பெயர்களை காசிட்டு வம்ச மன்னர்கள் சூட்டிக் கொண்டாலும், காசிட்டு மக்களின் பழங்குடி மரபுப்படி வாழ்ந்தனர். காசிட்டு மக்கள் தங்கள் குலமரபை போற்றினர்.[7]

மித்தானி இராச்சிய மக்கள் போன்று காசிட்டு மக்கள், இந்திய-ஐரோப்பிய மொழியை பேசினர்.[3]

காசிட்டு வம்சத்தின் இறுதி எட்டு மன்னர்கள் காலத்தில், காசிட்டு மக்கள் அக்காதியம் மொழி பேசினர். காசிட்டு மக்கள் அசிரியர்களுடன் திருமண உறவு பூண்டனர்.

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Trevor Bryce, 2009, The Routledge Handbook of the Peoples and Places of Ancient Western Asia: The Near East from the Early Bronze Age to the Fall of the Persian Empire, Abingdon, Routledge, p. 375.
  2. "The Old Hittite Kingdom". Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் 8 September 2012.
  3. 3.0 3.1 3.2 "The Kassites in Babylonia". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 8 September 2012.
  4. 4.0 4.1 "Kassite (people)". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 8 September 2012.
  5. "Lorestan - Facts from the Encyclopedia - Yahoo! Education". Education.yahoo.com. Archived from the original on 2013-02-12. பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
  6. "History of Iran". Iranologie.com. 1997-01-01. Archived from the original on 2013-02-12. பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
  7. J. Boardman et al. (eds) Cambridge Ancient History Vol III Pt 1 (2nd Ed) 1982

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kassites
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிட்டு_மக்கள்&oldid=3759209" இலிருந்து மீள்விக்கப்பட்டது