மெசொப்பொத்தேமியாவின் காலக்கோடுகள்
மெசொப்பொத்தேமியாவின் காலக்கோடுகள்(பொ.அ.மு 10,000 முதல் பொ.அ.பி 661 முடிய) ஆசிய கண்டத்தின் தென்மேற்கு ஆசியாவில் பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் முதல் ராசிதீன் கலீபாக்கள் உள்ளிட்ட துவக்க கால இசுலாமிய ஆட்சிகள் நிறுவப்படும் வரையிலான கிமு 10,000 முதல் கிபி 661 முடிய வரையிலான கால வரிசைகள்:
மெசொப்பொத்தேமியாவின் சுமேரிய நாகரிகம் உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைப்பர். சுமேரியர்கள் உலகிற்கு ஆப்பெழுத்து எழுத்துக்களை களிமண் பலகைகளில் எழுதி அறிமுகப்படுத்தினர். சுமேரியர்களும், அதன் பின் வந்த அரசமரபினரும் சிலைகள் வடிவத்தில் கடவுள் வழிபாட்டை கொண்டவர்கள்.[1][2][3]
பண்டைய வரலாறு
தொகு- மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) - (கிமு 10,000 – கிமு 8700)
- மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) - (கிமு 8700 – 6800)
- ஜெர்மோ பண்பாடு (கிமு 7500- கிமு 5000)
- உபைது பண்பாடு - (கிமு 6500 - கிமு 3800)[
- அசுன்னா பண்பாடு (கிமு 6000?),
- சமார்ரா பண்பாடு - (கிமு 5700–4900)
- ஹலாப் பண்பாடுகள் (கிமு 6000–5300)
- உபைது பண்பாடு - (கிமு 5900–4400)
- உரூக் பண்பாடு - (கிமு 4000 - கிமு 3100)
- செம்தேத் பண்பாடு - (கிமு 3100 – கிமு 2900)[4]
புதிய கற்காலம்
தொகு- ஈல நாகரிகம் - (கிமு 3200 - கிமு 539)
- மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம் - (கிமு 2900 – 2350)
துவக்க வெண்கலக் காலம்
தொகு- மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம் - (~கிமு 2900–2350)
- பழைய எகிப்து இராச்சியம் - (கிமு 2686 – கிமு 2181)
- அக்காதியப் பேரரசு - (~கிமு 2350–2100)
- மூன்றாவது ஊர் வம்சம் - (கிமு 2112–2004)
- பண்டைய அசிரியா - (கிமு 2400 - 1800)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் - (கிமு 2055 - 1650)
நடு வெண்கலக் காலம்
தொகு- முதல் பாபிலோனியப் பேரரசு - (கிமு 1800 - 1700)
பிந்தைய வெண்கலக் காலம்
தொகு- பழைய அசிரியப் பேரரசு - (கிமு 1600 - 1100)
- இட்டைட்டு பேரரசு - (கிமு 1600 – கிமு 1178)
- புது எகிப்து இராச்சியம் - கிமு 1550 – கிமு 1077
- மத்திய அசிரியப் பேரரசு - (~ கிமு 1365–1076 )
- பாபிலோனில் காசிட்டுகள் காலம், (~ கிமு 1595–1155)
- பிந்தைய வெண்கலக் காலத்தில் அரசுகள் குலைதல் - (கிமு 1200- 1100)
- சைரோ-இட்டைட்டுகளின் இராச்சியங்கள் (Syro-Hittite states) - (கிமு 1100 - 700)
- புது அசிரியப் பேரரசு (கிமு 10-ஆம் நூற்றாண்டு - 7-ஆம் நூற்றாண்டு)
- அரராத்து இராச்சியம் - (கிமு 858 - கிமு 590)
- புது பாபிலோனியப் பேரரசு - (கிமு 7-ஆம் நூற்றாண்டு - 6-ஆம் நூற்றாண்டு)
- மீடியாப் பேரரசு - (கிமு 678 – கிமு 549)
பாரம்பரியக் காலம் (Classical antiquity)
தொகு- பாரசீக அகாமனிசியப் பேரரசு - (கிமு 6 முதல் 4-ஆம் நூற்றாண்டு வரை)
- செலூக்கியப் பேரரசு - (கி.மு. 312–கி.மு. 63)
- தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
- பார்த்தியப் பேரரசு - (கிமு 3-ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3-ஆம் நூற்றாண்டு வரை)
- ஆர்மீனிய இராச்சியம் - (கிமு 321 - கிபி 428)
- உரோமைப் பேரரசு - (கிமு 2- முதல் கிபி 7ஆம் நூற்றாண்டு வரை
பிந்தைய பாரம்பரியக் காலம் (Late Antiquity)
தொகு- பல்மைரேனிய இராச்சியம் - (கிபி 3-ஆம் நூற்றாண்டு)
- சாசானியப் பேரரசு - (கிபி 224 – 651)
- பைசாந்தியப் பேரரசு - (கிபி 341 - கிபி 7-ஆம் நூற்றாண்டு)
- ராசிதீன் கலீபாக்கள் - (கிபி 632 – 661)
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Mesopotamia, 8000–2000 B.C
- ↑ Mesopotamia Timeline
- ↑ Ancient Mesopotamia: Civilization and Society
- ↑ Pollock, Susan (1999), Ancient Mesopotamia. The Eden that never was, Case Studies in Early Societies, Cambridge: Cambridge University Press, p. 2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-57568-3