அரியானாவின் இசை

(ஹரியானாவின் இசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அரியானாவின் நாட்டுப்புற இசை இரு முக்கிய வடிவங்களை/வகைகளைக் கொண்டது.[1] அரியானாவின் பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் அதன் கிராமிய நாட்டுப்புற இசை. இது கதைப்பாடல் மற்றும் பிரியும் காதலர்களின் மனவேதனைகள், வீரம், பேராண்மை மற்றும் மனத்துணிவு, அறுவடை மற்றும் சந்தோசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.[2]

டோல், மகுடி இசைக்கலைஞர்கள் (2012).

வரலாறு

தொகு

அரியானா இசைப் பாரம்பரியத்தில் வளம் மிக்கது. இம்மாநிலத்தின் அநேக இடங்கள் இராகங்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக சர்க்கி தாத்திரி மாவட்டத்தில் அநேக கிராமங்கள் நண்டியம், சாரங்பூர், பிலாவாலா, பிருந்தாபனா, தோடி, அசாவெரி, ஜெய்சிரி, மாலக்கோஷ்னா, இந்தோளா, பைரவி மற்றும் கோபி கல்யாணா என்று இராகங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன.[1][3]

நாட்டுப்புற இசை

தொகு

பாரம்பரிய நாட்டுப்புற இசை

தொகு

அரியானாவின் பாரம்பரிய நாட்டுப்புற இசையானது இந்திய பாரம்பரிய இசையோடு மிகுந்த தொடர்புடையதும் அதை அடிப்படையாகக் கொண்டதும் ஆகும். இந்தியாவின் அரியானா மாநிலமானது அநேக வகையான நாட்டார் பாடல்களை உருவாக்கியது மட்டுமல்ல இந்தியப் பண்பாட்டு இசையில் அநேக புதுமைகளையும் புகுத்தியுள்ளது. இந்துஸ்தானி பாரம்பரிய இராகங்கள் அல்ஹா-கன்ந்த் (1663-1202) பாடலைப் பாட உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடல் அல்ஹா மற்றும் வுடல், சித்தூர் மகாராஜா மகாராணா உதய்சிங் II (மகாராணா உதய்சிங் ராணா சங்காவின் மகன் மற்றும் பிரபலமான அதிவீரர் மகாராணா பிரதாப்பின் தந்தை), பிரம்மாக்கள், டீஜ் திருவிழாப் பாடல்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு பாடப்படும். ஹோலியின் பங்குனி மாதத்திற்கு ஆன பாக் பாடல்கள் மற்றும் ஹோலி பாடல்கள் ஆகும்.[1][3]

வேறுபாடு:

தொகு

மேவாட்டி காரனா[4][5][6] என்பது மேவாட் பகுதியில் உள்ள இந்துஸ்தானி இசையினை இசைப்பயிற்சி செய்யும் கலைஞர் இனக்குழுவாகும். இவர்கள் பண்டிதர் ஜாஸ்ராஜின் இசை மரபு வழி வந்தவர்களாக அறியப்படுகிறார்கள். இந்த காரானாவானது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போபாலில் உள்ள உதத். காக்கி நாஸிர் கான் மற்றும் உதத். வாகித் கான் சகோதரர்களால் ஜோத்பூர் அரச்சபையில் நிறுவப்பட்டதாகும்.[7] இதன் காரணமாக இது ஜோத்பூர் காரனா என்றும் அழைக்கப் படுகிறது.[8] Consequently, it is also known (though less commonly) as the Jodhpur Gharana.[9][10] இந்த காரனா இசை ஒரு தனி தெய்வீக இசையமைப்பு, பாங்கு, நடை. பயிற்சி மற்றும் திறமை இவற்றோடு குவாலியர் மற்றும் தில்லியின் பாரம்பரிய இசையின் சிறுகிளையாக வெளிவந்தது. இந்த காரனா இசை 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பண்டிட்.ஜாஸ்ராஜ் கயாக்கி இசையை பிரபலமாக்கிய பிறகு வெளியில் தெரிய ஆரம்பித்து பிரபலமானது. [11]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 S. C. Bhatt and Gopal K. Bhargava, 2006, Land and People of Indian States and Union Territories: 21 Arts and Crafts of Haryana.
  2. Manorma Sharma, 2007, Musical Heritage of India, Page 65.
  3. 3.0 3.1 S. Gajrani, 2004, History, Religion and Culture of India, Volume 1, Page 96.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-04. பார்க்கப்பட்ட நாள் 2020-03-20.
  5. http://www.ipaac.org/Abhyankar.htm
  6. http://www.ipaac.org/Sanjeev2015.htm
  7. http://mewatheritage.khamayati.org/about/[தொடர்பிழந்த இணைப்பு]
  8. https://www.academia.edu/34585877/Obituary_Rais_Khan
  9. https://forum.chandrakantha.com/post/mewati-gharana-8674324?trail=45
  10. https://www.facebook.com/LegendsofMewatiGharana/photos/a.109660156032330/109660159365663/?type=1&theater
  11. Nagarkar, Samarth (2013). Raga Sangeet: Understanding Hindustani Classical Vocal Music. New York: Chhandayan, Inc.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியானாவின்_இசை&oldid=3671652" இலிருந்து மீள்விக்கப்பட்டது