ஹரி சந்த் மித்தா

இந்திய அரசியல்வாதி

ஹரி சந்த் மித்தா (Hari Chand Middha, 1942-2018) ஒரு இந்திய அரசியல்வாதி. மேற்கு பஞ்சாபின் (தற்கால பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம்), ஜங் நகரத்தில் பிறந்தவர். இவர் இந்திய தேசிய லோக்தளத்தின் சார்பில் ஹரியானா மாநிலத்தின் ஜிண்ட் தொகுதியின் சார்ந்தாற்றுநராக, ஹரியானா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] இவர் தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே 2009 இல் ஹரியானாவின் மாநில அமைச்சராக இருந்த மங்கே ராம் குப்தாவை தோற்கடித்தார். 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.[2]

தொழில்முறை மருத்துவரான இவர், அரசியலுக்கு வருமுன் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

மித்தா 26 ஆகஸ்ட் 2018 அன்று மாரடைப்பால் இறந்தார்.[3]

குறிப்புகள்

தொகு
  1. "Dr. Hari Chand Middha (Winner), Haryana 2009". பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
  2. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in. Archived from the original on 2017-12-24. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
  3. "NLD MLA Hari Chand Middha dies at 76". தி டிரிப்யூன். பார்க்கப்பட்ட நாள் August 27, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரி_சந்த்_மித்தா&oldid=3588322" இலிருந்து மீள்விக்கப்பட்டது