ஹர்ஷநாத் கோயில்
ஹர்ஷநாத் கோயில் ( Harshnath Temple ) என்பது இந்திய மாநிலமான இராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும். இது மாவட்டத் தலைமையகமான சிகரில் இருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]
ஹர்ஷநாத் கோயில் | |
---|---|
ராஜஸ்தான் மாநிலத்தில் கோயிலின் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ராஜஸ்தான் |
மாவட்டம்: | சிகர் |
அமைவு: | ஹர்ஷநாத் |
ஏற்றம்: | 900 m (2,953 அடி) |
ஆள்கூறுகள்: | 27°30′00″N 75°10′21″E / 27.499914°N 75.172443°E |
கோயில் தகவல்கள் |
வரலாறு
தொகுசிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலில் காணப்பட்ட பொ.ச.973 தேதியிட்ட கல்வெட்டின் படி, சாகம்பரி மன்னர் இரண்டாம் விக்ரகராஜாவின் ஆட்சியின் போது, துறவியான பவரக்தன் என்பவரால் கட்டப்பட்டது. இப்போது இது இடிபாடுகளில் கிடக்கும் பல்வேறு கோயில்களால் சூழப்பட்டுள்ளது.[2]
அசல் கோயில் பின்னர் 1679 இல் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பால் அழிக்கப்பட்டது. 1718-ஆம் ஆண்டில் ராவ் சிவசிங் பழைய கோவிலின் இடிபாடுகளைப் பயன்படுத்தி பழைய கோவிலை ஒட்டி புதிய கோவிலைக் கட்டினார்.
இராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாராவின் ஹர்ஷ் கிராமத்தில் ( ஹர்ஷ் தேவல் கோயில்) போன்றவற்றிலும் இதே மாதிரியான கோயில் அமைந்துள்ளது. பிலாராவில் உள்ள ஹர்ஷ் தேவல் கோயிலும் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
கட்டிடக்கலை
தொகுகோயிலும் அதைச் சுற்றியுள்ள சிவாலயங்களும் தற்போது சிதிலமடைந்துள்ளன. பிரதான கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. அதன் தூண்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. உட்புற மேற்குச் சுவரில் பார்வதி [ 'விகட' என்று பெயரிடப்பட்ட] அவரது பெண் உதவியாளர்களுடன் பஞ்சங்கநிதபத்தில் நிற்கும் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.[2]
-
ஏக-தந்தி வீணையை வாசிக்கும்]] இசைக்கலைஞரின் சிற்பம்.
-
ஏக-தந்தி வீணை, புல்லாங்குழல் மற்றும் மேளம் வாசிக்கும் இசைக்கலைஞர்களின் சிற்பம்
-
இசைக்கலைஞர்கள், ஒரு உதவியாளர் உட்கார்ந்திருக்கும் உருவம், ஒருவேளை ஒரு பிரபுவாக இருக்கலாம்
-
இசைக்கலைஞர்கள் மற்றும் ஒரு இணையைக் காட்டும் சிற்பம்
மேலும் பார்க்கவும்
தொகு- சகமானர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஹர்சத் மாதா கோயில்
சான்றுகள்
தொகு- ↑ "Districts of Rajasthan, Sikar District". www.rajasthandirect.com. பார்க்கப்பட்ட நாள் 7 September 2014.
- ↑ 2.0 2.1 "Archaeological Survey of India, Jaipur circle". Archaeological survey of India. பார்க்கப்பட்ட நாள் 6 September 2014.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் ஹர்ஷநாத் கோயில் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.