ஹலோ பாண்டா
ஹலோ பாண்டா (Hello Panda) என்பது ஜப்பானிய மாச்சில்லின் ஒரு வணிக தயாரிப்பு ஆகும். இது மீஜி சீகாவால் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது . ஒவ்வொரு மாச்சில்லும் காணப்படும் சிறிய துளையில் வெனிலா, ஸ்ட்ராபெரி, இரட்டை சாக்லேட், தேங்காய், மாட்சா கிரீன் டீ அல்லது சாக்லேட் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது.[1] சுவைகளின் கலவையுடன் கூடிய மாச்சில் பொட்டலங்களும் சந்தையில் கிடைக்கின்றன. இது முதன்முதலில் ஜப்பானில் 1979இல் வெளியிடப்பட்டது.[2] மாச்சில்லின் பொதியில் வாள்வீச்சு மற்றும் வில்வித்தை போன்ற பல்வேறு செயல்களைச் செய்யும் மாபெரும் பாண்டா கரடியின் கேலிச் சித்திரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.
ஹலோ பாண்டா | |||||||
வகை | Cookie | ||||||
---|---|---|---|---|---|---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | Dessert | ||||||
தொடங்கிய இடம் | யப்பான் | ||||||
பரிமாறப்படும் வெப்பநிலை | அறை வெப்பநிலை | ||||||
160 கலோரி (670 kJ) | |||||||
|
ஹலோ பாண்டா முதலில் ஜப்பானில் மீஜி சீகாவால் தயார் செய்யப்பட்டது. பின்னர் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் உற்பத்தி தொடங்கப்பட்டது. சிங்கப்பூர் அடுமனை வசதிகள் 1974ஆம் ஆண்டில் மற்ற மீஜி தயாரிப்புகளை உற்பத்தி செய்யத் தொடங்கின. இந்த மாச்சில்லானது ஐக்கிய இராச்சியம் (யுனிஸ் நொறுக்குத்தீனிகள்), ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற பெரும்பாலான வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மாச்சில்லானது பொதுவாக 2oz அல்லது 57.5 கிராம் கொண்ட உயரமான, அறுகோண பெட்டியில் விற்கப்படுகிறது. சில நாடுகளில், ஹலோ பாண்டா மாச்சில் சிறிய 21 மற்றும் 35 கிராம் அலுமினிய பைகள், 50 கிராம் மற்றும் 260 கிராம் பெட்டிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பதிப்பு பொதிகளில் கிடைக்கிறது.
மேலும் காண்க
தொகு- ஷார்ட்பிரெட் பிஸ்கட் மற்றும் குக்கீகளின் பட்டியல்
- கோலாவின் மார்ச்
- டெடி கிரஹாம்ஸ்
- சிறிய டெடி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Meiji corporate website". Archived from the original on 6 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Meiji Australia". Archived from the original on 19 August 2013. பார்க்கப்பட்ட நாள் 7 August 2013.