பாண்டா கரடி

பெரிய பாண்டா
வாஷிங்டன், டி.சி.யின் தேசியப் பூங்காவிலுள்ள பான்டா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. melanoleuca
இருசொற் பெயரீடு
Ailuropoda melanoleuca
(David, 1869)
துணையினம்
Giant Panda range

பாண்டா (மரபுச் சீனம்:大熊貓; எளிய சீனம்:大熊猫; பின்யின்:Dàxióngmāo, அல்லது "பெரிய கரடி பூனை"; ஆங்கிலம்: Giant Panda)[1] சீனாவில் மட்டும் காணப்படும் பாலூட்டி விலங்கு ஆகும்.[2] இது கரடியைப் போல் தோற்றம் தரும் சிறிய விலங்கு ஆகும். வளர்ந்த பாண்டாக்கள் சராசரியாக 1.5 சுற்றளவு 75 செமீ நீளம் அளவுடயவை. ஆண் பாண்டாக்கள் 115 கிலோகிராம் வரை நிறை கொண்டவை. பெண் பாண்டாக்கள் பொதுவாக 10-20% ஆண் பாண்டாக்களை விட சிறியவை. பாண்டா கறுப்பு வெள்ளை கலந்த உரோமத் தோலை கொண்டவை. காதுகள், கண்களை சுற்றி, முகவாய்(மூக்கும் வாயும் சேர்ந்த பகுதி), கால்கள், தோள்கள் ஆகியவை கறுப்பாகவும் மற்ற பகுதிகள் வெள்ளையாகவும் காணப்படும்.

வளர்ச்சி

தொகு
  • பிறந்த பாண்டா குட்டி இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும், சுமார் 800கிராம் எடையளவு கொண்டிருக்கும், கண் தெரியாது.
  • பத்து நாட்களுக்கு பிறகு அதன் நிறம் மாறத் தொடங்கி, அதன் வழக்கமான நிறமான கருப்பு-வெள்ளையை அடையத்தொடங்கும்.
  • நாற்பது நாட்களுக்கு பின்பு கண் தெரியத் தொடங்கும்.
  • ஆறு மாதங்களுக்குப் பிறகு மரம் ஏறத் தொடங்கும்.
  • ஒரு வருடத்தில் 45கிலோகிராம் அளவு எடை கொண்டிருக்கும்.
  • ஐந்து வருடங்களுக்கு பிறகு அதன் எடை 100கிலோவை அடைந்திருக்கும், இனப்பெருக்கம் செய்யுமளவுக்கு தகுதி பெற்றிருக்கும். தோராயமாக 30 வருடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உயிர் வாழ்கிறது, வனங்களில் 14 முதல் 20 வருடங்கள் வரையே உயிர் வாழ்கிறது.

வசிப்பிடம்

தொகு
  • பாண்டா கரடிகள் மத்திய சீனாவின் சிச்சுஆன் மலைப்பகுதிகளிலும் அதனைச்சுற்றியுள்ள கான்சு மற்றும் சான்க்சி மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றன.காடுகளின் அழிவு மற்றும் முன்னேற்ற் சார் மாற்றங்களால் அவை தாழ்வான இடங்களில் இருந்து உயரமான பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டடியதாயிற்று.

பாண்டாக்கள் பாதுகாக்கப்படேவண்டிய உயிரினங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

2007ம் ஆண்டின் ஒரு அறிக்கையின்படி சீனாவின் உள்நாட்டுப்பகுதிகளில்239 பாண்டாக்களும் எல்லையோரங்களில் 27ம் மனிதப்பராமரிப்பில் வளர்க்கப்படுகின்றன.

20147ம் ஆண்டின் ஒரு அறிக்கை சீனாவின் எல்லையோரங்களில் 49 பாண்டாக்களும் உயிரியல் புங்காக்களில்13ம் வளர்க்கப்படுவதாகக் குறிப்பிடுகிறது.

சீனாவின் அடையாளம்

தொகு

சீனாவின் தேசியச்சின்னமாக டிராகன் விளங்குவதைப்போலவே பாண்டாவின் உருவமும் சீனாவின் சர்வதேச அடையாளங்களில் ஒன்றாகத்திகழ்கிறது. உதாரணமாக பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஐந்து ஃபுவா சின்னங்களில் ஒன்றாக பாண்டா உருவம் இடம் பெற்றிருந்ததைக் கூறலாம்.

விலங்குகளில் வகைப்பாடு

தொகு

பாண்டாக்கள் தங்கள் பண்புகளில் கரடிகளையும் ரக்கூன்களையும் ஒத்திருப்பதால் இவற்றின் வகைப்பாடானது பல ஆண்டுகளாகவே விவாதத்திற்குரியதாக இருந்து வந்தது. பின்னர் மூலக்கூறு ஆய்வு முடிவுகளின்படி பாண்டா கரடி வகையையே சார்ந்தது என நிர்மாணிக்கப்பட்டது.

கரடிகளின்'உர்சைன் ' குடும்பத்திலிருந்து பிரிந்த 'உர்சிடே' குடும்பத்தின் பகுதியாக இவை வகைப்படுத்தப்படுகின்றன. தெற்கு அமெரிக்காவில் வசிக்கும் ஸ்பெக்டக்கில்ட் கரடிகள் பாண்டாக்களின் நெருங்கிய வகையாக அறியப்படுகின்றன.

செங்கரடிகளும் பாண்டாக்களும் பெயர், வாழிடம்,உணவு மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த"சியுடோ தம்ப்" என்னும் மூங்கிலைப் பற்றிக் கொள்ள உதவும் பெரிய எலும்பினை கொண்டிருத்தல் போன்ற பல பண்புகளில் ஒத்திருப்பினும் இவை இரண்டும் நெருங்கிய குடும்ப வகை அன்று.

சொற்பிறப்பியல்

தொகு

"பாண்டா" என்ற சொல் பிரென்சு மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு பெறப்பட்டதாகும். பிரென்சு மொழியின் மூலச்சொல்லின் சரியான விளக்கம் பெறப்படவில்லை.

இச்சொல்லுடன் ஓரளவு பொருந்தும் வார்த்தையானது நேபாள மொழியின் 'பொன்யா' என்ற சொல்லாகும். இச்சொல், பாண்டாவின் தனிச்சிறப்பு வாய்ந்த மணிக்கட்டு எலும்பைக் குறிக்கும்.

மேற்கத்திய உலகினர் இப்பெயரை முதலில் செங்கரடிக்கே இட்டனர். 1901ஆம் ஆண்டு வரை பாண்டா என்ற சொல்லானது செங்கரடியையே குறிப்பிட பயன்பட்டது. பாண்டாக்கள், 'கருப்பு வெள்ளை நிற பூனைப்பாதமுடைய விலங்கு என்றே அழைக்கப்பட்டுவந்தது.

பெரும்பாலான கலைக்களஞ்சியங்களிலும்' பாண்டா 'அல்லது'சாதாரண பாண்டா' என்ற பெயர் செங்கரடியையே குறிக்கப்பயன்பட்டது. 2013ம் ஆண்டு வரையிலும் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா, இப்பெயரை 'சாதாரண கரடியைக் குறிக்கவே பயன்பட்டது.

சீன மொழியிலி கரடிகளைக் குறிக்கும் 20 க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பினும், 'Dàxióngmāo' அல்லது 'xióngmāo' என்ற வார்த்தைகளே பாண்டாக்களைக் குறிக்கப்பயன்பட்டன.

கிளை இனங்கள்:

தொகு

பாண்டாக்களின் அளவு,நிறம்,மரபணு வகையின் அடிப்படையில் அவை இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1.'Ailuropoda melanoleuca''- இவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.இவை சிச்சுஆன்' பகுதிகளில் வாழும் கருப்பு வைள்ளை நிறப்பாண்டாக்கள் ஈகும்.

2.[[Ailuropoda melanoleuca qinlingensis- இவை க்வின்லிங்க் மலைப்பகுதிகளில் சுமார் 1300 முதல் 3000மீ உயரத்தில் வாழும் லேசான மற்றும் அடர்ந்த பிரவுன் நிறமுடையவை ஆகும்.

உருவ அமைப்பு:

தொகு

பாண்டாக்கள், அழகான கருப்பு வெள்ளைத் தோல் உடையன. வளர்ந்த பாண்டாக்கள் 1.2 முதல.1.9மீ{4 முதல்9 அடி} நீளமும் {10-15 செ.மீ நீள வாலுடன்},60 முதல் 90 செ.மீ வரை{2.0 முதல் 3.0அடி) தோள் வரையிலான உயரமும் உடையவை.

எடை:

தொகு

ஆண் இனம் 160 கி.கி வரையிலும் , பெண்இனம் பொதுவாக ஆண் இனத்தின் எடையினின்றும் 20 சதவீதம் வரை குறைவாகவும் காணப்படும். பொதுவாக பெண் பாண்டாக்கள்,70கி.கி முதல் 120 கி்கி வரை எடை இருக்கும்.

இவற்றின் சராசரி எடை 100 முதல் 115 கி.கி ஆகும்.

உடலமைப்பு:

தொகு

இவை சாதாரண கரடிகள் போன்ற உருவம் கொண்டவை.இவற்றின் காதுகள்,கண் ,முகவாய், கைகள்,கால்கள் மற்றும் தோள' பகுதிகளில்கருப்பு நிறத் திட்டுக்கள் காணப்படும்.உடலின் ஏனைய பகுதிகள் வெண்மையாக இருக்கும்.

இந்த நிற அமைப்பானது,பனி சூழ்ந்த,நிழலான,மற்றும் பாறை இடுக்குகளில் மறைந்துகொள்ள உதவுகிறது.

இவற்றின் அடர்ந்த,ரோமங்கள் நிறைந்த தோலானது இதன் குளிரான வாழிடத்தில் உடல் வெப்பத்தைக் காக்கப் பயன்படுகிறது.
தொகு
மண்டையோடு:
தொகு
இதன் மண்டையோடு,'டியுரோபாகஸ்' ஊன் உண்ணி வகையின் உருவத்தைப் பெற்றுள்ளது.
தொகு

பற்கள்:

தொகு

இவற்றின் முப்பரிமாண கோரைப்பற்களான கெனைன் பற்கள்1298.5 நியுட்டன்களும் கார்னாசியல் பற்கள் 1815.9 நியுட்டன்களும் கடிக்கும் வல்லமை ஈவு உடையனவாகும்.

பாதங்கள்:
தொகு

பாண்டாக்களின் பாதங்களில் ஒரு கட்டை விரலும் 5 விரல்களும் உள்ளன.இந்தக் கட்டை விரலானது,' சீசமாய்ட்' எலும்பின் உருமாற்றமாகும்.இது உண்ணும்போது மூங்கிலைப்பிடித்துப்கொள்ள உதவுகின்றது'.

' ஸ்டீபன் ஜே கெளல்ட்' அவர்கள், பரிமாண வளர்ச்சி மற்றும் உயிரியல் தொடர்பான தனது கட்டுரைத்தொகுப்புப் புத்தகமான 'த பாண்டா'ஸ் தம்ப்' ல் இதைப்பற்றி விவாதித்துள்ளார்.

வால்:

தொகு

பாண்டாக்களின் வால்,10முதல் 15 செ.மீ{4முதல் 6இன்ச்} நீளமுடையது.இவை கரடி இனத்தின் இரண்டாவது நீளமான வாலைப் பெற்றுள்ளது.

வாழும் காலம்:

தொகு

கூண்டில் அடைத்து வளர்க்கப்படுகையில் இவை 20 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.ஜியாஜியா என்ற பெண் பாண்டா 38 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்தது.

ஜீன் அமைப்பு:
தொகு

இதன் ஜீன் அமைப்பு,'இல்லுமினா டை சீக்வென்சிங்' ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது்.{2009}.இதில் 20 ஜோடி ஆட்டோசோம்களும் ஒரு ஜோட் பால் குரோமோசோம்களம் உள்ளன.

வாழிட எல்லை:

தொகு

இவை பொதுவாக தனிமையில் வாழும் காட்டு விலங்குகள் ஆகும்.ஒவ்வொரு முதிர்ந்த பாண்டாவும் தனிப்பட்ட எல்லை வரம்பினைக்கொண்டிருக்கும்.

ஒரு பெண் பாண்டா , தனது எல்லைககுள் பிறிதொரு பெண் பாண்டாவை நுழைய அனுமதிப்பதில்லை.

சமூகக் குறியாக்கம்:

இனப்பெருக்க காலங்களில் அருகருகே வாழும் பாண்டாக்கள் இணை சேரும்.பின்னர் ஆண் பாண்டா, பெண் பாண்டாவை விட்டு விலகி ச் சென்று விடும்.பெண் பாண்டாக்கள் குட்டிகளைத் தனியே வளர்க்கும்.

செயல்படும் நேரம்:

தொகு

இவை, காலை, மாலை துடிப்புடன் செயல்படும் 'க்ரெபஸ்குலார்' வகையைச்சார்ந்தவை. எனினும், ஜின்டாங் ஜங் அவர்களின் கூற்றுப்படி,இவை காலை, மதியம்,மாலை மற்றும் நடுநிசியிலும் செயல்பட வல்லவை.இவற்றின் பெரிய உருவ அமைப்பின் காரணமாக இவை ஏனைய வேட்டையாடும் விலங்குகளைக்கண்டு பயப்படத்தேவையில்லை யாதலால் இவைபகலின் எந்த நேரத்திலும் சுதந்திரமாக செயல்படும்.

தகவல் தொடர்பு:

தொகு

பாண்டாக்கள், குரல்ஒலி,மரத்தில் கீறி குறியிடுதல் மற்றும் சிறுநீரைத் தெளித்தல் மூலமாக தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.

இவை தம் தேவைக்கு ஏற்ப இடம் பெயர்வதால் நீண்ட காலத் துயிலில் ஈடுபடுவதில்லை.

மேலும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் : சீனாவில் அதிசயம்

சான்றுகள்

தொகு
  1. Scheff, Duncan (2002). Giant Pandas. Animals of the rain forest (illustrated ed.). Heinemann-Raintree Library. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7398-5529-8.
  2. Lindburg, Donald G.; Baragona, Karen (2004). Giant Pandas: Biology and Conservation. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-23867-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டா_கரடி&oldid=3849728" இலிருந்து மீள்விக்கப்பட்டது