ஹல்தர் நாக்

ஹல்தர் நாக் (Haldhar Nag, பிறப்பு: 31 மார்ச் 1950) என்ற இந்தியக் கவிஞர், கோசலி மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். இவருக்கு லோக் கவி ரத்னா என்ற சிறப்புப் பட்டமும் உண்டு. இவர் ஒடிசாவின் பர்கட் மாவட்டத்தில் பிறந்தவர்.[2] இவர் கோசலி மொழியில் நாட்டுப் புறக் கதைகளையும் எழுதியுள்ளார்[2]

ஹல்தர் நாக்

தொழில் கவிஞர்
நாடு இந்தியர்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
பத்மசிறீ[1]
துணைவர்(கள்) மாலதி நாக்
பிள்ளைகள் 1 மகள்

வாழ்க்கைக் குறிப்புதொகு

ஹல்தர் நாக் இந்தியாவின் ஒரிசா மாநில பர்கட் மாவட்டத்தில் கேன்ஸ் (Ghens) எனும் பழங்குடியின[3] வகுப்பில் பிறந்தவர். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தந்தை இறந்த காரணத்தினால், படிப்பை நிறுத்தி விட்டார். பதினாறு ஆண்டுகள் ஒரு பள்ளிக்கூடத்தில் சமையல்காரர் வேலை செய்து கொண்டே காப்பியங்களையும், கவிதைகளையும் எழுதத் தொடங்கினார். தற்போது பள்ளி மாணவர்களுக்கான சிறு எழுதுபொருள் கடை நடத்தி வருகிறார்.

ஒரிசா மாநிலத்தில் பழங்குடியின மக்களின் மொழியான கோசலி மொழியில் (Kosli language) தோடோ பர்காச் (மூத்த ஆலமரம்) என்னும் இவரது முதல் கவிதை நூல் 1990-ஆம் ஆண்டில் வெளியானது. பின்னர் இயற்கை, சமூகம், மதம், புராணங்கள் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட காப்பியங்களையும், கவிதைகளையும் இயற்றினார். அறுபத்து ஆறு வயதான ஹால்தர் நாக்கின் இலக்கியப் பணியை பாராட்டி இந்தியக் குடியரசுத் தலைவர் 28 மார்ச்சு 2016 அன்று பத்மசிறீ விருது வழங்கினார். [4]

எழுதியவைதொகு

 • லோககீத்[2]
 • சம்பார்தா[2]
 • கிருஷ்ணகுரு[2]
 • மகாசதி ஊர்மிளா[2]
 • தாரா மண்டோதரி[2]
 • அச்சியா[2]
 • பச்சார்[2]
 • சிரீ சமலாய்[2]
 • வீர் சுரேந்திர சாய்[2]
 • கரம்சானி[2]
 • ரசியா கவி (துளசிதாசரின் வரலாறு)[2]
 • பிரேம் பாய்ச்சன்[2]

சிறப்புகள்தொகு

 • ஹால்தர் நாக்கின் கவிதைகள் மற்றும் காப்பியங்கள் குறித்து ஐந்து முதுகலைப் பட்ட ஆய்வுகள் வெளிவந்துள்ளன[5].
 • சம்பால்பூர் பல்கலைக்கழகம் இவரது படைப்புகளை பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் வைத்துள்ளது.
 • இவரது வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து பி பி சி ஆவணப்படம் எடுத்துள்ளது.[2]

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹல்தர்_நாக்&oldid=2967988" இருந்து மீள்விக்கப்பட்டது