ஹஸ்டாலன் ஒளி

ஹஸ்டாலன் ஒளி (Hessdalen lights) என்பது நோர்வே நாட்டில் உள்ள ஹஸ்டாலன் என்னும் இடத்திலுள்ள 12 கி.மீ நீளத்திற்கு உள்ள பள்ளத்தாக்கிற்கு மேலாக வானில் திடீரெனத் தோன்றும், சரியாக விபரிக்க முடியாத ஒரு வித்தியாசமான ஒளியைக் குறிக்கும்.[1] பள்ளத்தாக்கின் மேலாக மிதப்பதுபோல் தோன்றும் இந்த ஒளியின் தோற்றம் சரியாக அறியப்படாததாக உள்ளது. அத்துடன் இந்த ஒளித்தோற்றம் பொதுவாக இரவிலும், சில சமயம் பகலிலும் தோன்றியுள்ளது.[2] இந்த ஒளியானது வெள்ளை, மஞ்சள், சிவப்பு, நீலம், செம்மஞ்சள் எனப் பல்வேறு நிறங்களிலும், பல்வேறு வடிவங்களிலும் தோன்றியிருக்கின்றது.[3] சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இதன் தோற்றம் காணப்பட்டிருக்கின்றது. சில சமயம் அசாதாரண வேகத்துடன் அசைந்தும், சில சமயம் மிக மெதுவாக முன்னும் பின்னுமாக அசைந்தும், வேறு சில சமயம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசையாமல் நின்றும் அவதானிக்கப்பட்டிருக்கின்றது.

முதலில் பலரும் இதனை வேற்றுக்கிரக விண்கலம் என்றே நம்பினர்.[3] ஆனால் தற்போது இது வேற்றுக்கிரக விண்கலம் அல்ல எனக் கூறப்பட்டு, மின்காந்த நடத்தைகள் தொடர்பான விளக்கங்கங்கள் அறிவியல் ரீதியாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.[2]

வரலாறு தொகு

ஹஸ்டாலன் பள்ளத்தாக்குப் பகுதியில், 1930 ஆம் ஆண்டுப் பகுதியிலிருந்தாவது இத்தகைய அசாதாரண ஒளித்தோற்றம் தெரிவது அவதானிக்கப்பட்டுள்ளது.[4] 1981 முடிவு தொடக்கம் 1984 வரை இத்தகைய ஒளித்தோற்றம் மிக அதிகளவில் அவதானிக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் ஒரு கிழமையில் 15-20 தடவைகள் இந்த ஒளித்தோற்றம் தெரிந்ததாக அறியப்படுகின்றது.[5][6] ஆனால் பின்னர் அதன் எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது. இதனை ஆராய்வதற்காக ஹஸ்டாலன் திட்டம் என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டம் 1983, ஜூன் 3ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.[7]

ஆராய்ச்சி தொகு

1983 முதல் நோர்வே மற்றும் சுவீடனில் இருக்கும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனங்கள் இந்த ஒளித்தோற்றப்பாட்டை ஹஸ்டாலன் திட்டம் மூலம் ஆய்வு செய்து வருகின்றன. மாணவர்கள், பொறியியலாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் இணைந்து ஒரு முக்கோணத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, 1997 - 1998 ஆண்டுப் பகுதியில் பிரமிட் வடிவில் மேலும் கீழுமாக அசைந்த ஒளித் தோற்றத்தைப் பதிவு செய்தனர்.[8][9] 1998 ஆம் ஆண்டில், ஹஸ்டாலன் தானியங்கி அளவீட்டு நிலையம் பரணிடப்பட்டது 2017-02-20 at the வந்தவழி இயந்திரம் ஒன்று இந்த ஒளித்தோற்றத்தைப் பதிவு செய்வதற்காக, ஹஸ்டாலன் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டது.[10]

பின்னர் இந்த ஒளித்தோற்றப்பாட்டை ஆய்வு செய்யும் அறிவியலாளர்கள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைப்பதற்காக நோர்வேயின் ஒஸ்ட்போல்ட் பல்கலைக் கழகக் கல்லூரியும், இத்தாலிய தேசிய ஆய்வு மன்றமும் இணைந்து EMBLA என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டம் மூலம் இந்த ஒளியை ஆய்வு செய்யத் தொடங்கினர். இதன்மூலம் விவரிக்கப்படாத ஒளிரும் தோற்றப்பாடுகளில் மின்காந்த நடத்தை ஆய்வு செய்யப்பட்டது.[11][12]

கருதுகோள்கள் தொகு

பலவகையான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றபோதிலும், இன்னமும் இந்த ஒளித்தோற்றபாட்டுக்கான முழுமையான, உறுதியான விளக்கம் கொடுக்கப்படவில்லை. பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் அதிநவீன கருவிகள் கொண்டு மேலும் உறுதியான விளக்கங்கள் கொடுக்கப்படலாம்.[2]

மேற்கோள்கள் தொகு

 1. Leone , Matteo  (2003  ). "A rebuttal of the EMBLA 2002 report on the optical survey in Hessdalen  ". Comitato Italiano per il Progetto Hessdalen. pp. 1–29   இம் மூலத்தில் இருந்து 2014-02-07  அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140207211354/http://www.itacomm.net/ph/rebuttal.pdf%C2%A0 . 
 2. 2.0 2.1 2.2 MASSIMOTEODORANI (2004). "A Long-Term Scientific Surveyof the Hessdalen Phenomenon". Journal of Scientific Exploration 18 (2): 217-251. http://www.hessdalen.org/reports/scex1802217251.pdf. 
 3. 3.0 3.1 "The Persistent Mystery Of The Hessdalen Lights". UFO Insight. https://www.ufoinsight.com/the-persistent-mystery-of-the-hessdalen-lights/. பார்த்த நாள்: 26 மே 2019. 
 4. Zanotti, Ferruccio; Di Giuseppe, Massimiliano; Serra, Romano. "Hessdalen 2003: Luci Misteriose in Norvegia" (in it). Comitato Italiano per il Progetto Hessdalen. pp. 4–5 இம் மூலத்தில் இருந்து 2016-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160104154852/http://www.itacomm.net/ph/2008_Columbia.pdf. 
 5. "Project Hessdalen". Project Hessdalen is a project at Østfold University College. http://www.hessdalen.org/index_e.shtml. பார்த்த நாள்: 26 மே 2019. 
 6. Pāvils, Gatis (2010-10-10). "Hessdalen lights". Wondermondo இம் மூலத்தில் இருந்து 2015-07-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150702025009/http://www.wondermondo.com/Countries/E/Norway/SorTrondelag/Hessdalen.htm. 
 7. "Project Hessdalen". Project Hessdalen is a project at Østfold University College. http://www.hessdalen.org/history/. பார்த்த நாள்: 26 மே 2019. 
 8. Ballester Olmos, Vicente‑Juan; Brænne, Ole Jonny (2008). "11 October 1997" (PDF). Norway in UFO Photographs: The First Catalogue. FOTOCAT. Vol. 4. Torino: UPIAR. p. 94. LCCN 2010388262. OCLC 713018022. Archived from the original on 29 December 2015.
 9. "The Triangle Project". 1998 இம் மூலத்தில் இருந்து 2002-10-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20021017031149/http://home.eunet.no/~janbarw/hessdalen/english/main-english.htm. 
 10. "Project Hessdalen - Automatic Measurement Station (AMS) (Blue Box)". Project Hessdalen is a project at Østfold University College. http://www.hessdalen.org/station/. பார்த்த நாள்: 26 மே 2019. 
 11. "The EMBLA 2000 Mission in Hessdalen". PROJECT HESSDALEN HOMEPAGE. http://www.hessdalen.org/reports/EMBLA-2000.pdf. பார்த்த நாள்: 26 மே 2019. 
 12. MATTEO LEONE, Italian Committee for Project Hessdalen (CIPH) scientific advisor. "A rebuttal of the EMBLA 2002 report on the optical survey in Hessdalen: Part Three". Italian Committee for Project Hessdale. http://www.itacomm.net/ph/Reb3.pdf. 
 13. Johansen, Karl Hans (2007-07-16). "Fenomenet Hessdalen" (in no). Norsk rikskringkasting இம் மூலத்தில் இருந்து 2015-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150703100914/http://www.nrk.no/norge/fenomenet-hessdalen-1.2970467. 
 14. Hauge, Bjørn Gitle (2007). Optical spectrum analysis of the Hessdalen phenomenon (PDF) (Report). Archived from the original (PDF) on 2014-08-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹஸ்டாலன்_ஒளி&oldid=3576055" இருந்து மீள்விக்கப்பட்டது