ஹார்பி கழுகு

கார்பி கழுகு
புதைப்படிவ காலம்:கோலோசீன் - அண்மைக்காலம்[1]
CITES Appendix I (CITES)[3]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கார்பியா

வெயிலோட், 1816
இனம்:
கா. கார்பிஜா
இருசொற் பெயரீடு
கார்பியா கார்பிஜா
(லின்னேயஸ், 1758)
கார்பி கழுகு இதன் பரம்பல் முழுவதும் அரிதாக காணப்படுகிறது. மெக்சிகோவிலிருந்து அர்ஜெண்டினா வரை.

கார்பி கழுகு (Harpy eagle) என்பது தென்அமெரிக்க மழைக்காடுகளில் வசிக்கும் ஒரு மிகப் பெரிய கழுகு வகை ஆகும்.

கார்பி கழுகு (கார்பியா கார்பிஜா) என்பது கழுகின் நியோட்ரோபிக் இனமாகும். இது அமெரிக்க கார்பி கழுகு அல்லது பிரேசிலிய கார்பி கழுகு என்றும் பப்புவான் கழுகிலிருந்து வேறுபடுத்துவதற்காக அழைக்கப்படுகிறது, இது சில சமயங்களில் நியூ கினியா கார்பி கழுகு அல்லது பப்புவான் கார்பி கழுகு என்றும் அழைக்கப்படுகிறது. இது இதன் வாழிட வரம்பில் காணப்படும் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த கொண்றுன்னி பறவையாகும். உலகில் உள்ள கழுகுகளின் மிகப்பெரிய இனங்களில் ஒன்றாகும். இது பொதுவாக வெப்பமண்டல தாழ்நில மழைக்காடுகளில் மேல் அடுக்கில் வாழ்கிறது. இதன் இயற்கையான வசிப்பிடத்தின் அழிவு, இதன் முந்தைய வரம்பின் பல பகுதிகளிலிருந்து மறைவதற்கு காரணமாக அமைந்தது. மேலும் இது மத்திய அமெரிக்காவின் பெரும்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில், கார்பி கழுகு ராயல்-ஹாக் என்றும் அழைக்கப்படுகிறது (போர்த்துகீசிய மொழியில்: கவியோ-ரியல்).  கார்பியா இனம், கார்பியோப்சிசு மற்றும் மார்ப்னசு உடன் இணைந்து கார்பினியே என்ற துணைக்குடும்பத்தை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Fossilworks: Harpia harpyja".
  2. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2021). "Harpia harpyja". IUCN Red List of Threatened Species 2021: e.T22695998A197957213. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T22695998A197957213.en. https://www.iucnredlist.org/species/22695998/197957213. பார்த்த நாள்: 1 January 2022. 
  3. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Harpia harpyja
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹார்பி_கழுகு&oldid=3477066" இலிருந்து மீள்விக்கப்பட்டது