ஹீனா சித்து
ஹீனா சித்து (பிறப்பு 29 ஆகத்து 1989) என்பவர் ஒரு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஆவார். இவர் 2014 ஏப்ரல் 7 அன்று உலக துப்பாக்கிச் சுடுதல் மகளிர் கைத்துப்பாக்கி பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரைப் பெற்றவராவார்.[1] இதற்கு முன் இவர் 2013-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் கைத்துப்பாக்கி (Air Pistol) பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.[2]. இவர் அஞ்சலி பகவத் (2003) மற்றும் ககன் நரங் (2008) ஆகியோருக்கு அடுத்து உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் கைத்துப்பாக்கி பிரிவில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஆவார். இவர் அன்னு ராஜ் சிங் உடன் இணைந்து 2010 பொதுநலவாய விளையாட்டு போட்டியின் 10 மீட்டர் மகளிர் கைத்துப்பாக்கி இரட்டையர் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.[3]. இவர் 2018 பொதுநலவாய விளையாட்டு போட்டியின் 25 மீட்டர் மகளிர் கைத்துப்பாக்கி போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 29 ஆகத்து 1989 | ||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | துப்பாக்கி சுடுதல் | ||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
தனிப்பட்ட வாழ்கை
தொகுஹீனாவின்வின் தந்தை தேசிய துப்பாக்கிச் சுடும் வீரர் ஆவார். இவரது சகோதரரும் கூட 10 மீட்டர் காற்று துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். 2013 இல், ஹீனா பல்மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெற்றார்.[4] 7 பிப்ரவரி 201, அன்று, ஹீனா துப்பாக்கி சுடும் வீரரும், அவரது பயிற்சியாளராக இருந்த ராணக் பண்டிட்டை மணந்தார்.[4] ஹீனா, மும்பை, கோரேகாவில் வசித்துவருகிறார்.[5]
துப்பாக்கி சுடுதல்
தொகுசித்து 2006 இல் துப்பாக்கி சுடுதலை தொடங்கினார், தேசிய போட்டிகளில் பங்கேற்றார். இவர் பல் மருத்துவப் பள்ளியில் சேருவதற்கு உதவுவதற்காக துப்பாக்கி சுடுதலை தொடங்கினார்.[4] 2009 இல், சித்து பெய்ஜிங் உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[6] சித்து, அன்னு ராஜ் சிங் மற்றும் சோனியா ராய் ஆகியோருடன், 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் கைத்துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2010 பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான 10 மீட்டர் கைத்துப்பாக்கி பிரிவில் சித்து மற்றும் சிங் தங்கப் பதக்கம் வென்றனர். ஒற்றையர் பிரிவில் சித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.[4][7]
சித்து லண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் உறுப்பினராக இருந்தார். இவர் பெண்களுக்கான 10 மீட்டர் கைத்துப்பாக்கி போட்டியில் பங்கேற்று, தகுதிச் சுற்றில் பன்னிரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[8] சித்து, லண்டன் 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளின் கதை என்ற அதிகாரப்பூர்வ லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தார்..[9][10]
2013 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் முனிச் இல் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சித்து தங்கப் பதக்கம் வென்றார்.[11][12] 2016 இல், சித்து 2016 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு பெண்களுக்கான 10 மீட்டர் பிரிவில் பதினான்காவது இடத்தையும், பெண்களுக்கான 25 மீட்டர் தகுதிச் சுற்றில் இருபதாவது இடத்தையும் பிடித்தார்.[13] 2017 இல், பிரிஸ்பேனில் நடந்த பொதுநலவாய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் கைத்துப்பாக்கி சுடுதல் போட்டியில் சித்து தங்கப் பதக்கம் வென்றார்.[14] 2018 பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில், சித்து பெண்களுக்கான 10 மீட்டர் கைத்துப்பாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், பெண்களுக்கான 25 மீட்டர் கைத்துப்பாக்கி போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.[15]
விருதுகள்
தொகு2014 ஆகத்து 28 அன்று, ஹீனாவுக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.[16]
உசாத்துணைகள்
தொகு- ↑ "Shooter Heena Sidhu claims numero uno spot in 10 m air pistol Rankings". Post.jagran.com. 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
- ↑ "2013 உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஹீனா சித்து தங்கம் வென்றார்". யாஹூ. 10 நவம்பர் 2013. http://in.news.yahoo.com/heena-strikes-gold-at-world-cup-024154620.html.
- ↑ "ஹீனா சித்து, அன்னு ராஜ் சிங் காமன் வெல்த் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றனர்". NDTV. 12 October 2010 இம் மூலத்தில் இருந்து 15 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101015021619/http://cwg.ndtv.com/commonwealth/article/id/spoen20100156312/type/latest/Heena-Sidhu,-Anu-Raj-Singh-bag-gold-shooting-59105.html.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Shooting | Athlete Profile: Heena SIDHU - Gold Coast 2018 Commonwealth Games". results.gc2018.com. Archived from the original on 2018-08-19. பார்க்கப்பட்ட நாள் 2018-08-18.
- ↑ "Gold medal-winning shooter Heena Sidhu on her struggles, husband s support". mid-day. 2017-10-29. https://www.mid-day.com/articles/gold-medal-winning-shooter-heena-sidhu-talks-about-her-struggles-husbands-support/18689195.
- ↑ "With World Cup silver, Sidhu comes of age". The Indian Express. 2009-04-22. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
- ↑ "Heena Sidhu, Anu Raj Singh bag gold in shooting". NDTV. 12 October 2010 இம் மூலத்தில் இருந்து 15 October 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101015021619/http://cwg.ndtv.com/commonwealth/article/id/spoen20100156312/type/latest/Heena-Sidhu,-Anu-Raj-Singh-bag-gold-shooting-59105.html.
- ↑ "Results of 52nd National Shooting Championships in Kerala". Indianshooting.com. Archived from the original on 1 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
- ↑ Rowland, Caroline (2013-05-30), First, John Orozco, Heena Sidhu, David Rudisha, பார்க்கப்பட்ட நாள் 2018-03-16
- ↑ "London 2012: Caroline Rowland's 'First' to Chronicle 12 Competitors' Stories at the Olympics". The Hollywood Reporter. 2012-07-13. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
- ↑ "Heena Sidhu beats World Champion to clinch Gold in Shooting World Cup finals | India at Sports". Indiaatsports.in. 2013-11-11. Archived from the original on 11 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
- ↑ "Indian Shooter Heena Sidhu Will Appear on Cover Page of ISSF Journal". Womenpla.net. 2014-01-03. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
- ↑ "Rio Olympics 2016: Heena Sidhu's campaign ends after failing to qualify for 25m air pistol final". First Post. 9 August 2016. http://www.firstpost.com/sports/rio-olympics-2016-heena-sidhus-campaign-ends-after-failing-to-qualify-for-25-air-pistol-final-2945590.html.
- ↑ "Sidhu clinches gold, Deepak gets bronze at Commonwealth shooting". The Hindu. Press Trust of India (PTI). 31 October 2017 இம் மூலத்தில் இருந்து 11 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171211225543/http://www.thehindu.com/sport/other-sports/sidhu-clinches-gold-deepak-gets-bronze-at-commonwealth-shooting/article19956079.ece.
- ↑ Express Web Desk (10 April 2018). "CWG 2018: Heena Sidhu breaks Commonwealth Games record, wins 11th gold for India". The Indian Express. IE Online Media Services Pvt Ltd. http://indianexpress.com/article/sports/commonwealth-games/cwg-2018-medal-tally-india-heena-sidhu-shooting-5131351/.
- ↑ "Heena Sidhu Profile, Stats, Record: Heena Sidhu breaks CWG record to clinch gold medal in Women's 25m Pistol in Gold Coast". The Indian Express. 1 April 2018. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.