ஹென்ரி ஸ்டீபன்ஸ் சால்ட்

ஹென்றி ஷேக்ஸ்பியர் ஸ்டீபன்ஸ் சால்ட் (Henry Shakespear Stephens Salt; 20 செப்டம்பர் 1851 – 19 ஏப்ரல் 1939) ஒரு பிரித்தானிய எழுத்தாளரும் சமூக சீர்திருத்தப் பிரச்சாரகரும் ஆவார். இவரது சீர்திருத்தப் பிரசாரங்களில் சிறைச்சாலைகள், பள்ளிகள், பொருளாதார நிறுவனங்கள் மற்றும் விலங்குகளிடம் நாம் நடந்து கொள்ளும் விதம் ஆகிய துறைகள் முதன்மையானவை. இவர் ஒரு குறிப்பிடத்தக்க தார்மீக சைவ வாழ்க்கை முறையைக் கொண்டவரும், உடற்கூறாய்வு எதிர்ப்பாளரும், சமூகவுடைமைவாதியும், அமைதிவாதியும் ஆவார். மேலும் இவர் இலக்கிய விமர்சகராகவும், வாழ்க்கைக் குறிப்பு வரலாற்றாசிரியராகவும், பாரம்பரிய அறிஞராகவும், இயற்கை ஆர்வலராகவும் நன்கு அறியப்பட்டவர். மோகன்தாஸ் காந்தியை ஹென்றி டேவிட் தோரோவின் செல்வாக்குமிக்க படைப்புகளுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் சால்ட். மேலும், காந்தியின் சைவ வாழ்வுமுறை பற்றிய ஆய்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரும் இவரே.[1][2] சில சாராரால் சால்ட் "விலங்குரிமைகளின் தந்தை" எனவும் கருதப்படுகிறார்.[3] தனது 1892-ம் ஆண்டு படைப்பான விலங்குகளின் உரிமைகள்: சமூக முன்னேற்றத்துடன் தொடர்புபடுத்திய ஒரு பார்வையில் (Animals' Rights: Considered in Relation to Social Progress) என்ற நூலின் வாயிலாக வெறும் விலங்குகளின் நலனுக்கான மேம்பாட்டுச் செயற்பாடுகள் என்பதற்கு மாறாக விலங்குரிமை என்ற சிந்தனைக்கு ஆதரவாக வெளிப்படையாக வாதிட்ட எழுத்தாளர்களில் முதன்மையானவராக சால்ட் விளங்குகிறார்.

ஹென்ரி ஸ்டீபன்ஸ் சால்ட்
பிறப்புஹென்ரி ஷேக்ஸ்பியர் ஸ்டீபன்ஸ் சால்ட்
(1851-09-20)20 செப்டம்பர் 1851
நைனித்தால், இந்தியா
இறப்பு19 ஏப்ரல் 1939(1939-04-19) (அகவை 87)
பிரைட்டன், இங்கிலாந்து
குடியுரிமைபிரித்தானியர்
கல்வி
பணி
  • எழுத்தாளர்
  • ஆசிரியர்
  • சமூக சீர்திருத்தவாதி
அறியப்படுவது
குறிப்பிடத்தக்க படைப்புகள்விலங்குகளின் உரிமைகள்: சமூக முன்னேற்றத்துடன் தொடர்புபடுத்திய ஒரு பார்வையில் (Animals' Rights: Considered in Relation to Social Progress) (1892)
வாழ்க்கைத்
துணை
  • கேத்தரின் (கேட்) லே ஜாய்னஸ்
    (தி. 1879; இற. 1919)
  • கேத்தரின் மான்டேவில் (தி. 1927)
உறவினர்கள்
கையொப்பம்

தரவுகள்

தொகு
  1. "My faith in vegetarianism grew on me from day to day. Salt's book Plea for Vegetarianism whetted my appetite for dietetic studies. I went in for all books available on vegetarianism and read them". Mohandas Gandhi, An Autobiography: The Story of My Experiments with Truth, Part I, chapter XV.
  2. Ashe, Geoffrey. Gandhi, a Biography. New York: Cooper Square Press, 2000
  3. "Henry Salt - the father of animal rights". International Vegetarian Union (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.

மேலும் படிக்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரி_ஸ்டீபன்ஸ்_சால்ட்&oldid=4085157" இலிருந்து மீள்விக்கப்பட்டது