ஹெர்ஷெல் விண் ஆய்வகம்
ஹெர்ஷெல் விண் ஆய்வகம், விண்வெளியை ஆய்வதற்காக அமைக்கப்பட்டது. இதை ஐரோப்பிய விண்ணாய்வுக் கழகம் இயக்குகிறது. இது 2009 முதல் 2013 ஆண்டு வரை செயல்பட்டது.[1][2] அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்திய உலகின் பெரிய தொலைநோக்கி இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும் தன் நாசா ஆய்வுக் கழகத்தின் மூலம் இந்த திட்டத்தில் இணைந்துள்ளது. ஐரோப்பாவின் பெரிய விண்ணாய்வு திட்டங்களில் இதுவும் ஒன்று. ரொசெட்டா, பிளாங்க், கையா உள்ளிட்ட திட்டங்களுடன் இதுவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்ந்தது. இதன் எடை 3,300 கிலோ.
இது புவியில் இருந்து 1,500,000 கிலோமீட்டர் தொலைவில் எடுத்துச் செல்லப்பட்டு புவியின் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டது. சர் வில்லியம் ஹெர்ஷெல் என்னும் அறிஞர் அகச்சிவப்புக் கதிரை கண்டிபிடித்தார். அவர் நினைவாக இந்த ஆய்வகத்துக்குப் பெயரிடப்பட்டது. விண்வெளியில் உள்ள குளிர்ந்த, தூசிபடர்ந்த பொருட்களை கண்டறியும் திறன் இதற்குள்ளது.[3] இதன் ஆயுள் காலம் இதில் உள்ள குளிர்விப்பானை பொருத்து அமையும். கணக்கெடுப்பின்படி, மூன்றரை ஆண்டுகள் வரை நீடிக்கும் என தெரிய வந்துள்ளது.[4]
வளர்ச்சி
தொகு1982இல், ஐரோப்பிய ஆய்வுக் கழகத்தினால், தொலைநோக்கி உருவாக்கத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது தொலைவில் உள்ள பொருட்களை அகச்சிவப்பு கதிர்களின் மூலம் கண்டறிய பயன்படும். உயர்தர வெளியீட்டை தரும் திட்டம் செயற்படுத்தப்பட்டது.[5] 1993இல் உருவாக்கம் முடிந்தது. புவியின் சுற்றுவட்டப் பாதையில், லகிராஞ்சி புள்ளியில் இதை நிறுத்தி செயற்பாடுகளைச் செய்வது என முடிவெடுக்கப்பட்டது. 2009இல் விண்ணை நோக்கி செலுத்தப்பட்டது. இதற்கு ஆன செலவு 1,100 மில்லியன் யூரோக்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பு, ஏவுதல், திட்டச் செலவுகள், ஆய்வுகள் உள்ளிட்ட அனைத்திற்குமான செலவே இந்த தொகை.
பயன்பாடு
தொகுஇது சூரியக் குடும்பம், பால்வீதி பகுதியில் உள்ள பொருட்களிடமிருந்து ஒளியைப் பெறுவதில் சிறப்பு பெற்றிருந்தது. பல பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்த பொருட்களைப் பற்றி ஆயவும் திறன் பெற்றிருந்தது. இதன் முதன்மை ஆய்வுப் பணிகள் நான்கு. அவை:
- அண்டங்களின் தோற்றமும் பரிணாமமும்
- நட்சத்திரங்களின் தோற்றமும் விண்வெளியில் உள்ள பொருட்களுடனான தொடர்பும்
- சூரியக் குடும்பத்தில் உள்ள பொருட்களில் உள்ள வேதிகூட்டுப் பொருட்களை ஆய்தல்
- பேரண்டம் முழுவதிலும் உள்ள மூலக்கூறுகள் பற்றி ஆய்தல்
இதன் செயல்பாட்டுக் காலத்தில், 35,000 அவதானிப்புகளை வெளியிட்டது. பல்வேறு ஆய்வுத் திட்டங்களுக்கு தேவைப்பட்ட தகவல்களையும் திரட்டித் தந்தது.[6]
கருவிகள்
தொகுஅகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு, மில்லிமீட்டருக்கும் குறைவான அலைக்கற்றையின் மூலம் செயல்படுத்தப்பட்ட முதல் திட்டம் இதுவே. 3.5 மீட்டர் அகலத்துடன், பெரிய கண்ணாடியைக் கொண்டது. விண்வெளியில் வைக்கப்பட்டுள்ள பெரிய கண்ணாடியைக் கொண்ட தொலைநோக்கி இது. கண்ணாடி கிளாசில் செய்யப்படாமல், சிலிக்கான் கார்பைடில் செய்யப்பட்டது.
குறைந்த வெப்ப நிலையைக் கொண்ட மூன்று சென்சர்களில் கண்ணாடியின் ஒளி பிரதிபலிக்கப்பட்டது. கருவிகளை குளிர்விக்க 2300 லிட்டர் நீர்ம நிலை ஹீலியம் பயன்பட்டது. இது தீரும் வரை இந்த ஆய்வகம் செயல்படும். குறைந்தது மூன்றாண்டு காலம் இருக்கும் என எண்ணினர். இதனுடன் அமூன்று உணரிகள் சேர்க்கப்பட்டிருந்தன.
- ஒளியைக் கண்டறியும் கேமரா, ஸ்பெக்ற்றோமீட்டர்
- படமெடுக்கும் கேமராவும், ஸ்பெக்ற்றோமீட்டர்களும் இணைக்கப்பட்டன. இந்த ஸ்பெக்ற்றோமீட்டர் -63 டெசிபல் அளவுள்ள சிக்னல்களையும் கண்டறியும் திறன் கொண்டது.
- ஸ்பெக்ற்றல் அண்ட் போட்டோமெற்றிக் இமேஜிங் ரிசீவர் : (ஒளிவழியாக படமெடுத்தல்)
- இதிலும் கேமராவும் ஸ்பெக்ற்றோமீட்டர்களும் இணைக்கப்பட்டன. இவற்றின் பயன்பாடு வேறுபட்டது. 2 மில்லிஜான்ஸ்கை அளவிற்கும் அதிகமான ஒளியைக் கண்டறியும் திறன் பெற்றிருந்தன.A
இதை பல நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு அமைப்புகள் இணைந்து வடிவமைத்தன.
- தூர அகச்சிவப்புக் கதிர்களுக்கான ஹெடிரோடைன் கருவி
இவற்றில் சிலவற்றைச் செய்ய நாசா உதவியது. இதற்கான உதவிக் கருவியும் செய்யப்பட்டது. அதன் அமைப்பும் செயற்பாடுகளும் பிளாங்க் திட்டத்தின் உதவிக் கருவியை ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆற்றல் தேவையை நிறைவு செய்ய சூரிய ஒளி பயன்படுத்தப்பட்டது. சூரிய ஒளியை சேமிக்க செல்கள் பயன்படுத்தப்பட்டன. மின்கலமும், ஆற்றலைக் கட்டுப்படுத்தும் பகுதியும் இணைக்கப்பட்டிருந்தன.
ஏவுதல்
தொகுகேன்ஸ் மண்டிலியு விண் ஆய்வகத்தில் விண்கலம் வடிவமைக்கப்பட்டது. பிரெஞ்சு கயானாவில் உள்ள கயானா விண்ணாய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்டது. 2009 இல் மே 14 ஆம் நாளில், பிளாங்க் விண்கலத்துடன் இணைத்தே அனுப்பப் பட்டது. நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டது.[7][8][9] இது சூன் 14 ஆம் நாளில் விண்கலத்தை கட்டுப்படுத்தி, தொடர்பு கொண்டனர். சில நாட்களுக்குப் பின்னர், விண்ணில் எடுத்த படங்களை அனுப்பியது. புவியில் இருந்து ஒன்றரை மில்லியன் கிலோமீட்டர் தொலைவில், லகிராஞ்சியன் புள்ளியில் நிறுத்தப்பட்டது.
கண்டுபிடிப்புகள்
தொகுசூலை 21, 2009 இல் இத்திட்டம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. நட்சத்திரத்தின் உருவாக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டது. புவியில் இருந்து தொலைநோக்கிகளின் மூலம் கண்டறிந்து உறுதி செய்யப்பட்டது, முன்னர் நெபுலா என கணிக்கப்பட்ட இடம் ஒன்று இந்த ஆய்வின் மூலம் நட்சத்திரம் உருவாகும் இடம் என்று அறியப்பட்டுள்ளது.
2010 சூலையில், இதன் ஆய்வு முடிவுகளைக் கொண்டு வானியல், வானியற்பியலில் பல ஆய்வேடுகள் வெளியிடப்பட்டன. மீண்டு 2010 அக்டோபரில் மற்றோர் ஆய்வு வெளியானது. இக்காலகட்டத்தில், இதன் கருவி ஒன்று செயலிழந்தது.
2011 ஆகஸ்டில், விண்வெளியில் ஆக்சிஜன் மூலக்கூறு நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு, உறுதிபடுத்தப்பட்டது. இது ஹார்ட்லி என்ற குறுங்கோளில் உள்ள டியூட்டரியம் அளவினை கணக்கிட்டது. பூமியில் தண்ணீர் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. அக்டோபரில், பெருங்கடலில் உள்ள நீரின் ஆவியைப் போன்றே வேறு நட்சத்திரத்திலும் இருப்பதைக் கண்டறிந்தது. அண்ட வெடிப்பின் காரணமாக நட்சத்திரங்கள் தோன்றியதாகவும் இதன் ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். இதன் இறுதிக்காலத்தில், வியாழன் (ஜுபீடரில்) நீர் இருப்பதற்கு காரணமாக அருகில் உள்ள குறுங்கோள் ஒன்றின் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது. 2013 ஏப்பிரல் 29இல், இதில் இருந்த குளிர்விப்பானும் தீர்ந்தது. இதன் மூலம், இந்த கருவி செயலிழக்கும் நிலையை அடைந்தது. இந்த திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதை சூரியனை நோக்கியோ, நிலவை நோக்கியோ நகர்த்தலாம் என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டன. சூரியனை நோக்கி நகர்த்துவது என்று முடிவானது. 2013 சூன் 17இல், இந்த திட்டம் முடிக்கப்பட்டது. இதனுடன் பூமியில் இருந்த ஆய்வகத்திற்கான தொடர்புகள் முடக்கப்பட்டன. இதன் கருவிகளும் செயலிழக்குமாறு செய்யப்பட்டன. விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று.
சான்றுகள்
தொகு- ↑ "ESA launches Herschel and Planck space telescopes". Aerospaceguide. பார்க்கப்பட்ட நாள் 3 December 2010.
- ↑ "ESA launches Herschel and Planck space telescopes". Euronews. Archived from the original on 28 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 3 December 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ ESA Science & Technology: Herschel. Retrieved on 28 July 2010
- ↑ "Infrared Space Astronomy: Herschel". Max-Planck-Institut für Astronomie. Archived from the original on 29 ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 29 June 2009.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ The First Mission: Baseline, Science Objectives and Operations, Authors: Pilbratt, G. Journal: The Far Infrared and Submillimetre Universe. 1997., p.7
- ↑ Atkinson, Nancy (29 April 2013). "Herschel Space Telescope Closes Its Eyes on the Universe". Universe Today. பார்க்கப்பட்ட நாள் 29 April 2013.
- ↑ Leo Cendrowicz (14 May 2009). "Two Telescopes to Measure the Big Bang". Time இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130826162128/http://www.time.com/time/health/article/0,8599,1898174,00.html. பார்த்த நாள்: 16 May 2009.
- ↑ Launch of Herschel and Planck satellites(.SWF)[video].Arianespace.Retrieved on 16 May 2009. பரணிடப்பட்டது 2011-04-01 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Herschel Latest News, on line herschel.esac.esa.int