ஹேமா சீனிவாசன்

ஹேமா சீனிவாசன் (பிறப்பு 1959) [1] இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும், பரிமாற்ற இயற்கணிதம் மற்றும் இயற்கணித வடிவவியலில் நிபுணத்துவம் பெற்றவருமாவார். தற்போது, மிசோரி பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஹேமா 1975 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் தேசிய அறிவியல் திறமையாளராக இருந்துள்ளார். முன்னதாக பம்பாய் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை ஆனர்ஸ்  பட்டம் பெற்றுள்ள இவர், 1978 ஆம் ஆண்டு கணிதத்திற்கான கியா பரிசையும்,[2] 1982 ஆம் ஆண்டு இந்தியானா பல்கலைக்கழகம் ப்ளூமிங்டனில் இருந்து முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார். 1986 ஆம் ஆண்டுபிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முனைவர் ஆய்வையும் முடித்துள்ளார். சில நியமனத் தீர்மானங்களில் பெருக்கல் கட்டமைப்புகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து எழுதப்பட்ட இவரது முனைவர் ஆய்வு கட்டுரையானது, டேவிட் புக்ஸ்பாம் ஆல் கவனிக்கப்பட்டு மேற்பார்வையிட்டுள்ளது. [3]}} 1986 ஆண்டு முதல் 1988 ஆண்டு வரை மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் வருகை பேராசிரியராகவும், 1988 ஆண்டு முதல் 1989 ஆண்டு வரை பர்டூ பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்த பிறகு, 1989 ஆண்டில் மிசோரி பல்கலைக்கழகத்தில் கணித பாடப்பிரிவில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார். மேலும் தற்போது கணித மாணவர் பிரிவில் பெண்களுக்கான சங்கத்தின் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

"இயற்கணித மற்றும் இயற்கணித வடிவவியலுக்கான பங்களிப்புகள், வழிகாட்டுதல் மற்றும் கணித சமூகத்திற்கான சேவைக்காக" தேர்ந்தெடுக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு அமெரிக்க கணிதவியல் சங்கத்தின் உறுப்பினராகவும், ஹேமா இருந்து வருகிறார். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. Birth year from Library of Congress catalog entry, retrieved 2018-12-02.
  2. University of Missouri faculty webpage, பார்க்கப்பட்ட நாள் 2022-09-22
  3. கணித மரபியல் திட்டத்தில் ஹேமா சீனிவாசன்
  4. New fellows, American Mathematical Society, பார்க்கப்பட்ட நாள் 2017-11-19
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமா_சீனிவாசன்&oldid=3679438" இலிருந்து மீள்விக்கப்பட்டது