ஹைவேவிஸ்
ஹைவேவிஸ் (ஆங்கிலம்:Highwavys), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் சின்னமனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஹைவேவிஸ் இப்பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்கள் மேகமலை, மணலாறு, அப்பர்மணலாறு, வெண்ணியாறு, மகராஜன்மெட்டு, இரவங்கலாறு ஆகும்.
இப்பகுதியில் தேயிலை, காப்பி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென்பழநியில் இருந்து ஹைவேவிஸ் கிராமத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.
இப்பேரூராட்சி, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,882 மக்கள்தொகையும், 46.82 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 15 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது ஆண்டிபட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
போக்குவரத்து வசதிகள்
தொகுதேனியிலிருந்து 55 கிமீ தொலைவில் அமைந்த ஹைவேவிஸ் செல்ல, தேனியிலிருந்து, சின்னமனூர், மேகமலை வழியாகச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.