ஹொங்கொங் பூங்கா

ஹொங்கொங் பூங்கா (Hong Kong Park) எனும் பூங்கா, ஹொங்கொங், ஹொங்கொங் தீவு பகுதியில், மையம் நகரத்தின் வானளாவிகளின் நடுவே இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பூங்காவாகும். இதன் நிலப்பரப்பளவு 80,000 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்களாகும். இந்த பூங்கா 1991 ஆம் ஆண்டு ஹொங்கொங் பிரித்தானியரின் ஆட்சியில் இருந்தக் காலத்தில் உருவாக்கம் பெற்றது. அப்போதைய பெருமதியின் படி HK$ 398 மில்லியன் டொலர்கள் இந்த பூங்காவின் கட்டுமாணத்திற்கு செலவிடப்பட்டுள்ளன. தற்கால வசதிகளுடன் கூடிய வகையில் இப்பூங்கா கட்டுவிக்கப்பட்டுள்ளது. பூங்காவின் உள்ளேயே அருங்காட்சியங்கள், திருமணப் பதிவகம், உணவகம், தாவரவியல் பகுதி, நீர்வீழ்ச்சி, குகை, மற்றும் அகன்றவெளி பறவையகம் என பல்வேறு பகுதிகள் உள்ளன.

ஹொங்கொங் பூங்காவின் காட்சி

இப்பூங்கா ஹொங்கொங் வாழ் மக்கள் மட்டுமன்றி, ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் ஒரு இடமாகவும் உள்ளது.

பூங்காவின் முகப்பு பகுதியில் உள்ள விநோத குடை வடிவ நீர்வீழ்ச்சி, நீர்வீழ்ச்சியின் உள்ளிருந்து வெளியில் பாயும் பெண்

மேற்கோள்கள்தொகு


வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hong Kong Park
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்கொங்_பூங்கா&oldid=3230123" இருந்து மீள்விக்கப்பட்டது