ஹோர்முஸ் தீவு
ஹோர்முஸ் தீவு ( Hormuz Island) ஈரான் நாட்டின் தென்மேற்கில் உள்ள ஹோர்மொஸ்கான் மாகாணத்தைச் சேர்ந்த தீவு ஆகும். இத்தீவு பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவிற்கு நடுவில் அமைந்த ஓர்முசு நீரிணையில் ஹோமுஸ் தீவு உள்ளது. இத்தீவு ஈரான் நாட்டின் கடற்கரையிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பல வண்ண மணற்பரப்புகள் கொண்டதால் இத்தீவை வானவில் தீவு என்றும் அழைப்பர். இத்தீவு அழகான செம்மண் கடற்கரை கொண்டுள்ளது.[1]இத்தீவில் அழகிய அருங்காட்சியகம் உள்ளது.[2]Hormuz [3]
ஹோர்முஸ் தீவு | |
---|---|
ஆள்கூறுகள்: 27°04′N 56°28′E / 27.067°N 56.467°E | |
நாடு | ஈரான் |
மாகாணம் | ஹோர்மொஸ்கான் |
பரப்பளவு | |
• நிலம் | 42 km2 (16.2 sq mi) |
ஏற்றம் | 186 m (610 ft) |
நேர வலயம் | ஒசநே+3:30 (ஈரானிய சீர் நேரம்) |
புவியியல்
தொகுஹோர்முஸ் தீவு 42 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இத்தீவின் மேற்பரப்பு வண்டல் பாறைகளும், எரிமலையால் உமிழப்பட்ட கனிமங்களும் கொண்டது. இத்தீவின் உயரமான பகுதி, கடல் மட்டத்திலிருந்து 186 மீட்டர் உயரத்தில் உள்ளது. மழை வளம் இல்லாததால், இத்தீவின் மணல் மற்றும் நீர் மிகவும் உப்புத் தன்மை கொண்டுள்ளது. எனவே இத்தீவின் கடற்கரைகளில் அலையாத்தித் தாவரங்கள் வளர்க்கப்படுகிறது. இத்தீவின் கடற்கரை செம்மண் மற்றும் வெள்ளி நிற மணல், வண்ணப்ப பாறைகள் கொண்டது. இத்தீவின் தென்மேற்கில் வானவில் பள்ளத்தாக்கு உள்ளது. இத்தீவில் உள்ள ஜெலக் மலையின் சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது. காரணம் தீவின் எரிமலை பாறைகளிலிருந்து பெறப்பட்டதாகக் கருதப்படும் இரும்பு ஆக்சைடான ஹெமாடைட் காரணம் ஆகும். இத்தீவில் கிடைக்கும் காவி நிற செம்மண் சாயமிடுதல், மட்பாண்டங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் ஓவியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது
படக்காட்சியகம்
தொகு-
ஹோர்முஸ் தீவின் கடற்கரை
-
ஹோர்முஸ் தீவு
-
ஹோர்முஸ் கோட்டை
-
ஹோர்முஸ் தீவின் ஹரா காடுகள்
-
ஹோர்முஸ் கடலை ஒட்டிய மலைச்சிகரம்
-
ஹோர்முஸ் கடற்கரையில் காவி வண்ண இரும்பு ஆக்சைடு மணல் வேலைப்பாடுகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ Hormuz, the rainbow island of Iran. Tehran Times (2017-10-14). Retrieved 2020-03-28.
- ↑ பூமியின் அதிசயம்: உண்ணக்கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு
- ↑ Hormuz island, Iran