.இந்தியா

இது இந்திய நாட்டிற்கான அதியுயர் ஆள்களப் பெயர்.

.இந்தியா (ஆங்கிலம்: .in, தேவநாகரி: .भारत, உருது: .بھارت, தெலுங்கு: .భారత్, குஜராத்தி: .ભારત, பஞ்சாபி: .ਭਾਰਤ, வங்காளம்: .ভারত) என்பது இந்தியாவுக்கான இணையத்தின் உயர் ஆள்களப் பெயராகும். ஆங்கிலத்தில் அமைந்த .in ஆள்களப் பெயரானது 1989ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆள்களப் பெயர் இந்திய இணையப் பெயர்ப் பதிவகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்திய இணையப் பெயர்ப் பதிவகம் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனமாகும்.[2]

.in
.in
அறிமுகப்படுத்தப்பட்டது 1989
அ. ஆ. பெ. வகை உயர் ஆள்களப் பெயர்
நிலைமை இயங்குநிலை
பதிவேடு இந்திய இணையப் பெயர்ப் பதிவகம்
வழங்கும் நிறுவனம் என். ஐ. எக்சு. ஐ.
பயன்பாட்டு நோக்கம்  இந்தியாவுடன் தொடர்புடைய அமைப்புக்கள் அல்லது நிறுவனங்கள்
ஆவணங்கள் ஆவணங்கள்
பிணக்கு கொள்கைகள் கொள்கைகள்
வலைத்தளம் www.registry.in
இந்தியா
அறிமுகப்படுத்தப்பட்டது
அ. ஆ. பெ. வகை உயர் ஆள்களப் பெயர்
நிலைமை இயங்குநிலை
பதிவேடு இந்திய இணையப் பெயர்ப் பதிவகம்
வழங்கும் நிறுவனம் என். ஐ. எக்சு. ஐ.
பயன்பாட்டு நோக்கம்  இந்தியாவுடன் தொடர்புடைய அமைப்புக்கள் அல்லது நிறுவனங்கள்
உண்மை பயன்பாடு எதற்காகவும்
பதிவு கட்டுப்பாடுகள் சில தமிழ் ஒலியியல்/எழுத்தியல் விதிமுறைகள்[1]
ஆவணங்கள் ஆவணங்கள்
பிணக்கு கொள்கைகள் கொள்கைகள்
வலைத்தளம் www.registry.in

துணை ஆள்களப் பெயர்கள்

தொகு

ஆறு துணை ஆள்களப் பெயர்கள் தகுதியுள்ள இந்திய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை:

  • .ac.in (கல்வி சார்ந்த நிறுவனங்கள்)
  • .edu.in (கல்வி நிறுவனங்கள்)
  • .res.in (இந்திய ஆய்வு நிறுவனங்கள்)
  • .ernet.in (பழைய ஆள்களப் பெயர், கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களுக்கு)
  • .gov.in (இந்திய அரசு)
  • .mil.in (இந்திய இராணுவம்)[3]

உள்நாட்டு மொழிகளில்

தொகு

22 உள்நாட்டு மொழிகளில் ஆள்களப் பெயர் பெறுவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவை 2012இன் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.registry.in/system/files/INTERNATIONALIZED_DOMAIN_NAMES-TAMIL.pdf
  2. [".in பற்றி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-02-15. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20. .in பற்றி (ஆங்கில மொழியில்)]
  3. ["முதல் நிலை ஆள்களப் பெயர் பற்றி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-03-24. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20. முதல் நிலை ஆள்களப் பெயர் பற்றி (ஆங்கில மொழியில்)]
  4. ["இந்தியா அனைத்து 22 தேசிய மொழிகளிலும் ஆள்களப் பெயர்களை அறிமுகப்படுத்துகின்றது (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20. இந்தியா அனைத்து 22 தேசிய மொழிகளிலும் ஆள்களப் பெயர்களை அறிமுகப்படுத்துகின்றது (ஆங்கில மொழியில்)]
"https://ta.wikipedia.org/w/index.php?title=.இந்தியா&oldid=3539977" இலிருந்து மீள்விக்கப்பட்டது