1,1,1-முப்புளோரோ அசிட்டைலசிட்டோன்

வேதிச் சேர்மம்

1,1,1-முப்புளோரோ அசிட்டைலசிட்டோன் (1,1,1-Trifluoroacetylacetone) என்பது CF3C(O)CH2C(O)CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம புளோரின் சேர்மமான இது ஒரு நிறமற்ற நீர்மமாகும். மற்ற 1,3- இருகீட்டோன்களைப் போல இதுவும் பல்லின சேர்மங்களை தயாரிக்க முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. எ.கா:உலோக அசிட்டைலசிட்டோனேட்டு, பைரசோல்கள்.[1] முப்புளோரோஅசிட்டிக் அமிலத்தின் எசுத்தர்களை அசிட்டோனுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் 1,1,1-முப்புளோரோ அசிட்டைலசிட்டோனை தயாரிக்கலாம்.[2]

1,1,1-முப்புளோரோ அசிட்டைலசிட்டோன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1,1-முப்புளோரோபெண்டேன்-2,4-டையோன்
வேறு பெயர்கள்
1,1,1-முப்புளோரோ-2,4-பெண்டாடையோன், (முப்புளோரோ அசிட்டைல்)அசிட்டோன், 1,1,1-(முப்புளோரோ அசிட்டைல்)அசிட்டோன், 1,1,1-முப்புளோரோ அசிட்டைலசிட்டோன்
இனங்காட்டிகள்
367-57-7
ChemSpider 66573
EC number 206-698-5
InChI
  • InChI=1S/C5H5F3O2/c1-3(9)2-4(10)5(6,7)8/h2H2,1H3
    Key: SHXHPUAKLCCLDV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 73943
SMILES
  • CC(=O)CC(=O)C(F)(F)F
UNII 9N20A8G8SW
பண்புகள்
C5H4F3O2
வாய்ப்பாட்டு எடை 153.08 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.27 கி/செ.மீ3
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226, H302, H312, H315, H319, H332
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P303+361+353
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

புரோட்டான் அணுக்கருக் காந்தஒத்திசைவு அலைமாலையியல் பகுப்பாய்வின்படி, இச்சேர்மம் முக்கியமாக (97% 33 பாகை செல்சியசு வெப்பநிலையில்) ஈனோலாக உள்ளது. இதே நிலைமைகளின் கீழ் ஒப்பிடுகையில், அசிட்டைலசிட்டோன் மற்றும் அறுபுளோரோஅசிட்டைலசிட்டோனின் ஈனோல் சதவீதம் முறையே 85 மற்றும் 100% ஆகும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Morris, M. L.; Moshier, Ross W.; Sievers, Robert E. (1967). "Tetrakis(1,1,1-trifluoro-2,4-pentanedionato)zirconium(and Hafnium)". Inorganic Syntheses. 9. பக். 50–52. doi:10.1002/9780470132401.ch15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132401. 
  2. Henne, Albert L.; Newman, Melvin S.; Quill, Laurence L.; Staniforth, Robert A. (1947). "Alkaline condensation of fluorinated esters with esters and ketones". Journal of the American Chemical Society 69 (7): 1819–20. doi:10.1021/ja01199a075. 
  3. Jane L. Burdett; Max T. Rogers (1964). "Keto-Enol Tautomerism in β-Dicarbonyls Studied by Nuclear Magnetic Resonance Spectroscopy. I. Proton Chemical Shifts and Equilibrium Constants of Pure Compounds". J. Am. Chem. Soc. 86: 2105–2109. doi:10.1021/ja01065a003.