1,2,4-முக்குளோரோபென்சீன்

1,2,4-முக்குளோரோபென்சீன் (1,2,4-Trichlorobenzene) C6H3Cl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். முக்குளோரோபென்சீனின் மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். பென்சீனின் வழிப்பெறுதியான இச்சேர்மத்தில் மூன்று குளோரின் அணுக்கள் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. கரிமக் குளோரின் சேர்மம் என வகைப்படுத்தப்பட்டுகிறது. நிறமற்ற நீர்மமான 1,2,4-முக்குளோரோபென்சீன் பல்வேறு வகையான வேதிப் பொருள்களைக் கரைக்கும் கரைப்பானாகப் பயன்படுகிறது.

1,2,4-முக்குளோரோபென்சீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2,4-முக்குளோரோபென்சீன்
இனங்காட்டிகள்
120-82-1 Y
ChEBI CHEBI:28222 N
ChemSpider 13862559 Y
InChI
  • InChI=1/C6H3Cl3/c7-4-1-2-5(8)6(9)3-4/h1-3H<
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13
SMILES
  • Clc1ccc(Cl)c(Cl)c1
UNII 05IQ959M1N Y
பண்புகள்
C6H3Cl3
வாய்ப்பாட்டு எடை 181.44 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் aromatic[1]
அடர்த்தி 1.46 கி செ.மீ −3
உருகுநிலை 16.9 °C (62.4 °F; 290.0 K)
கொதிநிலை 213.5 °C (416.3 °F; 486.6 K)[2]
0.003% (20 °செல்சியசு)[1]
ஆவியமுக்கம் 1 மிமீபாதரசம் (20 °செல்சியசு)[1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 110 °C (230 °F; 383 K)
வெடிபொருள் வரம்புகள் 2.5%-6.6% (150°செல்சியசு)[1]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
இல்லை[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
மில்லியனுக்கு 5 பகுதிகள் (40 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
உறுதி செய்யப்படவில்லை.[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

நிலைமைகள் மற்றும் சேர்க்கைகளைப் பொறுத்து (எ.கா:கந்தகம்), பென்சீனை குளோரினேற்றம் செய்து இதை தயாரிக்க முடியும். கிட்டத்தட்ட 1,4-இருகுளோரோபென்சீனை குளோரினேற்றம் செய்து பிரத்தியேகமாகவும் தயாரிக்கலாம். அறுகுளோவளையயெக்சேனிலிருந்து ஐதரசன்குளோரைட்டை நீக்கம் செய்தும் 1,2,4-முக்குளோரோபென்சீனை தயாரிக்க முடியும்.[3]

பயன் தொகு

அரைதிண்ம கரைசல் ஊடுருவும் நிறப்பிரிகை போன்ற செயல்பாடுகளில் உயர்வெப்ப கரைப்பானாக இது பயன்படுகிறது. இதைத்தவிர சாயங்கள் பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பிலும் முன்னோட்டிச் சேர்மமாக 1,2,4-முக்குளோரோபென்சீன் பயன்படுகிறது.

பாதுகாப்பு தொகு

எலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கப்படும்போது எல்டி50 எனப்படும் உயிர்கொல்லும் அளவு 756 மிகி / கிலோ ஆகும். 1,2,4-முக்குளோரோபென்சீன் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கிறது என விலங்கு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[4] இரசாயன வெளிப்பாடு குறித்த ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில் வெளிப்பாடு வரம்பு எதுவும் இல்லை. ஆனால் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தேசிய நிறுவனம் ஒரு 8 மணி நேர வேலை நாளில் மில்லியனுக்கு 5 பகுதிகள் வெளிப்பாட்டை பரிந்துரைக்கிறது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0627". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Jaw, Ching-Guang; Chen, I-Ming; Yen, Jui-Hung; Wang, Yei-Shung (December 1999). "Partial solubility parameters of chlorobenzene and chlorophenol compounds at equilibrium distribution in two immiscible phases". Chemosphere 39 (15): 2607–2620. doi:10.1016/s0045-6535(99)00173-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0045-6535. https://archive.org/details/sim_chemosphere_1999-12_39_15/page/2607. 
  3. Beck, U.; Löser, E. (2005), "Chlorinated Benzenes and other Nucleus-Chlorinated Aromatic Hydrocarbons", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.o06_o03
  4. CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2,4-முக்குளோரோபென்சீன்&oldid=3520784" இலிருந்து மீள்விக்கப்பட்டது