1,3-ஈரமினோபுரோப்பேன்
1,3-ஈரமினோபுரோப்பேன் (1,3-Diaminopropane) என்பது (CH2)3(NH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 1,3- டையமினோபுரோப்பேன், மும்மெத்திலீன் ஈரமீன், மும்மெத்திலீன்டையமீன் என்ற பெயர்களாலும் அழைக்கலாம். எளிய இந்த ஈரமீன் மீன் வாசனை கொண்ட ஒரு நிறமற்ற நீர்மமாகும். தண்ணீரிலும் பல முனைவுக் கரைபான்களிலும் மும்மெத்திலீன்டையமீன் கரையும். இது 1,2-ஈரமினோபுரோப்பேனுடன் மாற்றியப் பண்பைக் கொண்டுள்ளது. பல்லினவளையங்களைத் தொகுக்கும் கரிம வினைகளில் நெசவுத் தொழிலில் துணிகளை இறுதிசெய்வது மற்றும் ஒருங்கிணைவுச் சேர்மங்களில் பயன்படுத்துவதைப் போல இவ்விரண்டு சேர்மங்களும் கட்டுறுப்புத் தொகுதிகளாக உள்ளன. அக்ரைலோநைட்ரைலை அமீனேற்றம் செய்வதால் உருவாகும் அமினோபுரோப்பியோநைட்ரலை தொடர்ந்து ஐதரசனேற்றம் செய்து 1,3-ஈரமினோபுரோப்பேன் தயாரிக்கப்படுகிறது [1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்-1,3-டையமீன்
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
109-76-2 | |
3DMet | B00214 |
Beilstein Reference
|
605277 |
ChEBI | CHEBI:15725 |
ChEMBL | ChEMBL174324 |
ChemSpider | 415 |
EC number | 203-702-7 |
Gmelin Reference
|
1298 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00986 |
ம.பா.த | trimethylenediamine |
பப்கெம் | 428 |
வே.ந.வி.ப எண் | TX6825000 |
| |
UN number | 2922 |
பண்புகள் | |
C3H10N2 | |
வாய்ப்பாட்டு எடை | 74.13 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | மீன், அமோனியா |
அடர்த்தி | 888மி.கி மி.லி −1 |
உருகுநிலை | −12.00 °C; 10.40 °F; 261.15 K |
கொதிநிலை | 140.1 °C; 284.1 °F; 413.2 K |
மட. P | −1.4 |
ஆவியமுக்கம் | <1.1 கிலோபாசுக்கல் அல்லது 11.5 மிமீ Hg (20 °செல்சியசில்) |
-58.1·10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.458 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H226, H302, H310, H314 | |
P280, P302+350, P305+351+338, P310 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 51 °C (124 °F; 324 K) |
Autoignition
temperature |
350 °C (662 °F; 623 K) |
வெடிபொருள் வரம்புகள் | 2.8–15.2% |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆல்க்கைன் சிப்பர் வினையில் பொட்டாசியம் உப்பு பயன்படுத்தப்படுகிறது[2]
பைரோசேன்ட்ரோன், லோசோசேன்ட்ரோன் தயாரிப்பில் 1,3- டையமினோபுரோப்பேன் பயன்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பு
தொகு1,3-டையமினோபுரோப்பேன் உயிர் கொல்லும் அளவு 177 மி.கி கி.கி−1 அளவு முயல் தோலில் படநேர்ந்தால் நச்சுத்தன்மையை அளிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Karsten Eller, Erhard Henkes, Roland Rossbacher, Hartmut Höke "Amines, Aliphatic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a02_001
- ↑ C. A. Brown and A. Yamashita (1975). "Saline hydrides and superbases in organic reactions. IX. Acetylene zipper. Exceptionally facile contrathermodynamic multipositional isomeriazation of alkynes with potassium 3-aminopropylamide". J. Am. Chem. Soc. 97 (4): 891–892. doi:10.1021/ja00837a034.