1,3-டைநைட்ரோபென்சீன்

1,3-டைநைட்ரோபென்சீன் (1,3-Dinitrobenzene) என்பது C6H4(NO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்திண்மமான இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. டைநைட்ரோபென்சீனின் அறியப்பட்டுள்ள மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும்.

1,3-டைநைட்ரோபென்சீன்
இனங்காட்டிகள்
99-65-0
ChEBI CHEBI:51397
ChEMBL ChEMBL114070
ChemSpider 7172
EC number 202-776-8
InChI
  • InChI=1S/C6H4N2O4/c9-7(10)5-2-1-3-6(4-5)8(11)12/h1-4H
    Key: WDCYWAQPCXBPJA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7452
வே.ந.வி.ப எண் CZ7350000
SMILES
  • C1=CC(=CC(=C1)[N+](=O)[O-])[N+](=O)[O-]
UNII DK8B627BU0
UN number 1597 3443
பண்புகள்
C6H4N2O4
வாய்ப்பாட்டு எடை 168.11 g·mol−1
தோற்றம் மஞ்சள் திண்மம்
அடர்த்தி 1.575 கி/செ.மீ3
உருகுநிலை 89.6 °C (193.3 °F; 362.8 K)
கொதிநிலை 297 °C (567 °F; 570 K)
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H300, H310, H330, H373, H400, H410
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P314, P320
தீப்பற்றும் வெப்பநிலை 149°செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

நைட்ரோபென்சீனை நைட்ரோயேற்றம் செய்வதன் மூலம் 1,3- டைநைட்ரோபென்சீன் தயாரிக்கப்படுகிறது. கந்தக அமிலத்தை அமில வினையூக்கியாகப் பயன்படுத்தி இவ்வினை நிகழ்த்தப்படுகிறது. நைட்ரோ குழுவின் இயக்க விளைவு காரணமாக மெட்டா நிலையில் நைட்ரோயேற்றம் நிகழ்ந்து 93% 1,3-டைநைட்ரோபென்சீன் உருவாகிறது. ஆர்த்தோ மற்றும் பாரா நிலை விளைபொருள்கள் முறையே 6% மற்றும் 1% மட்டுமே கிடைக்கின்றன[1]

 .

வினைகள் தொகு

1,3- டைநைட்ரோபென்சீனுடன் நீரிய கரைசலில் சோடியம் சல்பைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் 3-நைட்ரோ அனிலின் உருவாகிறது. மேலும், இரும்பு மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் மெட்டா-பீனைலீன்டையமீன் கிடைக்கிறது [2].

மேற்கோள்கள் தொகு

  1. Joachim Buddrus (2003). Grundlagen der organischen Chemie (3 ). Berlin: de Gruyter. பக். 360. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-11-014683-5. 
  2. Hans Beyer and Wolfgang Walter (1981). Lehrbuch der Organischen Chemie (19 ). Stuttgart: S. Hirzel Verlag. பக். 536, 542. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-7776-0356-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,3-டைநைட்ரோபென்சீன்&oldid=2616283" இலிருந்து மீள்விக்கப்பட்டது