1-எப்டேனால்
1-எப்டேனால் (1- Heptanol ) என்பது ஏழு கார்பன்களைக் கொண்ட சங்கிலியால் ஆன ஓர் ஆல்ககால் ஆகும். இதனுடைய சுருங்கிய மூலக்கூறு வாய்பாடு CH3(CH2)6OH.[1] . நிறமற்ற இத்திரவம் நீரில் சிறிதளவே கரைகிறது. ஆனால் எத்தனால், ஈதர் போன்ற கரைப்பான்களுடன் கலக்கும் இயல்பு கொண்டுள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எப்டேன்-1-ஆல்
| |
வேறு பெயர்கள்
எப்டைல் ஆல்ககால்
n- எப்டைல் ஆல்ககால் எத்தனாயிக்கமிலம் | |
இனங்காட்டிகள் | |
111-70-6 | |
ChEMBL | ChEMBL273459 |
ChemSpider | 7837 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8129 |
| |
UNII | 8JQ5607IO5 |
பண்புகள் | |
C7H16O | |
வாய்ப்பாட்டு எடை | 116.20 g·mol−1 |
அடர்த்தி | 0.8187 g/cm³ |
உருகுநிலை | −34.6 °C (−30.3 °F; 238.6 K) |
கொதிநிலை | 175.8 °C (348.4 °F; 448.9 K) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.423 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of combustion ΔcH |
-4637.9 kJ/mol |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 76 °C (169 °F; 349 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மீள்பார்வை
தொகு1-எப்டேனாலுக்கு 2-எப்டேனால் 3-எப்டேனால் மற்றும் 4-எப்டேனால் என்ற மூன்று கூடுதலான நேர்சங்கிலி மாற்றியன்கள் உள்ளன. இவை மூன்றும் செயற்படும் ஐதராக்சில் குழு இருக்குமிடத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
இணைப்புகளில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் இதய மின்சோதனைகளில் எப்டேனால் பயனாகிறது. மேலும் இது தசைத் திசுக்களுக்கு இடையேயான அச்சுஎதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. அதிகரிக்கப்பட்ட இந்த எதிர்ப்புச்சக்தியால் கடத்தல் திசைவேகம் குறைந்து உள்ளெழும் கிளர்ச்சி மற்றும் தளராது நீடிக்கும் இதயதுடிப்புக்கு ஏற்ற வகையில் இதயத்தின் ஏற்புத்தன்மை அதிகரிக்கிறது.
1-எப்டேனால் இனிய மணம் கொண்டிருப்பதால் ஒப்பனைப் பொருட்களில் இந்த நறுமணம் உபயோகமாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ CRC Handbook of Chemistry and Physics (65th ed.).
இவற்றையும் காண்க
தொகு