1-புரோமோபியூட்டேன்
1-புரோமோபியூட்டேன் (1-Bromobutane) என்பது CH3(CH2)3 Br என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். நிறமற்ற நிர்மமாக இச்சேர்மம் காணப்பட்டாலும் மாசு நிறைந்த மாதிரிகள் மஞ்சள் நிறமாகக் காணப்படுகின்றன. 1-புரோமோபியூட்டேன் நீரில் கரையாது ஆனால் கரிமக் கரைப்பான்களில் கரையும். கரிமத் தொகுப்பு வினைகளில் பியூட்டேன் குழுவிற்கான மூலச் சேர்மமாக இதைப் பயன்படுத்துகிறார்கள். பியூட்டைல் புரோமைடின் பல்வேறு மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-புரோமோபியூட்டேன்[1]
| |
வேறு பெயர்கள்
பியூட்டைல் புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
109-65-9 | |
Beilstein Reference
|
1098260 |
ChEMBL | ChEMBL160949 |
ChemSpider | 7711 |
EC number | 203-691-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | butyl+bromide |
பப்கெம் | 8002 |
வே.ந.வி.ப எண் | EJ6225000 |
| |
UN number | 1126 |
பண்புகள் | |
C4H9Br | |
வாய்ப்பாட்டு எடை | 137.02 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.2676 கி மி.லிட்டர்−1 |
உருகுநிலை | −112.5 °C; −170.4 °F; 160.7 K |
கொதிநிலை | 101.4 முதல் 102.9 °C; 214.4 முதல் 217.1 °F; 374.5 முதல் 376.0 K |
மட. P | 2.828 |
ஆவியமுக்கம் | 5.3 கிலோபாசுக்கல் |
என்றியின் விதி
மாறிலி (kH) |
140 நானோமோல் பாசுக்கல் கி.கி−1 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.439 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−148 கியூ மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
−2.7178–−2.7152 மெகாயூல் மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
327.02 யூ கெ−1 மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 162.2 யூ கெ−1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H315, H319, H335, H411 | |
P210, P261, P273, P305+351+338 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 10 °C (50 °F; 283 K) |
Autoignition
temperature |
265 °C (509 °F; 538 K) |
வெடிபொருள் வரம்புகள் | 2.8–6.6% |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
2.761 கி கி.கி−1 (வாய்வழி, எலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபியூட்டனாலை ஐதரோபுரோமிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் 1-புரோமோபியூட்டேன் உருவாகிறது:[2]
- CH3(CH2)3OH + HBr → CH3(CH2)3Br + H2O.
வினைகள்
தொகுஒரு முதனிலை ஆலோ ஆல்க்கேனாக இருப்பதால் இது SN2 வகை வினைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக 1-புரோமோபியூட்டேனை ஆல்கைலேற்றும் முகவராகப் பயன்படுத்துவார்கள். உலர் ஈதரில் [[[மக்னீசியம்]] உலோகத்துடன் இணையும்போது தொடர்புடைய கிரிக்னார்டு வினைப்பொருளைத் தருகிறது. இத்தைகைய வினைப்பொருள்கள் பல்வேறு தளப்பொருட்களுடன் பியூட்டைல் குழுவைச் சேர்க்கப் பயன்படுகின்றன. என்-பியூட்டைல் இலித்தியத்திற்கு 1-புரோமோபியூட்டேன் ஒரு முன்னோடிச் சேர்மமாகும்:[3]
- 2 Li + C4H9X → C4H9Li + LiX
- இங்கு X = Cl, Br.
இவ்வினைக்காகப் பயன்படுத்தப்படும் இலித்தியம் 1-3% சோடியத்தைக் கொண்டிருக்கும். புரோமோபியூட்டேன் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்பட்டால் விளைபொருள் ஒருபடித்தான கரைசலாக இருக்கும். இதனுடன் கலப்புத் தொகுதியாக LiBr மற்றும் LiBu கலந்திருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "butyl bromide - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 17 June 2012.
- ↑ Oliver Kamm, C. S. Marvel, R. H. Goshorn, Thomas Boyd, And E. F. Degering "Alkyl And Alkylene Bromides" Org. Synth. 1921, volume 1, p. 3. எஆசு:10.15227/orgsyn.001.0003
- ↑ Brandsma, L.; Verkraijsse, H. D. (1987). Preparative Polar Organometallic Chemistry I. Berlin: Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-16916-4.